நன்மையை செய்யுங்கள்

எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பங்கு அவருக்கும் உண்டு. அதுபோல எவரேனும் ஒரு தீமையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதிலிருந்து அவருக்கும் ஒரு பங்கு உண்டு, அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான் (4:85)
இன்னும் நன்மையிலும் இறையச்சத்திலும் நீங்கள் ஒருவருக் கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள், பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக் கொருவர் உதவி செய்ய வேண்டாம். அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகத தண்டிப்பவன். (5:2)
(நபியே) உம் இறைவனின் பாதையில் மக்களை விவேகத்துடனும். அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும் அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கீப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர் வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (16:125)
எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பங்கு அவருக்கும் உண்டு. அதுபோல எவரேனும் ஒரு தீமையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதிலிருந்து அவருக்கும் ஒரு பங்கு உண்டு, அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான் (4:85)
அநீதம் செய்த உனது சகோதரனுக்கும் அல்லது அநீதம் செய்யப்பட்ட உனது சகோதரனுக்கும் நீ உதவி செய் என்று ரஸுல்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! அநீதம் இழைக்கப்பட்டவனுக்கு நான் உதவி செய்வேன். அநீதம் இழைப்பவனுக்கு நான் எப்படி உதவுவது?” என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “அநீதம் செய்யாமல் அவனை நீ தடுப்பது” அது அவனுக்கு உதவி செய்வதாகும், என்று கூறினார்கள். (அனஸ் பின் மாலிக் (ரலி) : புகாரி, திர்மிதி)
நல்ல காரியத்தின் பக்கம் ஒருவர் வழிகாட்டினால் அதைப் பின்பற்றிச் செயல்படுபவர்களின் கூலி போன்றது அவருக்கும் உண்டு என ரஸுல்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூமஸ்வூது உக்பா பின் அம்ர் அல் அன்ஸாரி அல் பத்ரிய்யி(ரலி) : முஸ்லிம்)
நேர்வழியின் பக்கம் ஒருவர் அழைத்தால் அவரைப் பின்பற்றியவர்களின் கூலி போன்றது அவருக்கும் உண்டு. பின்பற்றறுவோரின் கூலி எதுவும் குறைக்கப்படாது. வழிகேட்டிற்கு ஒருவர் அழைத்தால் அதைப் பின்பற்றியவர்களின் பாவம் போன்றது அழைத்தவருக்கும் உண்டு. அவர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறைக்கப்பட மாட்டாது என ரஸு(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரலி) : முஸ்லிம்)
யார் தீமையைச் செய்கிராரோ அவர் தீமையைக் கூலியாகக் கொடுக்கப்படுவார். என்ற வசனம் இறங்கிய பின் அபூபக்கர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் செய்த ஒவ்வொரு காரியத்துக்கும் பிரிதிபலனை அடைவோம் என்ற நிலையில் எவ்வாறு ஈடேற்றம்; பெறுவது என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அபூபக்கரே! அல்லாஹ் உம்மை மன்னிப்பானாக! உமக்கு நோய் வருவதில்லையோ? நீர் கவலைப்படுவதில்லையா? துன்பங்கள் உம்மை அடைவதில்லையா? என்று கேட்டார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் ஆம் என்றனர். “நீங்கள் செய்த தவறுகளின் கூலியில் அதுவும் ஒன்றாகும் (அதாவது மறுமையில் தண்டனை கிடைப்பதற்கு பதிலாக இம்மையிலேயே கிடைத்துவிடும்)”. என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (இப்னுஹிப்பான்)
தான் வாழ் நாளை எப்படிக் கழித்தான்? தான் கற்றதை எந்த அளவுக்கு செயல்படுத்தினான்? தனது செல்வத்தை எப்படி எவ்வழியில் செலவு செய்தான்? தனது உடலை எதில் ஈடுபடுத்தினான்? என்று விசாரிக்கப்படாதவரை எந்த அடியானின் பாதங்களும் நகர முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூபர்ஸா(ரலி) : திர்மிதி)