தவறாக விசாரணைக்கு அழைத்து குணங்குடி ஹனிபா கைது !


 

போலீஸ் நிலையத்தை முற்று கையி...ட்டு ஆர்பாட்டம் !


குணங்குடி ஹனிபா, இவர் த.மு.மு.க., நிறுவனர். சமீபத்தில் சிறை தண்டனை முடித்து விடுதலையானார். கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், விசாரணைக்காக, குணங்குடி ஹனிபாவை காவல் நிலையத்திற்கு நேற்று அழைத்து வந்துள்ளார்.

இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் மற்றும் த.மு.மு.கவினர் கட்சிப் பிரமுகர்கள், கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தை முற்று கையிட்டு, ஆர்பாட்டம் செய்தனர். துணை கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் உதவி ஆணையர் மனோகரன் மற்றும் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் பேச்சு நடத்தி, சமாதானப்படுத்தினர்.
குணங்குடி ஹனிபா தவறுதலாக, விசாரணைக்கு அழைக்கப்பட்டு விட்டார் எனக்கூறினர். இதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து, ஆர்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில், நேற்று சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.சம்பவம் குறித்து போலீஸ்
உதவி ஆணையர் மனோகரன் கூறியதாவது:காவல்நிலையத்தில் ஏற்கனவே இருந்த கண்காணிப்பு பட்டியலில், குணங்குடி ஹனிபா பெயர் இருந்தது. தற்போது அவர் மீது எந்த வழக்கும், விசாரணையும் இல்லை. ஏற்கனவே இருந்த பட்டியலின் படி தவறுதலாக அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விட்டார். பிரச்னை சுமுகமாக பேசி தீர்க்கப்பட்டு விட்டது.இவ்வாறு மனோகரன் கூறினார்.