நீதித்துறையை ஆள்கிறது இந்துத்துவ ஆதிக்க மனச்சாட்சி!

சாட்சியங்களே இல்லாதபோதும், அப்சல் குருவிற்கு மரணதண்டனையை விதித்தது உச்சநீதிமன்றம்.

ஆம், பா.ஜ.க. ஆட்சி காலத்தில், நாடாளுமன்றத் தாக்குதல் நாடகத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பெற்ற அப்சல் குருவை உடனே தூக்கில் போட வேண்டுமாம்.
ஆகஸ்டு, 2005-இல் அப்சல் குருவின் மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதி மன்றம், போலீசு சமர்ப்பித்த அப்சல் குருவின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு சாட்சியமாகவே ஏற்க முடியாது என்பதையும், குற்றவாளிக்கு எதிராக வேறு சாட்சியங்கள் எதுவும் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டது.

எனினும், “மரண தண்டனை விதிக்கப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி திருப்தி அடையும்” என்று கூறி அப்சல் குருவின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

எந்த வாக்குமூலத்தை டெல்லி உயர்நீதி மன்றமும், உச்சநீதி மன்றமும் நிராகரித்தனவோ, அதையே அசைக்கமுடியாத ஆதாரமாகக் காட்டியது, பாரதிய ஜனதா அரசு.

நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் என்ற கபட நாடகத்தை காரணம் காட்டி “அப்சல் குருவை உடனே தூக்கிலிட வேண்டும்” என்று இந்து தேசத்தின் ‘மனச்சாட்சி’யின் பெயரால் மிரட்டுகிறது, பாரதிய ஜனதா.

சாட்சியங்களே இல்லாதபோதும், அப்சல் குருவின் மரணதண்டனையை நியாயப்படுத்த, தேசத்தின் மனோநிலை இது என தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.

இந்திய அரசியல் சட்டம், இந்தியக் குற்றவியில் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம்… எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன – காகிதத்தில்.

இந்திய நீதித்துறையின் இதயத்தை இந்து மனச்சாட்சி தான் வழி நடத்துகிறது.