ஜனாசா ஏர் லைன்ஸ்

அஸ்ஸலாமு அலைக்கும் ...
என் இனிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே !

நம்மை தூக்கிக்...கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் தயாராக உள்ளது!
...................................பயணிகளே
கவனமாக தயாராகுங்கள் !!!
ஏறும் இடம் (Departure ) : துணியா !
இறங்கும் இடம் (Arrival) : கபர்ஸ்தான் !!.
புறப்படும் நேரம் :நம்மை படைத்த
எல்லாம் வல்லாஹ் அல்லாஹ் மட்டுமேஅறிந்தவன்.
கவலைபடவேண்டாம் பயண நேரமும் தேதியும் மாற்றத்திற்கு உள்ளாகாது !.
விமானமும் கேன்சல் ஆகா சான்சே இல்லை!?.
Destination Air போர்ட் :
டெர்மினல் 01 சொர்க்கம் ! /
டெர்மினல் 02 நரகம்!?.
இது ஒரு ட்ரான்சிட் AIR LINE ?
இந்த அதிநவீன ஏர் லயன்சின் திட்டங்களும் விபரங்களும் உலகில் எங்கும் கிடைக்காது ஆனால்??
புனித திருக்குரான் மற்றும்
நபிகளார் முகமது சல்லல்லாஹுவசல்லாம்
அவர்களின் வாழ்வின் நடைமுறையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்த அதிநவீன எரோபிளேனின் பெயர்
பிரிட்டிஷ் அல்லது
கல்ப் அல்லது
எமிரேட்ஸ் அல்லது
ஏர் இந்திய கிடையாது.
ஆனால் இதன் பெயரோ ஏர் ஜனாசா !.
இந்த விமானத்தின் கேப்டன் மலக்குல் மவுத் !!!.
இதனில் உட்காரும் இருக்கை இல்லை,
வசதியாக அவரவர்களின் அமல்களுக்கு (செய்த நன்மைகளுக்கு ஏற்ப ) படுத்துக்கொண்டு மட்டும்தான் பயணிக்கலாம் !
இதில் ரவுண்டு ட்ரிப் கிடையாது ஒன் வே ட்ரிப் மட்டும்தான் !!!.?.
இதில் கண்டிப்பாக உங்கள் உடமைகளை எடுத்து கொண்டு பயணிக்க இயலாது !, ஆனால்
நமது அமல்களை எத்துனை கிலோவாக இருந்தாலும் அனுமதி கிடைக்கும் !!.
அதற்காக ஏர்போர்ட் டாக்ஸ் கட்ட வேண்டிய பிரச்னை இல்லை மகிழ்ச்சிதானே ! ?.
இதிலே செல்வதற்கு கோட் சூட் தேவை இல்லை ஒரு ஆறு முழ வெள்ளை துணி போதும் ? காசு மிச்சம்தானே !!!.
இதில் நீங்கள் பயணிக்க விசாவிற்கோ மற்றும் ஏர் டிக்கெட் எடுப்பதற்கோ சிரமபடதேவை இல்லை!!!! ??? காசும் விரயம் இல்லை!?.
உங்களுடைய விசாவும் பயண சீட்டும் நீங்கள் உங்கள்
தாயின் வயிற்றில் இருக்கும்போதே தயாராக விட்டது. !!!.
மேலும் மகிழ்ச்சிதானே?!
ஆம் உங்கள் சீட் உறுதிசெய்யப்பட்டு விட்டது(confirmed )!.
ரீ கன்பாம் செய்யும் பிரச்னை இருக்காது !!!.
ஆனால் உங்களுடைய சரியான பாஸ் போர்டை வைத்துகொள்ள மறந்தும் இருந்து விடாதீர்கள் ?
உங்களுக்கு பாஸ்போர்ட் செக்கிங் உண்டு !!!.
பாஸ் போர்ட் செக்கரின் பெயர் முன்கர் மற்றும் நகீர் !!!!!!! ???.
வேறு இந்தியன் or அமெரிக்கன் or பிரிட்டிஷ் or எந்தவிதவிதமான பாஸ்போர்ட்டும் செல்லுபடியாகாது ???.
ஆனால் ஒரே ஒரு பாஸ் போர்ட் தான் செல்லு படியாகும் !!!.
ஆம் அந்த பாஸ் போர்டின் பெயர் மவுத் !!!!!!.
அதிலே எல்லாருக்கும் ECR கட்டாயம் ஸ்டாம்ப் உண்டு.
எமிக்ரேசன் கிளியரன்சுக்கு மூன்று கேள்விகளை நமது பாஸ்போர்ட் எமிக்ரேசன் ஆபிசர் மதிற்பிக்குரிய
முன்கர் மற்றும் நகீர் அவர்கள் கேட்பார்கள்.
அதை சரியாக கூறிவிட்டால் உங்கள் ட்ரான்சிட்
லவுஞ்சில் சுகமாக ஓய்வு எடுக்கலாம் எந்த விதமான தொல்லையும் இருக்காது!!!.
ஆனால் சரியாக கூறாவிட்டால் உங்களுக்கு தொல்லை ஆரம்பம் ஆகிவிடும் உங்களின் ட்ரான்சிட் லவுன்ச் நரக லவுன்ச் ஆகிவிடும்???.[அல்லாஹ் பாதுகாப்பான்]
உஷார் !
உஷார் !
உஷார் !
உஷார் !
அந்த மூன்று கேள்விகள் !.

1.உன்னுடைய இறைவன் யார் ?
விடை ........................அல்லாஹ் !!!!!!.

2.உன்னுடைய மார்க்கம் எது ?
விடை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,இஸ்லாம் !!!!!!!!.

3.உன்னுடைய நபி யார் ?
விடை........................ முகமது [ஸல்]] மறந்தும் இறந்து விடாதீர்கள்
?பதிலை சொல்ல வல்ல அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்)
அவர்கள் காட்டித்தந்த வழியில் முஸ்லிமாக வாழ்ந்து மட்டுமே பதிலலிக்க முடியும்.
சுகமான பயணத்திற்கு தயாராக இருப்போம்.
இன்ஷா அல்லாஹ் !.
வஸ்ஸலாம்
நம்முடைய ஏர் ஜனாசா !. பயணம் நல்ல பயணமாக அமைய துவா செய்யவும், &a mp;a mp;n bsp; எங்கள் இறைவா ! உன்மீது ஈமான் கொண்டவர்களை
நல்லோருடன் வாழ வைப்பாயாக !
நல்லோருடன் சேர்ப்பாயாக"
"யா முகல்லி புள் குளூப் ஃசபித் கல்பி அலா தீனுக்க"
இவ்வுலக வாழ்க்கை ..........விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு amp; nbsp; மறுமை
வாழ்வே சிறந்தது. கவனமாக தயாராகுங்கள்

--
14:52 இ(வ் வேதமான) து மனிதர்களுக்கு எத்தி வைத்தலாகும். இதனை கொண்டு அவர்கள் எச்சரிக்கபடுவதற்காகவும் , வணக்கத்திற்கு உரியவன் ஒரே நாயன் (ஆன அல்லாஹ் ) தான் என்று அவர்கள் உறுதியாக அறிந்து கொள்வதற்காகவும், இன்னும் அறிவுடையோர் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் ஆகும்