இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில், கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 3 ஆக பதிவாகியுள்ளது. இத்தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமத்ரா தீவின் வடக்குப் பகுதியில், கடலில் சுமார் 29 கிலோ மீட்டர் ஆழத்தில், Banda Acheh அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சேதங்கள் குறித்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. உள்ளூர் நேரப்படி அதிகாலை இரண்டரை மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். இரவுப் பொழுதை வெட்டவெளியிலேயே அவர்கள் கழித்தனர். பசிபிக் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.