மிஸ்டு கால்! செல்போன் நிறுவனம் எச்சரிக்கை!

வெளிநாட்டு எண்களில் இருந்து உங்கள் செல்போன்களுக்கு மிஸ்டு கால்' கால்கள் வந்தால், அந்த எண்ணை திருப்பி அழைப்பதில் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, வோடோ போன்' நிறுவனம் அறிவித்து உள்ளது.


தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசங்களில் உள்ள சில செல்போன்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக இதுபோன்ற  மிஸ்டு கால்'கள் வந்ததாகவும், அந்த எண்களுடன் திரும்ப தொடர்பு கொண்ட வாடிக்கையாளர்களுக்கு பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், வோடோ போன் நிறுவன பிரதிநிதி ஒருவர் கூறி இருக்கிறார்.

வாடிக்கையாளர்களிடம் இருந்து இதுபோன்று வந்த புகார்கள் குறித்து அந்த நிறுவனம் விசாரித்து வருவதாக கூறிய அவர், அதுபோன்ற அழைப்புகளை பொருட்படுத்தி மீண்டும் தொடர்பு கொண்டு பேச வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.