Welcome Guys

வருகையாளர்கள்

வடக்குமாங்குடி மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜமாஅத்.காம். Powered by Blogger.

புதிய ஆக்கங்கள்.

பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவம்

Post image for பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவம்
அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற)
எதனையும் தான் நாடி யோருக்கு மன்னிப்பான். (4:48,116)

அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதமின் மகனே! என்னிடம் ஆதரவு வைத்து
என்னை நீ அழைத்தால் நீ செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விடுகிறேன், நான்
எதையும் பொருட்படுத்த மாட்டேன். ஆதமுடைய மகனே! நீ செய்த பாவங்கள் வானம் நிரம்ப
இருந்தாலும் பிறகு என்னிடம் நீ மன்னிப்புக் கோரினால் நான் உன்னை மன்னித்து
விடுகிறேன். நான் எதை யும் பொருட்படுத்த மாட்டேன். நீ இப்பூமி நிரம்ப பாவங்கள்
செய்து எனக்கு எதையும் இணை வைக்காமல் என்னை சந்தித்தால் இப்பூமி நிறைய மன்னிப்பை
உனக்கு வழங் குவேன். அறிவிப்பவர்:அனஸ்(ரழி) நூல்:திர்மிதி

சிலர் அல்லாஹ்வின் அருள் குறித்து நம்பிக்கை இழந்து விடுகின்றனர். காரணம் அதிகம்
பாவம் செய்ததனால் அல்லது ஒரு முறையோ பல முறையோ தவ்பா செய்து விட்ட பிறகு மீண்டும்
பாவம் செய்து விடுவதனால் அல்லாஹ் நம்மை மன்னிக்க மாட்டான் என்று கருதிக் கொண்டு
தொடர்ந்து பாவங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். தவ்பா செய்து அல்லாஹ்விடமே திரும்பி
விடு வதை விட்டுவிடுகிறார்கள். இது மாபெரும் தவறாகும். ஏனென்றால் அல்லாஹ்வின் அருள்
குறித்து நம்பிக்கை இழப்பவர்கள் காஃபிர்கள் தாம்.

அல்லாஹ் கூறுகிறான்: தங்களுக்குத் தாங் களே அநீதி இழைத்துவிட்ட எனது அடியார் களே!
அல்லாஹ்வின் அருளில், அன்பில் நம் பிக்கை இழைத்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ்
அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப் பவனும்
கருணையாளனுமாவான். (39:53) மேலும் கூறுகிறான்: அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை
இழப்பவர்கள் அவனை நிராகரித்த மக்களே! (12:87)

அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ் வின் கருணை-அருள் நன்னடத்தையுள்ள மக்க ளுக்கு
அருகில் இருக்கிறது. (7:56)

அடக்கத்தலங்களை வணங்குவது “ஷிர்க்”
இறந்துவிட்ட இறைநேசர்களால் நமது தேவைகளை நிறைவேற்றவோ, சிரமங்களை நீக்கவோ முடியும்
என்று நம்புவது, அவர்களிடம் உதவி கோரி பிரார்த்திப்பது, பாதுகாப்புத் தேடுவது,
அவர்களைப் பரிந்துரைக்கச் சொல்வது, அவர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்பது
போன்ற செயல்கள் அனைத்தும் “ஷிர்க் ஆகும். ஏனென்றால், இவ்வகையான செயல்கள் அனைத்தும்
மார்க்கத்தில் வணக்க வழிபாடுகளாகக் கருதப்படுகின்றன. வணக்க வழிபாடுகளை அல்லாஹ்
தனக்கு மட்டுமே செய்ய வேண்டுமென அல்குர்ஆனின் பல வசனங்களில் தெளிவாகக்
கட்டளையிடுகின்றான். (17:23, 98:5)

அல்லாஹ்வின் தூதர்களையோ, (அவ்லியாக்கள்) இறைநேசர்களையோ சிபாரிசுக்காக அழைப்பதும்
துன்பங்களிலிருந்து விடுதலை பெற அவர்களிடம் பிரார்த்திப்பதும் “ஷிர்க்” ஆகும்.
(27:62, 39:44, 2:255)

சிலர் உட்காரும்போதும், எழும்போதும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து முறையிடுவதை
வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக: யா முஹம்மது, யாமுஹ்யித்தீன்  என்றெல்லாம் அழைக்கிறார்கள். இவ்வாறு
அழைப்பது “ஷிர்க் ஆகும். இதைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான். (7:194, 13:14)

அடக்கத்தலத்தை(கப்ரை) வணங்கும் சிலர் அதைச் சுற்றி வலம் வருகிறார்கள். அங்குள்ள
தூண்களையும், சுவர்களையும் தொட்டுத் தடவுகிறார்கள்; முத்தமிடுகிறார்கள்; அதன் மண்ணை
எடுத்துப் பூசிக் கொள்கிறார்கள்; ஸஜ்தா செய்கிறார்கள், அங்குப் பயத்துடனும்
பணிவுடனும் நிற்கிறார்கள். தங்கள் தேவையை முறையிட்டு, அதை நிறைவேற்றும்படிக்
கோருகிறார்கள்.

சிலர் உடல் நலத்தையும் குழந்தைப் பாக்கியத்தையும் கோருகிறார்கள். சிலர்
“”யாஸய்யிதீ! தொலைவான ஊரிலிருந்து உங்களை நாடி வந்துள்ளேன். என்னை நிராசையாக்கி
விடாதீர்கள்’ என்றெல்லாம் கூறுகிறார்கள்.

இவர்களைக் கண்டித்தே அல்லாஹ் கூறுகிறான். (46:5)
சிலர் கப்ருகளுக்குச் சென்று அங்கு அடங்கி இருப்போருக்காக மொட்டை அடிப்பது.
சிலர் நன்மையை நாடி கப்ருகள், தர்க்காக்களுக்குப் பயணிக்கிறார்கள்.
சிலர் இறை நேசர்கள் இவ்வுலகில் ஆதிக்கம் செலுத்தி, உலகின் இயக்கத்தில் பங்கு
கொள்வதாகவும், அவர்களால் நன்மை, தீமை அளிக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.

இவர்களைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான். (10:107)
அல்லாஹ் அல்லாதவர்களுக்கு நேர்ச்சை செய்வது “ஷிர்க்”
நேர்ச்சை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய வணக்கமாகும். அதை அவனுக்கே செய்ய
வேண்டும்.

சிலர் “கப்ருக்களுக்கு விளக்கேற்றுகிறோம்; பத்தி கொளுத்துகிறோம்; காணிக்கை
செலுத்துகிறோம் என்றெல்லாம் நேர்ச்சை செய்வது “ஷிர்க்

நேர்ச்சையும் வணக்கமே என்பதற்குப் பின் வரும் வசனங்கள் சான்றளிக்கின்றன.
அல்லாஹ் கூறுகின்றான் : (76:7, 2:270)
அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுவது “ஷிர்க்
அல்லாஹ் கூறுகின்றான் (108:2)
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “”அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுபவனை
அல்லாஹ் சபிக்கின்றான்” (முஸ்லிம்)

அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுவது குற்றம்.
அல்லாஹ் அல்லாதவர்களின் பெயரைக் கூறுவது குற்றம்.
சிலர் வீட்டையோ நிலத்தையோ வாங்கினால் அல்லது கிணறு தோண்டுவதாக இருந் தால் அங்குள்ள
ஜின்(பேய், பிசாசு)களின் தீங்குகளை விட்டுப் பாதுகாப்புத் தேடுவதற் காகப் பிராணிகளை
அறுத்துப் பலியிடுகிறார் கள். இதுவும் “ஷிர்க்” ஆகும்.

அல்லாஹ் விலக்கியதை ஆகுமாக்குவது, அல்லாஹ் ஆகுமாக்கியதை விலக்கிக் கொள்வது “ஷிர்க்
; அல்லாஹ் கூறுகின்றான் : 9:31

அதி இப்னு ஹாத்திம்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வசனத்தை ஓதிக்
காட்டியபோது “கிறித்தவர்கள் தங்கள் பாதிரிகளையும், சன்னியாசிகளையும் வணங்கவில்லையே’
என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம்! எனினும் அல்லாஹ் விலக்கியதை
பாதிரிகள் ஆகுமாக்கி வைக்கும்போது அதை மற்றவர்களும் ஆகுமானதாக எண்ணுகிறார்கள்.
அல்லாஹ் ஆகுமாக்கியதை அப்பாதிரிகள் விலக்கும்போது அதை மக்கள், விலக்கப்பட்டதாக
ஏற்றுக் கொள்கிறார்கள். எனவே, இதுதான் கிறித்தவர்கள் தங்களது பாதிரிகளுக்கும்
துறவிகளுக்கும் செய்த (இபாதத்) வணக்கமாகும்” என்று கூறினார்கள். (ஸுனனுத் திர்மிதி)

இந்த 9:31 இறைக் கட்டளை மற்றும் ஹதீஸ் படி அல்லாமா, ஷேக், ஹஜ்ரத் என்று நம்பி அவர்
கள் கூறும் சுய விளக்கங்களை அப்படியே எடுத்து நடப்பதும் “”ஷிர்க்’ ஆகும்.

மேலும் இம்மதகுருமார்கள் குர்ஆன், ஹதீஸ் ஆதாரமில்லாமல் மனம் போன போக்கில் ஹராம்,
ஹலால் என ஃபத்வா கொடுப்பது 42:21 இறைவாக்குப்படி தங்களையே அல்லாஹ்வாக்கிக் கொள்ளும்
மிகப் பெரும் ஷிர்க்் ஆகும்.

“தற்கொலை’ செய்து கொள்வது “ஷிர்க்்’ அல்லாஹ் கூறுகிறான். (4:29, 4:30)
நமக்கு உயிர் கொடுப்பவனும் அவனே, உயிரை எடுப்பவனும் அவனே. எனவே ஒருவன் தற்கொலை
செய்து கொள்வது, அல்லாஹ்விற் குரிய அதிகாரத்தை எடுத்துக் கொள்வது போல் ஆகும். எனவே
“தற்கொலை செய்து கொள்வதும் “இணைவைத்தலை’ சேர்ந்ததேயாகும்.

அல்லாஹ் அனுமதிக்காதவற்றில் பலன்களைத் தேடுவது “ஷிர்க்”
சிலர் தாயத்து, கயிறு, வளையம் போன்றவற்றை ஆபத்து நீக்குவதற்கும் அது வராமல்
தடுத்துக் கொள்வதற்கும் அணிவது “ஷிர்க்்கில்’ உட்பட்டதாகும். அல்லாஹ் கூறுகிறான்.
(12:106, 10:107)

நபி(ஸல்) அவர்கள் ஒருவரை அவர் கையில் பித்தளை வளையம் இருப்பதைக் கண்டு இது என்ன?
என்று வினவினார்கள். அதற்கு அம் மனிதர் வாஹினாவின்(கழுத்தில் கையில் உண்டாகும்
நோயின்) காரணமாக அணிந்துள்ளேன்” என்று பதில் கூறினார். அது சமயம் நபி(ஸல்) அவர்கள்
அவரை நோக்கி “நீர் அதை கழற்றி விடும், இது உமக்கு பலகீனத்தைத் தான் அதிகப்படுத்தும்.
இந் நிலையில் நீர் மரணித்தால் நிச்சயமாக நீர் வெற்றி பெறவே மாட்டீர்” என்று
கூறினார்கள்.

இம்ரான் இப்னு ஹுசைன்(ரழி) நூல் : முஸ்னத், அஹ்மத்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தாவீஸை தொங்கவிட்டா(அணிந்தா)ரோ அவர் “ஷிர்க்’
செய்தவராவார்.” (நூல்: அஹமது)

பகட்டுக்காக வணங்குவது “ஷிர்க்”
நற்செயல்கள் அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி மனத்தூய்மையடன் செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் பகட்டுக்காக (பிறர் பார்த்து புகழ வேண்டுமென்பதற் காக) செய்வது
“ஷிர்க்”ஆகும்.

அல்லாஹ் கூறுகிறான் : (4:142)
நபி(ஸல்) கூறினார்கள்:
பிறர் புகழ்வதற்காக எவன் வணங்குகிறானோ அவனை அல்லாஹ் தண்டிப்பான். பகட்டுக்காக எவன்
வணங்குகிறானோ அவனையும் அல்லாஹ் தண்டிப்பான். (புகாரி, முஸ்லிம்)

ஒருவர் ஒரு நற்செயலை அல்லாஹ்வின் திருப்தியையும் மக்களின் புகழ் மொழிகளையும் நாடிச்
செய்வாரேயானால் அவரின் அந்த நற்செயல் வீணானதே!

அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “”இணை வைப்பவர்களின் இணையை விட்டு
நான் முற்றிலும் தேவையற் றவன். எவன் தனது நற்செயலில் என்னுடன் பிறரை இணைத்துக்
கொண்டானோ அவனை அவனது இணைவைக்கும் செயலுடன் விட்டு விடுகிறேன். (முஸ்லிம்)

ஒருவர் ஒரு நற்செயலை அல்லாஹ்வுக்காகத் தொடங்குகிறார். பிறகு அவரது உள்ளத்தில் பகட்டு
எண்ணம் ஏற்படுகிறது. உடனே அவர்அந்தத் தீய எண்ணத்தை மனதிலிருந்து அகற்றிட முயற்சி
செய்வாரெனில் அவரது நற்செயல் வீணாகிவிடாது.

ஆனால் அந்தத் தவறான எண்ணம் வரும் போது அதைத் தடுப்பதற்கு முயற்சி செய்யாமலிருந்தால்
அந்த நற்செயல் வீணாகிவிடும்.

சகுனம் பார்ப்பது “ஷிர்க்”
அறியாமைக்கால அரபியர்கள் ஏதேனும் ஒரு செயலைச் செய்ய நாடினால் ஒரு பறவையை பிடித்து
அதைப் பறக்க விடுவார்கள். அது வலப் பக்கமாகப் பறந்தால் அதை நல்ல சகுனமாக நம்பி
அந்தக் காரியத்தைச் செய்வார்கள். இடப் பக்கம் பறந்தால் அதைத் துர்ச்சகுணம் என நம்பி
அக்காரியத்தைத் தவிர்த்து விடுவார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: (7:131)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சகுனம் பார்ப்பது “ஷிர்க்’ ஆகும். (அஹ்மது, திர்மிதி)
சகுனம் பார்ப்பவனும் யாருக்காக சகுனம் பார்க்கப்படுகிறதோ அவனும், சோதிடம்
பார்ப்பவனும் யாருக்காகச் சோதிடம் பார்க்கப்படுகிறதோ அவனும் சூனியம் செய்பவனும் எவன்
சார்பாக சூனியம் செய்யப்படுகிறதோ அவனும் நம்மைச் சேர்ந்தவன் அல்லன்” (திர்மிதி)

“”துர்ச்சகுனம் ஒருவனை அவனது காரியத்தை விட்டு தடுத்து விட்டால் அவன் இணை வைத்து
விட்டான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அதனைக் கேட்ட) தோழர்கள், “”அல்லாஹ்வின்
தூதரே! அதற்கான பரிகாரம் என்ன?” என்று வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள்

அல்லாஹும்ம லா கைர இல்லா கைருக; வலா தய்ர இல்லா தய்ருக, வலா இலாஹ ஙைருக்க”
(அல்லாஹ்வே! உனது நன்மையைத் தவிர வேறு எந்த நன்மையும் இல்லை, உனது சகுன மின்றி
வேறந்தச் சகுனமும் இல்லை; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரு மில்லை) என்று
சொல்லி விடும்” எனக் கூறி னார்கள் (முஸ்னது அஹ்மது)

அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வது “ஷிர்க்”
அல்லாஹ் தன்னுடைய படைப்பினங்களில் எதன் மீதும் சத்தியம் செய்வான். ஆனால், நாம்
அல்லாஹ்வைத் தவிர வேறு எதன்மீதும் சத்தியம் செய்வதை அல்லாஹ் தடை செய்துள்ளான்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள்
உங்கள் மூதாதையர் மீது சத்தியம் செய்வதைத் தடை செய்கிறான். எவராவது சத்தியம் செய்வ
தாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி
இருக்கட்டும்.(புகாரி)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “”அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தவன்
நிச்ச யமாக ஷிர்க்” இணை வைத்து விட்டான். (முஸ்னது அஹ்மது)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: லாத், உஸ்ஸாவின் மீது சத்தியம் செய்தவர் லா இலாஹ
இல்லல்லாஹ்’ என்று கூறிவிடட்டும். (புகாரி)

ஷிர்க்கை ஏற்படுத்தும் சில வாக்கியங்கள்.
அல்லாஹ்வாலும் உங்களாலும் இது எனக்குக் கிடைத்தது,
காலத்தைக் குறை கூறிப் பேசுவதும் குற்றம்.
அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர் கள்
கூறினார்கள், “”ஆதமின் மகன் எனக்கு நோவினை தருகிறான். அவன் காலத்தைத் திட்டுகிறான்.
நானே காலத்தைப் படைத்தவன்; எனது கையில்தான் அனைத்தின் அதிகாரமும் இருக்கிறது. நானே
இரவையும் பகலையும் மாறி வரச் செய்கிறேன்”.

உதாரணமாக: இது என் கெட்ட காலம்
வரம்பு மீறிப் புகழாதீர்.
சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ”அல்லா ஹ்வின் தூதரே! எங்களில் மிகச் சிறந்தவரே!
எங்களில் சிறந்தவரின் மகனாரே! எங்களின் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எனக்
கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் “”மக்களே உங்களின் சொற்களைக் கூறுங்கள்.
ஆனால் ஷைத்தானின் வலையில் விழுந்து விடாதீர்கள். நான் முஹம்மது, அல்லாஹ்வின் அடிமை.
அவனின் தூதர்; எனக்குக் கொடுக்கப்பட்ட மதிப்பை விட என்னை உயர்த்துவதை நான்
விரும்பவில்லை” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல்: நஸாயீ
மர்யம்(அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்களை கிறித்தவர்கள் மிகப்படுத்திப்
புகழ்வதைப் போல் என்னை நீங்களும் மிகப்படுத்திப் புகழாதீர்கள்.

ஆதாரம்:புகாரீ, திர்மிதி.
நானொரு அடியானே! (என்னை) அல்லாஹ் வின் அடிமை என்றும், அவனின் தூதர் என்றும்
கூறுங்கள். நீங்கள் மிகைப்படுத்துவதை அஞ்சி (எச்சரிக்கையாக இருந்து) கொள்ளுங்கள்.
இப்படி மிகைப்படுத்தியது தான் உங்களுக்கு முன் சென்றவர்களை அழித்தது” என்று நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர்(ரழி) நூல்:ரஜீன்
ஆளுமையில் இணைவைத்தல்
ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருப்பதாக நம்புவது, அல்லாஹ்வுக்குப் பெற்றோர், கணவன்,
மனைவி, மக்கள் இருப்பதாக நம்புவது “ஷிர்க்்’ ஆகும். அல்லாஹ் கூறுகின்றான்:
(12:39,40, 112:3)

மனிதர்கள் அல்லது மிருகங்களின் உருவத் திலோ அல்லது ஏனையபடைப்புகளின் வடிவத் திலோ
இறைவன் இவ்வுலகில் தோன்றுவதாக (அவதாரம் எடுப்பதாக) நம்புவது “ஷிர்க்”

அல்லாஹ் கூறுகின்றான்: (20:5, 32:4)
அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்திருக்கின்றான். ஆனால் ஒவ்வொரு காரியத்தையும் நன்கறிந்த
வனாகயிருக்கிறான்.

அல்லாஹ் கூறுகின்றான்: 32:5, 6:56, 6:103)
போன்ற குர்ஆன் வசனமும் சான்று. பூமியில் நடப்பவற்றை அறிவதற்கு அவன் அவதாரம் எடுக்க
வேண்டிய அவசியமும் இல்லை, தேவை யுமில்லை. அதையே குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
(6:80)

இறைவன் தூணிலும் துரும்பிலும் இருக்கிறான் என்ற கொள்கை இங்கு செல்லாது; ஏனென்றால்
இறைவன், யாவற்றையும் படைத்து பின் “அர்ஷின்’ மீது அமைந்து விட்டதாக குர்ஆன்
கூறுகிறது. ஆனால் அவனின் சக்தி அனைத்திலும் பரவி, ஊடுருவிச் செல்லுகிறது.

அல்லாஹ் கூறுகிறான்: 32:6
எனவே இறைவன் (எதன் வடிவிலும்) அவதாரம் எடுத்து பூமியில் தோன்ற வேண்டுமென்பதற்கு
அவசியமில்லை. அவ்வாறு நடப்பதும் கிடையாது.

தன்மைகளில் இணை வைத்தல்
இறைவனுக்கு எவ்விதம் யாருடைய துணையுமின்றி அனைத்தையும், அறிகின்ற, பார்க்கின்ற,
கேட்கின்ற ஆற்றல் உண்டோ, அத்தகைய ஆற்றல்(தன்மை) மற்றவர்களுக்கும் உண்டு என நம்புவது
“இணை வைத்தல்’ ஆகும்.

அல்லாஹ் கூறுகின்றான். 27:65, 32:6, 6:59, 6:73, 11:123, 20:7, 6:50, 3:44, 39:46
போன்ற பல குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் அறிகின்ற சக்தி இறைவனுக்கு மட்டுமே உரியது
என்பதற்கு சான்று பகர்கின்றன.

அல்லாஹ் கூறுகின்றான். 20:46, 42:11
எனவே இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அனைத்தையும் அறிகின்ற, பார்க்கின்ற, கேட் கின்ற
ஆற்றல் கிடையாது. உண்டு என நினைப் பதும், நம்புவதும் “ஷிர்க்’ ஆகும்.

M.S அஹமது அலி ஆவடி, சென்னை
04:13 | 0 comments | Read More

வாதத்திறமையால் வாயை அடைத்துவிடலாம் ஆனால்……


Post image for வாதத்திறமையால் வாயை அடைத்துவிடலாம் ஆனால்……
நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?
அன்பார்ந்த சகோதர, சகோதரரிகளே இந்த கேள்வி கேட்கப்டாத குடும்பங்கள் உள்ளதா? உங்கள் அன்பிற்கினியவர்கள் உங்களை நோக்கி இந்த கேள்வியை கேட்டுவிட்டால் எப்படி இருக்கும் என்பதை ஒரு கணம் யோசித்துப்பாருங்கள்.
இந்த கேள்வியை கேட்டுவிட்டால் ஆத்திரப்படாதவர்கள் எவரேனும் இருப்பார்களா? என்னைப் பார்த்து இக்கேள்வியை கேட்கிறாயே உனக்கு அவ்வளவு துணிச்சலா? என்று பதில் வரும் உடனே என் இஷ்டம் எனக்கு என்ன பிடிக்குதோ அதைத்தான் செய்வேன் என்று சாக்கு போக்கு கூறி பிரச்சினையிலிருந்து தப்பித்து இடத்தை காலி செய்துவிடுவார்கள்.
சரி இந்த கேள்வியை இவர்கள் கேட்டால் எப்படி இருக்கும்! சுயபரிசோதனை செய்துப் பார்ப்போமா?
உங்களை பெற்ற தாய் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறாள்
தாய்
ஏன்டா! மகனே நான் 10 மாதம் உன்னை வயிற்றில் சுமந்து பாலுட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்த்தேனே தனிக்குடுத்தம் போன நீ வாரம் ஒரு முறை கூட வந்து என்னை பார்ப்பதில்லையே ஏன்டா? தாய் ஸ்தானத்திலிருந்து நான் உனக்கு எதில் குறை வைத்தேன்? சொல்லடா என் மகனே?
மகன்
சரி விடும்மா? ஏதோ ஊர் உலகத்துல எவனும் செய்யததா நான் செய்துட்டேனா? இதைப் போய் பெரிசு பண்ணி பேசுறியே உனக்கு அறிவு இருக்கா? எனக்கு பிசினஸ்-ல ஆயிரத்து எட்டு பிரச்சினை சரியா கவனிக்க முடியல அதனால உன்னை வாரம் ஒரு முறை கூட வந்து பார்க்க முடியல? இப்ப என்னாங்கறா? உன்னை பார்க்காதது ஒரு குத்தமா? அப்போ என்னை உன் பிள்ளை இல்லைன்னு சொல்லிடுவியா? என்ன!
உங்களுடைய வாதத்திறமையால் உங்களை பெற்ற தாயின் வாயை அடைத்துவிட்டீர்கள்! அந்த இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்!
உங்கள் தந்தை இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறார்!
தந்தை

ஏன்டா! மகனே உன்னுடைய 5 வயசுல உனக்கு பொம்மை கார் வாங்கி கொடுத்தேன், 10 வயசுல உனக்கு சின்ன சைக்கிள் வாங்கி கொடுத்தேன்! 20 வயசுல உனக்கு மோட்டார் பைக் வாங்கி கொடுத்தேன்! 25 வயசுல உனக்கு கல்யாணம் பண்ணி அழகு பார்த்தேன் ஆனா நீ சம்பாதித்தவுடன் ஒரு சல்லி காசு கூட கிழவனான எனக்கு கொடுப்பதில்லையே! தந்தை ஸ்தானத்திலிருந்து நான் உனக்கு எதில் குறை வைத்தேன்? சொல்லடா என் மகனே? இந்த வயசான காலத்துல நான் யாருக்கிட்ட டா போய் கை ஏந்துவேன்! ஏன்னிடம் மருந்துவாங்க காசு இல்லை ஒரு 100 ரூபாய் இருந்தா கொடுடா?
மகன்
என்னப்பா? உனக்கு அறிவு இருக்கா! சின்ன வயசுல நான் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்ததை போய் இப்ப சொல்லிக் காட்டுறியே? நீ எல்லாம் ஒரு அப்பனா? இது உனக்கு நல்லா இருக்கா? வயசாகி போனதால புத்தி கெட்டுப்போச்சா! இப்ப என்ன உனக்கு காசுதான வேணும் இந்த 5 ரூபாயை வெச்சுகிட்டு டீ, பன்னு சாப்பிடு இதுக்கப்பறம் காசு கீசுன்னு எங்கிட்ட வந்துடாத! மருந்துவாங்க காசு வேணும்னா உன்னுடைய இன்னொரு மகனிடம் போய் கேள்! என்ன தொல்லை பண்ணாத!
உங்களுடைய வாதத்திறமையால் உங்கள் தந்தையாரை வாயடைக்க செய்தீர்கள்! நீங்களோ அவரை சமாளித்துவிட்டீர்கள்! அந்த இடத்தில் வெற்றி பெற்றுவிட்டீர்கள்!
உங்கள் மனைவி இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறார்!
மனைவி
என்னங்க! நமக்கு திருமணம் ஆகி 10 வருடங்களாகி விட்டது! அழகான 2 குழந்தைகளும் 2 பிளாட்டு நிலமும், கை நிறைய வருமானம் அபரிமிதமாக இருக்கு! இத்தனை காலம் என்னோடு அழகா வாழ்ந்து குடும்பம் நடத்திய நீங்கள் இப்போது என்ன பிடிக்கவில்லை என்று கூறுகிறீர்களே மனைவி ஸ்தானத்திலிருந்து நான் உங்களுக்கு எதில் குறை வைத்தேன்? சொல்லுங்கள்? ஏன் இன்னொரு கல்யாணம் செய்ய ஆசைப்படுறீங்க நானும் என் குழந்தைகளும் உங்களை விட்டா எங்க போவோம்?
கணவன்
என்ன ரொம்பத்தான் ஓவரா பேசுரே! பொம்பளைன்னு பார்க்கறேன் இல்லன்னா நடக்கறதே வேற? கணவன் என்கிற மரியாதை போயிடுச்சா? இந்த பேச்சே போதுமே உன்ன உங்க அம்மா வீட்டுக்கு அனுப்ப!
எனக்கு வயசு இருக்கு, வருமானமும் இருக்கு இன்னொரு கல்யாணம் என்ன 4 கல்யாணம் கூட செய்ய தெம்பு இருக்கு உனக்கு விருப்ப மிருந்தா………… ……… ……… ……… …????(சண்டை விபரீதமாக சென்றுக்கொண்டே இருக்கும்)
உங்களுடைய வாதத்திறமையால் உங்கள் அருமை மனைவியின் வாயை அடைத்துவிட்டீர்கள்!! அந்த இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்!
“மஹ்ஷரில் உங்கள் இறைவன் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறான் என்று வைத்துக்கொள்வோம்!”
அல்லாஹ்
ஆதமின் சந்ததியைச் சேர்ந்தவனே! என் அடிமையே! நான் உனக்கு
· நல்ல பெற்றோரை கொடுத்தேன்!
· நல்ல மனைவி மக்களை கொடுத்தேன்!
· அறிவுத் திறமையும் செல்வத்தையும் கொடுத்தேன்!
· சொத்துக்கள், சுகங்களை கொடுத்தேன்!
· கவுரவமான வாழக்கையை கொடுத்தேன்!
· உயிர்வாழ அனைத்தும் இலவசமாக கொடுத்தேன்!
· நேர்வழிக்கு அருள்மறை குர்ஆனையும் கண்ணியமாக வாழ்க்கை முறைக்காக நபிமார்களையும் அணுப்பினேன்
முஸ்லிமாக வாழந்து, 5 வேளை தொழுகைகளை பேணி, ஜகாத் கொடுத்து, ஹஜ் செய்து உலகில் வாழந்து வந்ந நீ எதற்காக எனக்கு இணை வைத்தாய்?
படைத்த இறைவனாகிய நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?
நீங்கள்
?……………………………………
அன்புச் சகோதர, சகோதரிகளே வாழந்து விட்டால் போதுமா? நாலு காசு சம்பாதித்தால் போதுமா? சொத்து சுகங்களை ஆண்டு அனுபவித்துவிட்டால் போதுமா?
இந்த உலகில் வாழும்போது நம் குடும்பத்தினரை நிம்மதியிழக்கச் செய்து நம் சுகத்தை காண்கிறோம். அதே நேரம் நம் படைத்த இறைவனுக்கு இணைவைத்துவிட்டு மறுமையில் நாம் நரகத்தை தங்குமிடமாக எண்ணி நிம்மதியிழந்து தவிப்போமே இந்த கைசேதம் தேவையா? சகோதர சகோதரிகளே
நம்முடைய அராஜக குணத்தால்
· பெற்ற தாயின் வாயை அடைத்துவிடலாம்,
· வளர்த்த தந்தையின் வாயை அடைத்துவிடலாம்
· கட்டிய மனைவியின் வாயை அடைத்துவிடலாம்
· ஊர் உலகத்தின் வாய்களை அடைத்துவிடலாம்
மேற்கண்ட இவர்களின் வாய்களை அடைத்துவிட்டு அவர்களிடம் வெற்றி கொள்ளும் நீங்கள் அல்லாஹ்விடம் வெற்றி கொள்ள முடியுமா?
வாழ்க்கை ஒரு முறைதான் எனவே அந்த வாழ்க்கை முறையை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய விதத்தில் இருந்தால் நமக்கு இலாபமா? நட்டமா?
இதோ அருள்மறை குர்ஆன் மற்றும் நபிமொழிகள்!
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்” (அல்குர்ஆன் 4:116)
‘அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான்”
(திருக்குர்ஆன், 5:72)
நபிமொழி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
இறைவனுக்கு இணை கற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், ‘பொய் கூறுவதும்’ அல்லது ‘பொய்ச் சாட்சியம் சொல்வதும்’ பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும். இதன் அறிவிப்பாளரான அனஸ்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் ‘பெரும் பாவங்கள்’ என்று வந்துள்ளது.
(புகாரி 6871)
அன்புச் சகோதர சகோதரிகளே!
மனிதன் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிப்பதில்லை! இணைவைப்பதை அல்லாஹ் மன்னிப்பதில்லை!

சிந்திப்பீர்! செயல்படுவீர்!  அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
04:10 | 0 comments | Read More

அதிசய ஆட்டுக்குட்டியும்! நாம் பெற வேண்டிய படிப்பினையும்!!!

தாராபுரத்தில் ஒரே பரபரப்பு !!
            02.01.2012 அன்று தாராபுரம் உப்புத்துறைபாளையத்தில், இறைச்சிக்காக அறுக்க கொண்டு வநத ஆட்டினுடைய வயிற்றில் மனித பெண் வடிவிலான ஆட்டுக்குட்டி பிறந்தது.  
         இந்த அதிசயம் எப்படி நடந்தது என்று தாராபுரத்தில் உள்ள அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கி இருக்கின்றனர். ஆனால் இதை பார்க்க கூடிய முஸ்லீம்கள் இதிலிருந்து படிப்பினைதான் பெற வேண்டும்.
            ஆம் அது என்னவென்றால் மறுமை நாளினுடைய அடையாளமாக ஒரு அதிசய பிராணி ஒன்று தோன்றும் அது மனிதர்கள் செய்து  கொண்டிருப்பவை பற்றி பேசும் என்று இறைவன் தனது திருமறை குர்ஆனில்
          அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஓர் உயிரினதை வெளிப்படுத்துவோம் .  நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது  பற்றி அது பேசும்((27:82
           என்று கூறுகிறான் என்னதான் இறைவன் மீது ஒரு முஸ்லீம் நம்பிக்கை வைத்திருந்தாலும் பிராணி பேசும் என்பதை நூறு சதவிதம் ஏற்றும் ஏற்காதவர்களாகதான் உள்ளனர் அதற்கு ஒரு உதாரணம் தான் இந்த ஆட்டுக்குட்டி.  
          ஆட்டினுடைய வயற்றில் மனித பெண் வடிவ ஆட்டுக்குட்டியை பிறக்க வைத்த இறைவன் நிச்சயமாக ஒரு அதிசய பிராணியை வெளிப்படுத்தி பேச வைப்பான் என்று நம்புவதே ஒரு முஸ்லீமின் பண்பாக இருக்க வேண்டும்.                     
04:08 | 0 comments | Read More

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில், கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 3 ஆக பதிவாகியுள்ளது. இத்தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமத்ரா தீவின் வடக்குப் பகுதியில், கடலில் சுமார் 29 கிலோ மீட்டர் ஆழத்தில், Banda Acheh அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சேதங்கள் குறித்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. உள்ளூர் நேரப்படி அதிகாலை இரண்டரை மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். இரவுப் பொழுதை வெட்டவெளியிலேயே அவர்கள் கழித்தனர். பசிபிக் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
20:05 | 0 comments | Read More

சொந்தமாக ஒரு வீடு என்பது பலரது கனவாக இருந்தாலும், இன்றுள்ள நிலையில் அது சாத்தியமா என்ற கேள்வி எழாமல் இல்லை.


ஆனால், வருமான வரி பிடித்தம் எனச் சொல்லி எல்லாரையும் நிதியாண்டு இறுதியில் வறுத்தெடுக்க காரணமாக இருக்கும் அதே வருமான வரித்துறைதான் சொந்த வீட்டுக்கான விஷயத்திலும் முன்முயற்சியை எடுத்துள்ளது.
இதற்கான வரைவு திட்டம் 2011-12ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, AFFORDABLE HOUSING என குறிப்பிடப்படும் கட்டுபடியாகக் கூடிய விலையிலான குடியிருப்பு கட்டும் தனி நபர் மற்றும் நிறுவனங்கள், இதற்கான மூலதனச் செலவுகளுக்கு 100 சதவீத வரிச் சலுகை பெறலாம் என கூறப்பட்டிருந்தது. இந்த சலுகை திட்டத்தை 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்த இந்திய வருமான வரித் துறை முடிவு செய்துள்ளது. எனவே, 2012-13ம் நிதியாண்டில் இந்த சலுகை பெற கதவுகள் திறக்கின்றன. எனினும், இதற்கு சில தகுதி வரையறைகளை இத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்த குடியிருப்பு திட்டம் குறைந்தது 1 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் தொடங்கப்பட வேண்டும். அதோடு, இந்த திட்டம் மூலம் கட்டப்படும் மொத்த குடியிருப்புகளில் 30 சதவீதம் நடுத்தர வருவாய் தரப்பு… 60 சதவீதம் குறைந்த வருவாய் கொண்ட தரப்பு மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த அடித்தட்டு மக்களின் தேவைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதி 10 சதவீத்தை மட்டும் அந்த கட்டுனரோ, அல்லது நிறுவனமோ அவரது விருப்பம் போல அமைத்துக் கொள்ளலாம். இதனால், வருமான வரிச் சலுகை பெற வேண்டியாவது சில நிறுவனங்கள் இந்த மாதிரி திட்டங்களைத் தொடங்க முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இச்சலுகை பெற தகுதியான முதலீடு என்பது – நிலத்தில்… அந்நிறுவன நற்பெயருக்கு… பிற நிதி சார்ந்த திட்டங்களில் செய்யப்பட்டதை தவிர்த்த, மற்ற தொகையை மட்டுமே கருத்தில் கொள்ளும் என தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
20:04 | 0 comments | Read More

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி ஆலோசனை

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுக்களை கொண்டு வந்து புழக்கத்தில் விட்ட 3 பேரை மத்திய புலனாய்வு அமைப்பினர் சென்னையில் கைது செய்துள்ளனர்.
சென்னையில் கைது செய்யப்பட்ட கள்ளநோட்டு கும்பலின் பின்னணியில் இருந்து பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. செயற்பட்டிருப்பது விசாரணை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த 3 பேரும் கள்ள நோட்டு மாற்றும் கும்பலின் புரோக்கர்களாக செயற்பட்டவர்கள். இவர்களிடம் இருந்து சிறிய அளவிலான கள்ள நோட்டுகளே கைப்பற்றப்பட்டுள்ளன.
எனவே கள்ள நோட்டுகளை கண்டறிந்து தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கள்ள நோட்டுகளை கண்டறியும் முறையை கற்றுத் தரவும் இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இதற்காக தொலைக்காட்சிகள், இணையதளங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் கள்ளநோட்டுகளை கண்டறியும், பயிற்சி பிரிவுகளை பல இடங்களுக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளது.
கள்ளநோட்டை கண்டுபிடிக்கும் முறை பற்றி பயிற்சி அளிக்கும் பிரிவு, தற்போது சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி வளாகத்தில் மட்டுமே செயற்படுகிறது. இங்கு வங்கி ஊழியர்களுக்கும், அமலாக்க பிரிவினருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று 32 மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும், கள்ள நோட்டு கண்டறிதல் பற்றி இங்கு பயிற்சி கொடுக்கப்பட்டது.
இதனால் டாஸ்மாக்கில் மாற்றப்படும் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டில்(2011) ஐந்து மாதங்களில் மட்டும் 4,35, 607 போலி கரன்சி நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதே ஆண்டில் ஏப்ரல் முதல் செப்ரெம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 2,64,282 கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கள்ள நோட்டு புழக்கம் ஐந்து மாதங்களில் இரு மடங்குகளாக அதிகரித்து இருப்பதையே இது காட்டுகிறது.
போலி ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவும், சுலபமாக கண்டறியவும், அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
தற்போது நாட்டில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள பல்வேறு மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 64,577 மில்லியன் ஆகும். இதன் மதிப்பு ரூ. 9,35,856 கோடியாகும்.
இது 2011 மார்ச் மாதம் வரையிலான கணக்கு ஆகும். கடந்த ஆண்டில் மட்டும் ஒரு மில்லியன் கரன்சி நோட்டுகளுக்கு 6.74 என்ற அளவில் புழக்கத்தில் இருந்து கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன.
கடந்த ஆண்டில் பிடிபட்ட கள்ளநோட்டுகளில் 90 சதவிகிதம் நோட்டுகள் வங்கி கிளைகளில் செலுத்தப்பட்டு கண்டறியப்பட்டவை ஆகும். ரூ.1000, ரூ.500 மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த உடன் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி விட்டது.
பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டு கைப்பற்றப்பட்ட நோட்டுகள் அனைத்தும் ரூ.1000 மற்றும் ரூ.500 முக மதிப்பை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே ரூ.100 மற்றும் அதற்கு மேல் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை அதற்கான இயந்திரங்கள் மூலம் சோதித்து ஒரிஜினல் என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
மேலும் பேப்பர் பயன்பாட்டை குறைக்கவும், கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிடவும் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.
03:20 | 0 comments | Read More

பாக்.கொடியேற்றிய கயவர்களை கண்டுபிடித்த Blogger..!

ஒரு நிறுவனத்தில் Appreciation Letters-ஐ விட Warning Letters அதிகரித்து விட்டால், அது அந்த நிறுவனத்துக்கு நல்லதல்ல. அதேபோல, ஒரு சமூகத்தில் பரஸ்பர பாராட்டுக்களும், நன்றியரிதல்களும் குறைந்து கண்டன குரல்களே மிகுதியாயின் அது அமைதி குலைந்த சமூகமாகி விடும். எனவே, இங்கே சிலரை அவர்களின் நேரிய நற்செயல்களுக்காக நன்றியோடு பாராட்ட இருக்கிறோம் சகோ..!

புத்தாண்டு தினத்தன்று கர்நாடகா-பீஜப்பூர் மாவட்டம், சிந்தகி என்ற ஊரில் அரசு வட்டாட்சியார் அலுவலகம் உட்பட பல அலுவலகங்கள் உள்ள ஒரு வளாகத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டு பறந்து கொண்டிருக்க... உடனே, அந்த ஊரில் பதட்டம்..!

பிஜேபி, ஸ்ரீ ராம் சேனை உட்பட்ட தடை செய்யப்படவேண்டிய அனைத்து RSS-சங்பரிவாரங்களின் ஆதரவோடு... கடைய(உ)டைப்பு, கட்டுப்பாடற்ற ஊர்வலம், விஷமகோஷம், வன்முறை முழக்கம், வெறியாட்டம், தீவைத்தல், வாகனங்களை சேதப்படுத்துதல், சாலை மறியல், தர்ணா, போக்குவரத்து நிறுத்தம், பள்ளி கல்லூரி கட்டாய விடுமுறை, அலுவலகம் மூடல், அப்பாவி மக்கள் அவதியுறல், மாமூல் வாழ்க்கை பாதிப்பு, கலவரம், லத்தி சார்ஜ், பந்த்... எல்லாமே ஜெகஜ்ஜோதியாக அடுத்தடுத்து திட்டமிட்டபடி மக்கள் விரோத செயல்கள் அரங்கேறின. பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாக வழக்கம்போலவே முஸ்லிம்கள் இவர்களால் 'சந்தேகிக்கப்பட்டு'(?) தூற்றப்பட்டனர். உடனே கொடி ஏற்றியவர்களை கைது செய்ய கலவரக்காரர்களால் காவல் துறையினரிடம் கோரப்பட்டது..!!!

ஆனால், கயவர்களை கண்டுபிடித்து... கைது செய்தவுடன், அவர்களிடம் பேச்சு மூச்சை காணவில்லை..! அதுவரை அப்படி குதித்தவர்கள் அடங்கிப்போய் ஓடி ஒளிந்து உட்கார்ந்து விட்டார்கள். அது மட்டுமல்ல, "நான் இல்லை நீதான்..." "...இல்லை ...இல்லை ...நீ தான்..!" "உனக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லையே..!" "நீ யார்..?" என்று நேற்றுவரை ஒன்றாக இருந்து கத்தியவர்கள்... தமக்குள் இன்று சண்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்..!

'இஸ்மாயில்' என்று கையில் பச்சை குத்தி காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே காலத்தில் இருந்தே... இப்படி முஸ்லிம்கள் மீது பழிபோட்டு அப்பாவி மக்களிடம் ஹிந்துத்வா மதவெறியூட்டி... கொலைக்களம் காணத்துடிக்கும் ஈவிரக்கமற்ற இந்த பயங்கரவாதிகளுக்கு கண்டனப்பதிவு போடுவதை விட, இந்த உண்மையை மூன்றே நாளில் கண்டுபிடித்தோரை பாராட்டி பதிவுபோடுவதே இப்போது மிக முக்கியம்..!

இதற்கு முன் இரண்டு பிளாஷ்பேக்ஸ் பார்த்து விடுவோம்..!
 பிளாஷ்பேக் -1 : P.கண்ணப்பன்..!
தென்காசி RSS அலுவலக குண்டு வெடிப்பு தொடர்பாக உடனடியாக சந்தேகத்தின் பேரில், தலைப்புச் செய்தியில் "இஸ்லாமிய(?) பயங்கரவாதிகள்" கைது செய்யப் பட்டிருக்க, அந்த வழக்கை தன் கையில் எடுத்து... திறம்பட துப்பறிந்து... "தங்கள் அலுவலகத்தில் தாங்களே வெடி குண்டு வைத்துக் கொண்டார்கள், இந்த RSS பயங்கரவாதிகள்" என்ற உண்மையை வெளிக்கொணர்ந்த அன்றைய திருநெல்வேலி DIG (பின்னர், மதுரையில் IG) P.கண்ணப்பன் IPS மற்றும் அவருடைய டீமை  தமிழ் முஸ்லிம்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. "முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள்" என்ற புனையப்பட்ட அவப்பெயரை முதலில் நீக்கியவர். ஆனாலும், இந்திய ஊடகங்கள் இதை துணுக்குச் செய்தியாகக்கூட  பகிராமல் மறைத்தன.!
 பிளாஷ்பேக் -2 : ஹேமந்த் கார்கரே..! 
இன்றைய தேதியில் இந்தியாவில் உள்ள எந்த ஒரு முஸ்லிமும் இவரை தெரியாமலோ, தெரிந்தோர் மறந்து போயிருக்கவோ வாய்ப்பே இல்லை..! நான் உட்பட இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தலை நிமிர்ந்து தனக்கான குடி யுரிமையுடன் ஜம்பமாக பயங்கரவாதத்தை எதிர்த்து அவைகளுக்கு தடைகோரி பதிவில் எழுத- பொது வெளியில்  பேச- முடிகிறது என்றால்... பற்பல குண்டுவெடிப்பு வழக்கில் ஏற்கனவே "இஸ்லாமிய(?) பயங்கரவாதிகள்" சந்தேகத்தின் பேரில் தலைப்புச் செய்தியில் கைது செய்யப் பட்டிருந்தும், அனுதினமும் வந்த காவிகளின் கொலை மிரட்டல்களை பொருட் படுத்தாது அந்த வழக்குகளில் உண்மையை வெளிக் கொணர்ந்த இவரின் நேர்மையான உயிர்க்கு அஞ்சா உழைப்பே காரணம். இவரை நம் நாட்டிற்கு சரியான நேரத்தில் ஈந்த இறைவனுக்கே புகழனைத்தும்.
இவர்கள் போல இன்னும் நிறைய நேர்மையான அதிகாரிகளை நம் நாட்டிற்கு தரச்சொல்லி, இத்தளத்தில் முன்பொரு பதிவில் இறைவனிடம் நாம் பிரார்த்தித்து உள்ளோம் சகோ..! இவர்கள் போல கர்நாடகா-பீஜப்பூர் சம்பவத்தில் இன்னும் சிலரை காண்கிறோம்.
.
இந்த பாகிஸ்தானிய கொடியேற்று சம்பவம் நடந்த நான்காவது நாள் அதிகாலை (வெறும் மூனே நாள்தான் துப்பு துலக்கல்) "ஹிந்துத்துவ-RSS-சங்பரிவார கும்பலில் ஒன்றான 'ஸ்ரீ ராம் சேனா' வினர்தான் குற்றவாளிகள்" என்று கண்டு பிடிக்கப்பட்டது... நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சாதனை அல்லவா..?!

இதை நிகழ்த்தியவர்கள் பற்றி... இவர்களை ஃபோகஸ் பண்ணி  பாராட்டி, தட்டிக்கொடுத்து புகழ்ந்து பேச, ஃபோட்டோ போட்டு எழுத ஏனோ கிட்டத்தட்ட எவருமே முன்வர வில்லை..! அதனால் என்ன..? நாம் எதற்கு பிளாக் வைத்து இருக்கிறோம்..? தனிப்பதிவு போட்டு பாராட்டுவோம்..! போதாக்குறைக்கு  அவர் ஒரு பதிவர் (Blogger) வேறு..! விட்டு விடுவோமா..?

மங்களூர் பஃப் மற்றும் காதலர் தின தாக்குதலுக்கு பெயர்போன 'ஸ்ரீ ராம் சேனா'வின் மாணவர் அணி தலைவனான Rakesh Siddaramiah Mutt (19) என்பவனும், அவனோடு படிக்கும் அவ்வமைப்பின் கல்லூரி மாணவர்கள் Sunil Madiwalappa (18), Anil Kumar (18), Parashuram Ashok (20), Rohit Eshwar (18), Mallanagouda Vijaykumar (18) 5 பேரும் ( இதில் ஈடுபட்ட Arun Vaghmore (20) என்பவன் தப்பிவிட்டான்... தேடப்படும் இவன் மட்டும் இன்னும் பிடிபட வில்லை)....மொத்தம் ஏழு பேர் சேர்ந்து... இரவில் அங்கே கொடியை ஏற்றிவிட்டு காலையில் வந்து நல்லவர்கள் போல கொடியை ஏற்றியவர்களை உடனே கண்டுபிடித்து கைது செய்யக்கோரி கோஷம்போட்டு பாகிஸ்தான் கொடியை எரித்து கலவரம் செய்து இருக்கின்றனர்..!


முதலில் அந்த ஜனவரி 1 இரவில் அந்த அலுவலக வளாகத்தில் இரவு அரைமணி நேரம் (3:30-4:00) ஒரு இருசக்கர மோட்டார் வாகனம் நிறுத்தப்பட்டு இருந்ததுதான் முதல் துப்பு. அதை கண்ட ஐ விட்னஸ் சொன்ன தகவலின்படி... அந்த வாகனத்துக்கு சொந்தக்காரனை, வேறொரு இடத்தில் பார்த்த அந்த ஐ விட்னஸ் அவனை அடையாளம் காட்ட...  அவனை அணுகி விசாரிக்கும் போது தெரியவந்தது என்னவெனில்... பைக் சொந்தக்காரனான இவனும் இவன் நண்பனும் பிஜப்பூரில் புத்தாண்டு இரவு கொண்டாட்டங்கள் முடிந்து நள்ளிரவில் திரும்பும்போது தம் நண்பர்களை அந்த அரசு அலுவலக வளாகத்தில் சந்தித்ததாக தெரிவித்தனர். கூடவே அவர்கள் செய்த காரியமும் இவர்கள் மூலம் வெளிவந்து விட்டது. இவர்களின் மூலம் மற்ற நண்பர்கள் கண்டறிந்து சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டனர். தப்பிவிட்ட ஒருவன் மட்டும் இன்னும் சிக்கவில்லை. தாசில்தார் அலுவலகத்தில் ஏற்றப்பட்ட பாகிஸ்தான் கொடி சுனில் வீட்டில் தான் செய்யப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது..! புதன்கிழமை, ஜனவரி 4 ம் தேதி அதிகாலை மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

பொதுவாக முஜாகிதீன், சிமி, தொய்பா, கொய்தா என்று அனானி ஈமெயிலை ஆதாரமாக குற்றம் சாட்டி சந்தேகத்தின் பேரில் 'தடா பொடா' என்று கைது செய்யப்படுபவர்கள் கூட, தங்கள் முகங்களை கைகளால் மறைக்க இயலாதவாறு பின்னால் கட்டப்பட்டு செய்தியாளர்களிடம் முகம் நிமிண்டி காட்டப்படுவது நாம் அறிந்ததே..! 

பாக்.கொடி ஏற்றிய ஸ்ரீராம் சேனாவின் 'பர்தா' அணிந்த கேடிகள்
ஆனால், இங்கே... சாட்சி, ஆதாரத்துடன் அகப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னரும் கூட... இவர்களுக்கு முகத்தை மறைக்க பிரான்ஸ் நாட்டில் தடை செய்யப்பட்ட முகம் மறைக்கும் புருகா-நிகாப் சலுகைகள் எல்லாம் தரப்பட்டுள்ளன..! சபாஷ்..! இந்த "புதிய மாற்றத்தை" நாம் வரவேற்போம். அதேநேரம்... நாளை ஒருநாள்... 'குற்றவாளிகள்' என்று நீதிமன்றம் தீர்பளித்த பின்னராவது இவர்களின் முகத்தை "நடுநிலை(?) ஊடகங்கள்" நமக்கு காட்டுவார்கள் என்று நம்புவோம்..!

"ஒரு பக்கம், நாங்கள் குற்றவாளிகள் அல்ல... RSS தான் குற்றவாளி" என்று கூறும் ஸ்ரீ ராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தாலிக்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூடவா இந்த உண்மையை கண்டுபிடித்த சாதனையாளர்களுக்கு இல்லை..? அவனுக்கெல்லாம் பக்கம் பக்கமாக அத்தனை ஃபோட்டோக்கள் கூகுளில் உள்ளன..! ஹேமந்த் கார்கரேவின் வாரிசுகளான இவர்களுக்கு ஒரே ஒரு போட்டோ எடுப்பதற்குள்...அப்பப்பா 2 நாளாக நான் பட்ட பாடு..! அவர்கள் ஒருவரல்ல சகோ..! 5 பேர் கொண்ட டீம்..! இந்த ஐந்து பேரில், அதன் டீம் தலைவர்தான் சாதனையாளரான நம் பதிவர்..! கடைசியில், அவரின் ப்ளாக் ப்ரோஃபைல் போட்டாதான் எனக்கு கிடைத்தது..! நியூசில் அல்ல..!

அவர்.... பீஜப்பூர் மாவட்ட SPDr. D.C. ராஜப்பா IPS
(நம்மை போல இவரும் ஒரு (Blogger) பதிவருங்கோ...!)
(பிற்சேர்க்கை) மேலேயுள்ள  ப்ளாக் ப்ரோஃபைல் லிங்க் இதுதான்....
http://www.blogger.com/profile/09631126950354305286
(பிற்சேர்க்கை) இந்த ப்ரோஃபைளில் உள்ள அவரின் ப்ளாக் முகவரி இதுதான்....
http://bijapurpolicenews.blogspot.com/

இவர்தான் ஒரு  "special investigation team"  ஒன்றை தன்னுடைய DSP - முத்துராஜ் தலைமையில் உடனடியாக ஏற்படுத்தி... அதில் DCIB Police Inspector சித்தேஷ்வர், CPI சிதம்பர் மற்றும்  PSI பாபகவுடா படில் ஆகியோரை இணைத்தார். இவர்கள்தான் எவ்வித உயிரிழப்புகளும் இன்றி லவரத்தையும் கட்டுப்படுத்தி, பந்தையும் அமைதியாக நடக்க அனுமதித்து, இதன் மூலம் முஸ்லிம்கள் மீது தேசத்துரோக பழிபோட்டு, அப்பாவி இந்து மக்களை தூண்டிவிட்டு பெரிய அளவில் மதக்கலவரத்தை கர்நாடகாவில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததை முறியடித்தும் உள்ளனர். 

நம் நாட்டில் இவரை/இவர் டீமை எவரும் கண்டு கொள்ளா விட்டாலும் கூட... தான் உண்டாக்கிய தன்  டீமுக்கு தானே ரூ.10,000 வெகுமதி வழங்கி கவுரவித்தும் உள்ளார்.

நம் சக பதிவரான... இவருக்கு நம் பாராட்டுக்களை மகிழ்வோடு தெரிவிப்போம் சகோ..! 

Well done, Bijappur  SP, Dr. D.C. RAJAPPA & team..!

அவர்  ஊடக பேட்டியில் சொன்னது.......

"Rakesh is the Sindhagi unit president of Sene's student wing and the other accused are its members. They are all students in various colleges of Sindhagi and Bijapur. Their aim was to create communal unrest and gain advantage for their campaign" Rajappa said.


Rajappa said: "The accused have confessed...They were planning to shift base to Goa for a few days by mid- January. They had stitched the Pakistani flag at an accomplice's house in Sindhagi.Investigations are on to find out if other Sene leaders are involved." He said the accused conspired for a week before hoisting the flag on the night of December 31. 


They returned the following morning and staged their demonstration, pelting stones at a government- owned bus. "Their motive was clear: hoist the flag, create unrest and take mileage by protesting against the incident," Rajappa said.


Thanks to these news sources for references.....
http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=126207(Sindhagi Town Tense as Pak. Flag Hoisted)
http://mangaloretoday.com/mt/index.php?action=headlines&type=2572 (special investigation team) 
http://indiatoday.intoday.in/story/sri-ram-sene-activists-pakistani-flag/1/167409.html
http://www.megamedianews.in/index.php/44924/gang-of-7-in-rama-sene-hoisted-the-pak-flag-6-arrested-one-absconds/

அப்புறம் ஒரு கேள்வி..!
இந்த சம்பவம் பற்றிய செய்திகளை ஜனவரி 2 மற்றும் 3 ம் தேதிகளில் நிறைய தமிழ் & ஆங்கில தளங்களில் நான் படித்த போது அங்கேயெல்லாம் தவறாமல்  நான் பார்த்த சில பின்னூட்டங்களின் கருத்து என்னவென்றால்... "பாகிஸ்தான் கொடியை நம் நாட்டில் ஏற்றிய இந்த தேசத்துரோத முஸ்லிம் '@$*#~^+}?!(%='களை உடனே பிடித்து பாகிஸ்தானுக்கு பார்சல் கட்டி பார்டருக்கு அந்தப்புறம் தூக்கி வீசிவிடவேண்டும்" என்பதுதான்..!   

ஆனால்,  இந்திய முஸ்லிம்களை  பாகிஸ்தானுக்கு விரட்டும் தீயோரின் சூழ்ச்சியில் மீண்டும் மீண்டும் மண்..! போகாதோரை கலவரம் ஆரம்பித்து இனச்சுத்திகரிப்பு செய்யும் பயங்கரவாத சூழ்ச்சியும் செத்தது..!  அல்ஹம்துலில்லாஹ்..!  

சரியான ஆதாரம், நிஜமான சாட்சி என்று ஏதும் இல்லாவிட்டாலும் ஊடகம் ஏற்படுத்திவிட்ட மாயையினால் 'பயங்கரவாதி' என்று மக்கள் மனதில் நன்கு பதியப்பட்டுவிட்ட அப்சல் குருவுக்கு... பெருவாரியான இந்திய மக்கள் ஆசைக்கிணங்க தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது போல....... 
........இந்தியமக்களான அந்த பெருவாரியான பின்னூட்டவாதிகளின் ஆசைக்கிணங்க... இந்த பச்சைக்கொடியேற்றிய காவிகள் ஏழு பேரையும் உடனே பார்ஸல் கட்டி இந்திய-பாகிஸ்தான் எல்லையோர இரும்பு முள் வேலிக்கு அந்தப்பக்கம் நைசாக ராவோடு ராவா தூக்கி கடாசி விட வேண்டும்..!  

இவர்கள் மீது, இப்படி ஒரு நீதி மன்ற தீர்ப்பு வந்தால் எனக்கு ஓகே..!  உங்களுக்கும் ஓகே தானே சகோ...?
02:45 | 0 comments | Read More

ஜோதிடம் பார்க்காதீர்

ஜோசியத்தைப் பற்றி சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது “அதனால் பயன் ஏதுமில்லை” என பதில் கூறினார்கள். “அவர்கள் கூறுவது எங்களிடம் சரியாகவும் உள்ளதே!” என்று கேட்டனர். அதற்குக் காரணம் (வானவர்கள் பேசியதை) ஜின்கள் ஒட்டுக்கேட்டு தமது தோழர்களின் காதுகளில் போடுவதாகும். அந்த செய்தியில் 100 பொய்களை சேர்த்து கூறிவிடுகின்றனர் என்று நபி(ஸல்) பதில் கூறினார்கள்.
ஆயிஷா (ரலி) : புகாரி, முஸ்லிம்
ஜோசியத்தைப் பற்றி சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது “அதனால் பயன் ஏதுமில்லை” என பதில் கூறினார்கள். “அவர்கள் கூறுவது எங்களிடம் சரியாகவும் உள்ளதே!” என்று கேட்டனர் …
இறைத்தூதர் அவர்களே! நாங்கள் (இஸ்லாத்தை தழுவும்முன்) அறியாமை காலத்தில் பல காரியங்களை செய்வோம். (அதில் ஒன்று) நாங்கள் ஜோசியரிடம் செல்வதும், (இது சரியான செயலா?) எனக்கேட்டேன். “நீங்கள் ஜோசியரிடம் செல்லாதீர்கள்” என நபி(ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள். நாங்கள் சகுனமும் பார்த்து வந்தோம். (இது சரியானதுதானா?) எனக் கேட்டேன். அதற்கு இது உள்ளத்தில் ஏற்படும் ஒரு (தவறான) விஷயமாகும். எனவே (எந்தச் செயல் செய்வதிலிருந்து) தடுத்துக் கொள்ளாதீர்கள் என நபி(ஸல்) பதில் கூறினார்கள். முஆவியா(ரலி) : முஸ்லிம்
மாதவிடாய் பெண்ணிடமோ அல்லது பெண்ணின் மலதுவாரத்திலோ, உடலுறவு கொண்டால், அல்லது ஜோசியனிடம் சென்று அவன் சொன்னதை ஏற்று நம்பி உண்மையாக கருதினால் அவன் முஹம்மதாகிய எனக்கு இறக்கப்பட்டதை (குர்ஆனை) மறுத்தவனாவான் என்று நபி(ஸல்) கூறினார்கள். அபூஹுரைரா(ரலி) : இப்னுமாஜா, அஹ்மத்
வருங்காலத்தை கணித்துக் கூறுபவனிடம் சென்று, எந்த ஒரு விஷயத்தையேனும் கேட்டால் அவனுடைய 40 நாள் இரவு தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது என்று நபி(ஸல்) கூறினார்கள். ஸஃபிய்யா(ரலி) : முஸ்லிம்
ஹுதைபா(ரலி) அவர்கள் ஒருவரின் கையில் ஜுரம் நீங்குவதற்காக கயிறு ஒன்று இருப்பதைக் கண்டு அதை அறுத்துவிட்டு பின்வரும் திருவசனத்தை ஓதிக்காண்பித்தார்கள்
மேலும் அவர்கள் இணைவைப்பர்களாக இருக்கிற நிலையிலல்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை. (அல்குர்ஆன் 12:106) நூல் : முஸ்னத் இப்னு அபீஹாதம்
நபி(ஸல்) அவர்கள் ஒருவரை அவர் கையில் பித்தளை வளையம் இருப்பதைக் கண்டு “இது என்ன?” என்று வினவினார்கள்” அதற்கு அம்மனிதர் வாஹினாவின்(கழுத்தில், கையில் உண்டாகும் நோய்) காரணமாக அணிந்துள்ளேன் என்று பதில் கூறினார். அது சமயம் நபி(ஸல்)அவர்கள் அவரை நோக்கி “நீர் இதைக் கழற்றிவிடும் இது உமக்கு பலஹீனத்தைத்தான் அதிகப்படுத்தும். இந்நிலைமையில் நீர் மரணித்தால் நிச்சயமாக நீர் வெற்றி பெறவே மாட்டீர்” என்று கூறினார்கள். இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) : முஸ்னத் அஹ்மத்
“ஜோதிடன் கூறுபவற்றை உண்மைப் படுத்துபவன் நபி(ஸல்) அவர்கள் மீது இறக்கி வைக்கப்ட்ட (வேதத்)தை நிராகரித்தவனாவான்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அபூஹுரைரா(ரலி) : அபூதாவூத்
மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. (அல்குர்ஆன் 22:73)..thanks..jaqh
03:14 | 0 comments | Read More

தாய் தந்தை பேணல்

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் மிகப் பெரிய பாவம் செய்து விட்டேன் மன்னிப்பு உண்டா?” என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “உனக்குத் தாய் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “உன் தாயின் சகோதரி இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “ஆம்” என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அவருக்கு உதவிகள் செய்வீராக” என்றனர். இப்னு உமர்(ரலி) : திர்மிதீ
“அல்லாஹ்வின் கூலியை விரும்பி ஹிஜ்ரத் செய்யவும் ஜிஹாத் செய்யவும் உங்களிடம் உறுதி மொழி எடுக்க வந்துள்ளேன்” என்று ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “உம் பெற்றோரில் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா?” என்று கேட்டார்கள். அதற்கவர் ஆம்! இருவருமே உயிருடன் இருக்கிறார்கள் என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்விடம் கூலியைத் தானே எதிர்பார்க்கிறீர்?” என்ற கேட்டதற்கு அவர் “ஆம்” என்றார். அதற்கவர்கள், “நீர் உமது பெற்றோர்களிடம் திரும்பிச் சென்று அவர்களுடன் நல்ல தோழமையாக நடந்து கொள்ளும்” என்றார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி) : முஸ்லிம்
“ஒரு மனிதர் செய்யும் நன்மைகளில் மிகச் சிறந்த நன்மை, தம் தந்தை மரணித்த பிறகு தந்தைக்கு விருப்பமானவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வதாகும்” என்று நபி(ஸல்) கூறினார்கள்.
இப்னு உமர்(ரலி) : முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்
“தந்தையின் திருப்தியில் இறைவனின் திருப்தி உள்ளது. தந்தையின் அதிருப்தியில் இறைவனின் அதிருப்தி உள்ளது” என்று நபி(ஸல்) கூறினார்கள்.
“ஒருவன் தனது தந்தையை அடிமையாகக் கண்டு அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்தால் தவிர (வேறு எதன் மூலமும்) தந்தையின் கடமை மகன் தீர்க்க முடியாது” என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அபூஹீரைரா(ரலி) : முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் போரில் பங்கெடுக்க விரும்புகிறேன். (அது பற்றி) உங்கள் ஆலோசனையைக் கேட்க வந்துள்ளேன்” என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “உனக்குத் தாய் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவர் ஆம்” என்றார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் “அவரைப் பற்றிக் கொள், ஏனெனில் சுவர்க்கம் அவரது காலடியில் உள்ளது” என்று கூறினார்கள்.
முஆவியா பின் ஜாஹிமா(ரலி) : நஸயீ, அஹ்மத், ஹாகிம்.
“நபி(ஸல்) காலத்தில் என் தாயார் இஸ்லாத்தை ஏற்காத நிலையில் என்னை நாடி வந்தார். என் தாய் என்னிடம் (எதிர் பார்த்து) ஆர்வத்துடன் வந்துள்ளார், அவரைச் சேர்த்துக் கொள்ளலாமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன்” அதற்கு நபி(ஸல்) அவர்கள் உன் தாயாரைச் சேர்த்துக் கொள் என்றனர்.
அஸ்மா பின் அபீபக்கர்(ரலி) : புகாரி, முஸ்லிம், அபூதாவூத்.
“அவன் நாசமாகட்டும்! அவன் நாசமாகட்டும்! அவன் நாசமாகட்டும்!” என்று நபி(ஸல்) கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! யார்?” எனக் கேட்டேன். “முதுமையான வயதில் பெற்றோர்கள் இருவரையோ, அல்லது அவர்களில் ஒரு வரையோ அடைந்தும் சுவர்க்கம் செல்லாதவன்” என விடையளித்தார்கள்.
அபூஹுரைரா(ரலி) : முஸ்லிம், திர்மிதீ
“அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களிலேயே நான் தோழமை கொள்ள அதிக உரிமை படைத்தவர் யார்?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்)அவர்கள் “உன் தாய்” என்றார்கள். “அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தாய்” என்றார்கள். “அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தாய்” என்றார்கள். “அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தந்தை” என்றார்கள். அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம்
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் செல்வம் இருக்கிறது. எனக்குப் பிள்ளைகளும் உள்ளனர். (ஆனால்) என் தந்தையோ என் செல்வத்தின் பால் தேவையுடையவராக இருக்கிறார்: (நான் என்ன செய்ய?” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நீயும் உனது செல்வமும் உன் தந்தைக்கு உரியவர்கள். உங்கள் பிள்ளைகள் தாம் நீங்கள் சம்பாதித்தவற்றிலேயே சிறந்ததாகும். எனவே உங்கள் பிள்ளைகளின் சம்பாத்தியத்திலிருந்து உண்ணுங்கள்” என்றார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி) : அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜா
நபி(ஸல்) அவர்கள் (தமது வளர்ப்புத் தாயான) உம்மு ஐமன்(ரலி) அவர்களை பார்க்க சென்றனர். நானும் அவர்களுடன் சென்றேன். அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்குப் பானம் உள்ள பாத்திரத்தைக் கொண்டு வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் மறுத்தனர். அவர்கள் நோன்பு வைத்திருந்ததால் மறுத்தார்களா? அல்லது அவர்களுக்குப் பிடிக்கவில்லையா? என்பது எனக்குத் தெரியவில்லை. அப்போது உம்மு ஐமன்(ரலி) கடுமையாகச் சப்தம் போட்டுக் கோபத்துடன் நபியவர்களைக் கண்டித்தார்கள். (நபியவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்) அனஸ் (ரலி) : முஸ்லிம்
03:13 | 0 comments | Read More

நன்மையை செய்யுங்கள்

எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பங்கு அவருக்கும் உண்டு. அதுபோல எவரேனும் ஒரு தீமையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதிலிருந்து அவருக்கும் ஒரு பங்கு உண்டு, அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான் (4:85)
இன்னும் நன்மையிலும் இறையச்சத்திலும் நீங்கள் ஒருவருக் கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள், பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக் கொருவர் உதவி செய்ய வேண்டாம். அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகத தண்டிப்பவன். (5:2)
(நபியே) உம் இறைவனின் பாதையில் மக்களை விவேகத்துடனும். அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும் அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கீப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர் வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (16:125)
எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பங்கு அவருக்கும் உண்டு. அதுபோல எவரேனும் ஒரு தீமையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதிலிருந்து அவருக்கும் ஒரு பங்கு உண்டு, அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான் (4:85)
அநீதம் செய்த உனது சகோதரனுக்கும் அல்லது அநீதம் செய்யப்பட்ட உனது சகோதரனுக்கும் நீ உதவி செய் என்று ரஸுல்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! அநீதம் இழைக்கப்பட்டவனுக்கு நான் உதவி செய்வேன். அநீதம் இழைப்பவனுக்கு நான் எப்படி உதவுவது?” என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “அநீதம் செய்யாமல் அவனை நீ தடுப்பது” அது அவனுக்கு உதவி செய்வதாகும், என்று கூறினார்கள். (அனஸ் பின் மாலிக் (ரலி) : புகாரி, திர்மிதி)
நல்ல காரியத்தின் பக்கம் ஒருவர் வழிகாட்டினால் அதைப் பின்பற்றிச் செயல்படுபவர்களின் கூலி போன்றது அவருக்கும் உண்டு என ரஸுல்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூமஸ்வூது உக்பா பின் அம்ர் அல் அன்ஸாரி அல் பத்ரிய்யி(ரலி) : முஸ்லிம்)
நேர்வழியின் பக்கம் ஒருவர் அழைத்தால் அவரைப் பின்பற்றியவர்களின் கூலி போன்றது அவருக்கும் உண்டு. பின்பற்றறுவோரின் கூலி எதுவும் குறைக்கப்படாது. வழிகேட்டிற்கு ஒருவர் அழைத்தால் அதைப் பின்பற்றியவர்களின் பாவம் போன்றது அழைத்தவருக்கும் உண்டு. அவர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறைக்கப்பட மாட்டாது என ரஸு(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரலி) : முஸ்லிம்)
யார் தீமையைச் செய்கிராரோ அவர் தீமையைக் கூலியாகக் கொடுக்கப்படுவார். என்ற வசனம் இறங்கிய பின் அபூபக்கர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் செய்த ஒவ்வொரு காரியத்துக்கும் பிரிதிபலனை அடைவோம் என்ற நிலையில் எவ்வாறு ஈடேற்றம்; பெறுவது என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அபூபக்கரே! அல்லாஹ் உம்மை மன்னிப்பானாக! உமக்கு நோய் வருவதில்லையோ? நீர் கவலைப்படுவதில்லையா? துன்பங்கள் உம்மை அடைவதில்லையா? என்று கேட்டார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் ஆம் என்றனர். “நீங்கள் செய்த தவறுகளின் கூலியில் அதுவும் ஒன்றாகும் (அதாவது மறுமையில் தண்டனை கிடைப்பதற்கு பதிலாக இம்மையிலேயே கிடைத்துவிடும்)”. என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (இப்னுஹிப்பான்)
தான் வாழ் நாளை எப்படிக் கழித்தான்? தான் கற்றதை எந்த அளவுக்கு செயல்படுத்தினான்? தனது செல்வத்தை எப்படி எவ்வழியில் செலவு செய்தான்? தனது உடலை எதில் ஈடுபடுத்தினான்? என்று விசாரிக்கப்படாதவரை எந்த அடியானின் பாதங்களும் நகர முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூபர்ஸா(ரலி) : திர்மிதி)
03:11 | 0 comments | Read More

நேற்று முதல் காணவில்லை.




அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 
அன்பார்ந்த எனது அருமை சகோத...ரர், சகோதரிகளே!

யாரவது என் பொன்னை பார்த்தீங்களா! நேற்றுமுதல் காணவில்லை.
தயவுசெய்து எம்பொண்ணை பார்த்தீங்கனா எங்களுக்கு தெரிவியுங்களேன்! நீங்க நல்லா இருப்பீங்க...!

தொடர்புக்கு கைத்தொலைப்பேசி எண் : 9819457784

எங்கே போனாளோ! யார் கடத்திக் கொண்டு போனங்களோ அல்லாஹ் உதவிக்கொண்டு எங்களுக்கு தெரியலே. நேற்றுமுதல் எம்பொண்ணை காணலைங்க! எங்களால் நிம்மதியாக இருக்க முடியலே.

என்று இந்த பொன்னை பெத்தவங்க ரொம்ப சிரமத்தோடு அழுகையும், கண்ணீரோடும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். நேற்றுமுதல் இவர்களின் சந்தோசங்களை தொலைத்துவிட்டு தொலைந்து போன பிள்ளையை நினைத்து பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அல்லாஹ் உதவிக்கொண்டு நீங்கள் யாரவது இந்த பெண்ணை கண்டால் உடனே கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்புகொள்ளுங்கள். நீங்கள் செய்யும் உதவிக்கு நம்மை படைத்த அல்லாஹ் உங்களுக்கு இம்மையும், மறுமையிலும் நற்கூலி தருவானகவும். ஆமீன்.

அருகில் உள்ளவர்கள், அக்கம், பக்கத்து ஊர்க்கார்கள் கொஞ்சம் அக்கரைக்கொண்டு தேடிக்கொடுங்கள்....அதன் வழியாக வந்தால்...இன்ஷா அல்லாஹ்...! அறிந்தால் தக்க தகல்வல்களை உற்றவருக்கு தெரிவியுங்கள்...!

இந்த பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு தொலைந்து போன இந்த பெண் மீண்டும் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக....! ஆமீன். யாரப்பல் ஆலமீன்...!

தொடர்புக்கு கைத்தொலைப்பேசி எண் : 9819457784

இன்ஷா அல்லாஹ் அனைவரும் நலம்பெற வேண்டும் என வல்ல இறைவனிடம் துவா செய்கிறேன்...! ஆமீன்.
03:04 | 0 comments | Read More

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

1) இன்றைய தேவை ஓர் இஸ்லாமிய எழுச்சி. ஆம் டிவி, சினிமாக்கள், சின்னத்திரை, இணையம் என்று சீரழிந்து கொண்டிருக்கிறது நம் சமுதாயம். நீங்கள் இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறீர்களா இல்லையா என்பதை உங்கள் வீட்டின் குழந்தைகளின் நடத்தைகளை வைத்தே தெளிவாக அறிந்திட இயலும். நமது குழந்தைகளில் பெரும்பாலோர் கார்ட்டூன் படங்களில் வரும் கதாபாத்திரங்களாக மெல்லமெல்ல மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை. இது ஒரு புறமிருக்க இன்டர்நெட் என்னும் இணையத்தில் அறிவைத் தேடிக்கொள்வதற்கு பதிலாக அசிங்கங்களை தேடுகிறது இளைஞர் கூட்டம். மேலும் திருமணத்திற்குப் பின்னர் தன் மனைவியைக் காதலிப்பதை விட்டுவிட்டு,காதல் - காதலர்தினம் என்று சிற்றின்பத்தில் வீழ்ந்து சீரழிகிறது நம் இளைய சமுதாயம். கேளிக்கைகள்தாம் இன்றைய இளைஞர்களின் இதயத் துடிப்பாகிவிட்டது. வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ இவைகளைத் தட்டிக்கேட்க முடியாத துர்பாக்கிய நிலை. இத்தகைய அவலங்களை மாற்றி, மண்மூடச்செய்து ஆரோக்கிமான சமூகத்தை உருவாக்கும் ஆற்றல் இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு. எனவே அத்தகைய ஆரோக்கியமான சமூக அமைப்பு உருவாக இன்றைய தேவை ஒரு இஸ்லாமியப் பேரெழுச்சி.
2) அத்தகைய மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மலர ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை இஸ்லாத்தில் முழுமையாக நுழைத்திட வேண்டும். நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ள நிபந்தனைகள் அடிப்படையில், பெயரளவில் முஸ்லிம் என்று இல்லாமல் இஸ்லாத்தின் கடமைகளையும், சட்டதிட்டங்களையும் தெளிவாக விளங்கி செயல்படக்கூடிய முன்மாதிரி முஸ்லிமாக முதலில் நீங்கள் இருக்க வேண்டும். இஸ்லாத்தின் 5 முக்கியக் கடமைகளான சாட்சிபகர்தல், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்றவற்றில் மிகுந்த பேணிக்கையுடன் நடந்து காட்டவேண்டும். ஒரு முஸ்லிமின் அடிப்படை அம்சங்களான உண்மை, நேர்மை, பணிவு, நன்னடத்தை, வாக்குறுதி மீறாமை போன்ற நற்பண்புகளின் உறைவிடமாக நீங்கள் திகழவேண்டும். இந்திய மண்ணில் இஸ்லாம் வேரூண்டக் காரணமாக அமைந்தவைகளுள் ஒன்று நம்மக்களிடம் அன்றைய அரபுமுஸ்லிம் வணிகர்கள் நடந்து காட்டிய நேர்மையான நன்னடத்தைகள் என்பதையும் கவனத்தில் கொள்க.
3) உங்கள் வீட்டின் குழந்தைகள் ஒரு முன்மாதிரி இஸ்லாமியக் குழந்தைகளாகத் திகழவேண்டும். பசுமரத்தாணிபோல என்ற உவமைக்கு ஒப்ப இஸ்லாமியக் கோட்பாடுகளை உங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே தெளிவாக பயிற்றுவிக்க வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய எழுச்சி ஒரளவு துடிப்போடு இருக்கும் நமது காலகட்டத்திலேயே இத்தனை சவால்களை நாம் எதிர்கொள்கிறோம் என்றால் நாளைய இளைய சமுதாயமாக மாறவிருக்கும் நம் குழந்தைகள் எத்தகைய ஷைத்தானிய சூழ்ச்சிகளை எதிர்கொள்ள வேண்டிவரும்? என்பதை கனத்த மனதுடன் நினைத்துப் பார்க்கிறோம். அத்தகைய இடர்கள் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் அளவிற்கு அவர்களின் ஈமானிய பலத்தை குழந்தைப் பருவத்திலேயே அளிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
4) இஸ்லாமிய குடும்ப உறவுகள் மேம்படவேண்டும். சிறுசிறு கருத்துவேறுபாடுகள், பிரச்சனைகளால் பல முஸ்லிம் குடும்பங்களுக்குள் பல பிரிவினைகள் ஏற்பட்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதுபோல அத்தகைய பிளவுகள் அனைத்திற்கும் முதற்காரணமாக இருப்பது, மறுமைக்கான பரிசோதனைக் கூடமான அற்ப உலக வாழ்க்கையில் நமக்கு ஏற்பட்டுள்ள பற்றுதலே. சுயநலமாகவும், அகங்காரமாகவும், பழிவாங்கும் எண்ணத்துடனும் வாழ்ந்திருந்து இறுதியில் நாம் எதைக் கொண்டு செல்லப்போகிறோம்? என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். தனிப்பட்ட விரோதங்கள்தாம் நாளடைவில் குடும்பப் பிரச்சனைகளாக வலுக்கிறது. நம் குடும்ப உறவுகளை முறித்து, பல பிளவுகளை நமக்குள் ஏற்படுத்தி அவற்றையே ஒரு இயக்கப்பிளவாக, ஒரு சமுதாயத்தின் பிளவாக மாற்றி, நம்மை கோழைகளாக ஆக்கிவிடுவது கெட்ட ஷைத்தானுடைய (இப்லீஸ் - லூசிஃபருடைய) வேளைதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கான வித்து உங்கள் குடும்பத்திலிருந்து ஊன்றப்பட வேண்டும்.
5) உங்கள் குடும்பம் ஒரு உள்ளரங்கு இஸ்லாமியப் பல்கலைக்கழகமாக மாறிடவேண்டும். உங்கள் பெற்றோர்கள், மனைவியர் மற்றும் குழந்தைகள் உட்பட உங்கள் குடும்பத்தார்கள், உங்கள் பொறுப்பிலுள்ளோர் என்று அனைவருக்கும் ஷைத்தானுடைய, இலுமனாட்டிகளுடைய சூழ்ச்சிகளை விளக்கவேண்டும். மேலும் அவர்களையும் தூய இஸ்லாத்தின் கோட்பாடுகளால் வார்த்தெடுத்து இஸ்லாம் என்னும் சத்தியமார்க்கத்தில் இறுகிப் பிணைத்திடவேண்டும். ஒரு வீட்டிற்கு படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை என்பன எவ்வாறு அவசியமோ அது போல ஒவ்வொரு முஸ்லிம்களின் வீட்டிலும் குறைந்தது 50 புத்தகங்களாவது கொண்ட ஒரு இஸ்லாமிய நூலகம் அவசியம் இருக்க வேண்டும். உங்கள் வீட்டிற்குள் வரும் வருகையாளர் இஸ்லாத்தின் அம்சங்களில் எதையாவது ஒன்றை கற்று அறிந்தவராக உங்கள் வீட்டைவிட்டு திரும்பிச்செல்ல வேண்டும்.
6) முஸ்லிம்கள் பயனுள்ள கல்வி பெறவேண்டும். கல்வி கற்பதை இஸ்லாம் வலியுறுத்தும் அளவிற்கு வேறு எந்த மார்க்கமும் வலியுறுத்தவில்லை. உலக கல்வி வேறு, மார்க்கக் கல்வி வேறு என்று கல்வி இருகூறாக பிரிக்கப்பட்டுள்ளதின் பின்னனியில் யூதசூழ்ச்சிகள் இருப்பதையும், மார்க்கக் கல்வியோடு கூடிய உலக கல்விதான் உங்களுக்கு பயனளிக்கும் என்ற உண்மையையும் உணர்ந்து கொள்ளுங்கள். கல்வி கற்பதை நம் மார்க்கம் கடமையாக்கியுள்ளதை உணர்ந்து நீங்களும், உங்கள் குடும்பமும் அத்தகைய இருகல்விகளையும் ஒருங்கே பெற முயலுங்கள். பிரித்து வைக்கப்பட்டுள்ள இருகல்விமுறையை ஒன்றிணைக்கவும், இதைப்பற்றிய விழிப்புணர்வை நீங்கள் வாழும் பகுதியில் ஏற்படுத்திடவும் பாடுபடவேண்டும். உலக ஊடகங்கள் பொரும்பாலும் இஸ்லாத்திற்கெதிரான நச்சுக்கருத்துக்களை வெளியிடுவதையும், பொய்களைப் பரப்புவதையுமே மூலதனமாகக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவைகளை பிரித்தறிந்து உண்மையை விளங்கும் அளவிற்கு அறிவாற்றல் பெற்றவராக நீங்கள் திகழவேண்டும். ஊடகங்களில் வெளியிடப்படும் இஸ்லாத்திற்கெதிரான விஷயங்களை உணர்ச்சிப் பூர்வமாக அணுகிடாமல் அவற்றை அறிவுப்பூர்வமாக அணுகி உண்மை நிலையை உலகிற்கு தெளிவுபடுத்த வேண்டும்.
7) வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நீங்கள் இஸ்லாத்தையே முன்னிலைப் படுத்துங்கள். உங்களின் வேலைப்பளுக்கலோ, நீங்கள் வாழும் சுற்றுச்சூழலோ, அல்லது நீங்கள் வகிக்கும் பதவிகளோ நீங்கள் இறைவிசுவாசியாக வாழ்வதற்கும், மேற்காணும் நல்ல விஷயங்களை செயல்படுத்துவதற்கும் தடையாக இருப்பின் அத்தகைய நிலையைவிட்டு தெளிவான திட்டமிடலுடன் விரைவாக மீட்சிபெற முயலுங்கள். உங்கள் ஈமானை பலஹீனப்படுத்தி மறுமையை மறக்கடித்திடும் அளவுக்குள்ள பொருளீட்டலோ, வேலைப்பளுவோ, பதவிகளோ அல்லது சுற்றுச்சூழலோ அபாயகரமானது, அவசியமற்றது என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள். நான் மிகவும் வேலைப்பளு மிக்கவன், இஸ்லாமிய அறிவில் பலஹீனமானவன் என்பன போன்ற தாழ்வு மனப்பான்மையான, போலியான மாயையை விட்டொழித்து தன்னம்பிக்கையுடன் உங்கள் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் இஸ்லாத்தை முன்னிலைப்படுத்திட உறுதிகொள்ளுங்கள்.
இவ்வாக்கத்தில், நீங்கள், உங்களின், உங்களுடைய போன்ற முன்னிலை வாசகங்கள் எங்களையும் சேர்த்தே குறிக்கும். எனவே அவற்றை நாம், நமது, நம்முடைய என்ற பொருளில் புரிந்துகொள்ளவும். இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ள விஷயங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க முன்வரும் நன்மக்களாக நம் யாவரையும் ஆக்கிஅருள்வதற்கு வல்ல அல்லாஹ் போதுமானவன். ஷைத்தானிய இலுமனாட்டிகளின் சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற்ற முஸ்லிம்களாக நாம் அனைவரும் வாழ்ந்திட பிராத்தனைகளுடன் வாழ்த்தி முடிக்கிறோம்.
... எங்கள் கடமை இறைவனின் தூதுச் செய்தியை விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை (36:17)
எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (13
19:24 | 0 comments | Read More

ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!

இன்று மாறிவரும் உலகில் நம் சமுதாயங்களின் பிளவுகளை சொல்லி மாளாது தினம் ஒரு இயக்கம் உருவாகிகொண்டுதான் உள்ளன. எத்தனை ஜமாத்துக்கள்,கழகங்கள், லீகுகள். இது போன்ற சமுதாய(?)அமைப்புகள் சில நேரங்களில் நமக்கு எரிச்சலை தந்தாலும் சந்தர்ப்பு சூழ் நிலை காரணமாக ஆதரித்தும் விமர்ச்சித்தும் வருகிறோம்.
ஆனால் தற்பொழுது ''சத்தியமே ஜெயம்''என்ற பெயரில் சமீப காலமாக ஒரு இயக்கம் சிங்கப்பூரை தலைமையகமாக கொண்டு
செயற்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தை சார்ந்தவர்கள். இறைவனால் தடுக்கப்பட்ட சூது,மது,மாது, விபச்சாரம் இவையனைத்தும் விதியின்படி தான் நடக்கிறது.அல்லாஹ் எனக்கு விதியாகியுள்ளான் நான் குடிப்பதற்கு இறைவன் நாடியுள்ளான் நான் குடிக்கிறேன் .. என இது போன்ற பதில்கள் தான் வருகிறது.
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம் இது பற்றி கேட்டபொழுது எந்த ஒரு செயலும் இறைவன் நாடினால் தான் நடக்கும் அது போல்தான் இதுவும் என்றார் கொள்கை பிடிப்புடன் இவ்வியக்கத்தின் முக்கிய நபர் சிங்கப்பூரில் வசிக்கும் முத்துப்பேட்டையை சார்ந்தவர் ஆவர் இவர் நடத்தும் மினிமார்ட்டில் மது போன்ற போதை வஸ்த்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன இவரை நண்பர் மூலம் தொடர்புகொண்டு இது விஷயமான சில சந்தேகங்களை கேட்ட பொழுது என்னை நேரில் வருமாறு அழைத்தார்.
எனது வேலை பளு காரணமாக நேரில் செல்ல இயலவில்லை. எனவே அன்பார்ந்த அருமை நண்பர்களே ... நாம் இயக்கங்களால் பிரிந்து கிடந்தாலும் இது போன்ற அபாயகரமான, அல்லாஹ் ரசூல் சொல்லித்தராத மிகவும் கேடுகெட்ட வழிகளில் செல்ல வேண்டாம் இது போன்ற இயக்கங்களின் பெயரை சொல்லி ஊருக்குள்
வந்தால் விரட்டியடிக்க தயாராக இருக்க வேண்டும் பல அப்பாவி இளையதலைமுறையினரை மூளை சலவை செய்யப்பட்டு இந்த பாவத்தின் பக்கம் ஈர்த்து வருகின்றனர்.

இவ்வலையில் விழுந்த பல இளைஞர்கள் தங்களுக்கு சாதகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் இதனால் அவர்களை
நம்பி பல லட்சம் செலவு செய்து அங்கு அனுப்பிவைத்த பெற்றோர்கள் கவலையில் இருந்து வருவதும் இவர்களின் பார்வையில் இதுவும் ''விதி'' தான் என்று எண்ணிக்கொண்டு உள்ளனர் போலும் இவர்கள் நடத்தும் வணிக நிறுவனங்களில்
SJ சிம்பல் போட்டுவைத்துள்ளனர் .

எனவே அன்பு நண்பர்களே... இதுபோன்ற ஷிர்க்கான
இயக்கங்களை ஊருக்குள் ஊடுருவ விடாமல் காப்பது உலமாக்களுக்கும் நமக்கும் தலையாய கடமையாக உள்ளது. அல்லாஹ் அனைவரையும் காப்பாற்றி நேர்வழி காட்டுவானாக ஆமீன் .

 “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹ¤ரைரா (ரலி) , ஆதாரம் : புகாரி

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்ததைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும். அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து விடட்டும். இது ஈமானின் பலவீனமான நிலையாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
19:20 | 0 comments | Read More

கற்பா? கல்லூரியா?

ஓரிறையின் சாந்தியும் சமாதனாம் உண்டாவதாக
ஏகத்துவம்  இதழில் வெளியான கட்டுரை...
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்குர்ஆன்: 66:6)
பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிப்படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொள்கிறார்கள். பெரும்பாடுபடுகிறார்கள். பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு ஒன்றும் தடையில்லை.
குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்குப் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் பள்ளிப் படிப்புக்கு மேலான படிப்புக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் கற்பைப் பறிகொடுக்கும் பேரபாயம் காத்திருக்கின்றது என்பதை பின்வரும் சில எடுத்துக் காட்டுகள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
ஆட்டோ அல்லது வேன் பயணம்சிலர் தங்களது பருவடைந்த வயதுப் பெண்களை தன்னந்தனியாக காரில் அல்லது ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றனர். சிலர் ஆட்டோவில் நான்கைந்து சக வயதுப் பெண்களுடன் அனுப்பி வைக்கின்றனர். ஆட்டோ ஓட்டுனர்களும் வாலிப வட்டங்கள் தான் என்பதைப் பெற்றோர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.
ஆட்டோ பறக்கின்ற போது, ஆட்டோ அதிர்கின்ற வகையில், அமர்க்களப்படுகின்ற வகையில் துள்ளிசைப் பாடல்கள் காதுகளைப் பிளக்கின்றன. பாடல் வரிகள் அத்தனையும் கொத்துக் கொத்தாய் ஆபாச வார்த்தை களை வெடித்துத் தள்ளுகின்றன. உள்ளிருக்கைகள் நிரம்பி வழிந்து, ஓட்டுனரை ஒட்டியிருக்கின்ற பலகையில் பருவ வயதுப் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஒட்டுகின்ற விரச விளையாட்டுகள்.
பள்ளியில் கொண்டு விட்ட பின்னர் மாலையில் படிப்பு முடிந்ததும் மாணவிகள் – நம் சமுதாய பெண்கள் வெளியே வருகின்றனர். வாசலில் ஆட்டோவுடன் காத்தி ருக்கின்றான் ஆட்டோ ஒட்டுனர். அவனுக்குரிய காக்கிச் சீருடையை அணியாமல் கலர் கலர் பேண்ட சர்ட் அணிந்து இன் செய்து சீவிச் சிங்காரித்து எடுப்பாக நிற்கின்றான்.

பள்ளிக்கூடத்தில் மாணவிகளை விடுவது 4 மணி, நான்கரை மணி, 5 மணி என முறை வைத்து விடுகின்றார்கள். அல்லது டியூசன் போன்ற காரணங் களால் மாணவிகளின் வருகை நேரம் மாறுபடுகிறது. இந்த ஆட்டோக்காரன் கடைசி அணி வருகின்றவரை ஏற்கனவே வந்த பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கின்றான். மீண்டும் அதே உரசலுடன் நம் பிள்ளைகளை வீட்டில் விட்டுச் செல்கிறான். அதன் பிள்னர் ஆட்டோ டிரைவர் கரையேறி விட்டாலும் அவனைத் துரத்துகின்ற கனவு அலைகளிலிருந்து அவன் கரையேறுவதில்லை.
மறுநாள் காலையில் அதே சொகுசு பயணம். வேன் டிரைவர்களும் இதே போன்று தான். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் பெரும்பகுதி இந்த நிலை தான். இப்போது சிந்தியுங்கள். இந்த கல்லூரிப் படிப்பு தேவையா என்று!
ஆட்டோ, வேண் பயணம் தான் இப்படி என்றால் பஸ் பயணமும் பாதுகாப்பாக இல்லை. நகரத்தை நோக்கி வருகின்ற பஸ்கள் தன்னுடைய கொள்ளளவையும் தாண்டி ஆட்களை நிரப்புகின்றன. இங்கும் பெண் பித்தர்கள் சபலப்புத்தியுடன் பெண்களின் உடல் உரசலுக்கு வாய்ப்புக் கிடைக்காத என்று எதிர்பார்த்து ஏங்கியே பயணிக்கின்றனர். நடத்தைகெட்ட நடத்துனர்களும், ஓட்டுனர்களுடன் வழிதவறும் பெண்களும் இருக்கிறார்கள். இது போன்ற விவகாரங்களும் சமுதாயத்தில் சந்தி சிரிக்கின்றன.

பட்டபடிப்புக்காக வெளியூர்களுக்குச் செல்லும்போது குழுவாகச் செல்லும் இப்பெண்களின் ராஜ்யம் கொடிகட்டி பறக்கின்றது. ஆர்ப்பரித்துச் சப்தமிடுவது, பாடல்களைப் பாடி ஆடுவது, கும்மாளமிடுவது என கல்லூரிப் பெண்கள் நடத்தும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. பேருந்து நடத்துனர்களுக்குக் கொண்டாட்டம் தான். கணவன், மனைவி போல் அருகருகே அமர்ந்து கொண்டு கொஞ்சி குலாவுவது சர்வ சாதாரணமான ஒன்று.
பள்ளி, கல்லூரியில் மட்டுமல்ல! வருகின்ற வழிப் பயணத்திலும், வழிப்பாதையிலும் பெண்களின் கற்புகளைப் பறிப்பதற்கு ஷைத்தான் தன் பரிவாரங்களுடன் முற்றுகை யிட்டு நிற்கின்றான். இப்படி ஆபத்துக்கிடையில் பெண்களுக்கு கல்லூரிப் படிப்பு தேவையா என்பதைப் பெற்றொர்கள் சிந்திக்க வேண்டும்.
பாடமா? படமா? ஊயர்நிலை மற்றும் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகள் தங்கள் சக மாணவிகளைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்வி விட்டு, பாய் பிரண்ட்ஸ்வுடன் திரையரங்களுக்குச் செல்கின்றனர். அருகருகே அமர்ந்து படம் பார்க்கின் றனர். சினிமாக்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலத்திலும் காமக்களியாட்டங்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
முப்பது வருடங்களுக்கு முன்னால் உள்ள மக்கள் எதை ஆபாசம், விரசம் என்று கருதினார்களோ அதை சினிமாவில் காட்டினார்கள். தற்காலத்தில் உள்ள மக்கள் எதை காமகளியாட்டம் என்று வெறுக்கின்றர்களோ அதை தற்போதுள்ள சினிமாக் களில் காட்டுகின்றனர். இந்தப் படத்தைத் தான் நமது அருமை மகள் திரையரங்கில், திரை வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமில்லாமல் கொட்டிக் கிடக்கும் கும்மிருட்டில் அருகில் ஒருவனுடன் அமர்ந்து படம் பார்க்கும் காட்சியை பெற்றோர்கள் தங்கள் மனக்கண் முன்னால் சற்று ஓட விட்டுப் பார்க்கட்டும். இரத்தம் கொதிக்கும். கையில் செருப்பை அல்ல, அரிவாளைக் கூட எடுக்க நிணைப்போம். இப்போது நிணைத்துப் பாருங்கள். இப்படி ஒரு கல்வி தேவையா?
பிற மதத்தவருடன் காதல் பயணம்கல்லூரிக்குச் செல்லும் வயதுப் பெண்களின் அவலம் இத் துடன் நிற்கவில்லை. பிற மதத்தவருடன் கற்பைப் பறிக்கின்ற, உள்ளத்தை உறையச் செய்யும் படுபாதகச் செயலும் பகிரங்கமாகவே நடைபெறுகின்றது. இவ்வர்று கூறுகையில் நம் சமுதாய ஆண்களுடன் ஓடலாமா? என்று கேட்கலாம். யாருடன் சென்றாலும் விபச்சாரம் தான். ஆனால் பிற மதத்தவருடன் ஓடும் போது கொள்கையும் சேர்ந்தே போய் விடுகின்றது. கொள்கை மாறுதல் என்பது இஸ்லாத்தில் கொடியப் பாவமாகும்.
உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.       (அல்குர்ஆன்: 2:217)
ஓடும் பெண்களும் வாடும் பெற்றோரும்
இவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு வித்திட்டது எது? இந்தக் கல்லூரிப் படிப்பு! பெற்றோர்களின் கண்டு கொள்ளாத போக்கு! நம்முடைய பிள்ளைகளை நரகபடு குழியின் விறகுகளாக்கத் துணிந்து விட்டோம்.

தமிழகத்தின் தென்பகுதியில் முஸ்லிம்கள் நிறைந்த ஒரு சில ஊர்களில் கல்லூரி, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்கள் பிற மதத்தவர்களுடன் ஒடுவது சர்வசாதாரணமான ஒன்றாகி விட்டது.
பெண் பிள்ளைகள் ஓடுகின்றனர். பெற்றோர்களோ வாடிக் கொண்டிருக்கின்றனர். கண்ணீரும் கம்பலையுமாக கவலையில் ஆழ்ந்துக் கிடக்கின்றனர். பள்ளிப்படிப்புக்கே இந்த கதி என்றால் கல்லூரிப் படிப்புக்கு என்ன கதி?
ஒரு முஸ்லிம் கல்லூரி நீண்ட காலம் ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரியாக செயல்பட்டது. அப்போது கல்லூரி சீருடனும் சிறப்புடனும் செயல்பட்டது. இக்கல்லூரியில் பெண்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இக்கல்லூரி நிர்வாகம் பென்களுக்காக தனிக் கல்லூரியைத் துவங்கியிருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு, ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கோ எஜூகேஷன் முறையை கொண்டு வந்தது. அதன் விளைவு என்ன?
பிற சமுதாய மாணவர்களுடன் நமது சமுதாய பெண்கள் சேர்ந்து வழி தவறுகின்றனர். சமுதாயப் பெண்களின் கற்பு மட்டுமல்ல! சமுதாயத்தின் கண்ணியமும் கவுரவமும் சேர்ந்தே காற்றில் பறக்கின்றது. மேலும்; இஸ்லாத்தை விட்டே இந்தப் பெண்கள் வெளியேறும் நிலையும் ஏற்படுகின்றது. இதன்படிப் பார்க்கும் போது வல்லூரியா? கற்பா? என்ற கேள்வியைத் தாண்டி, கல்வியா? இறை மறுப்பா? என்று கேட்க வேண்டியுள்ளது.
அத்துடன் இங்கு நாம் இன்னொரு விளைவையும் உணர்ந்தாக வேண்டும். இது போன்று நமது சமுதாய பெண்கள் பிற சமுதாயத்தவருடன் ஓடும்போது அதைத் தட்டிக் கேட்பதற்காகச் சில இளைஞர்கள் கிளம்புகின் றனர். சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர். இது இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பிற சமுதாயத்திற்கும் மத்தியில் ஒரு விதமான மோதல் போக்கை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் வகுப்பு கலவரம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டிய சூழலும் ஏற்படுகின்றது. எனவே, இத்தகைய விளைவுகளைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஒரு பெண்ணுக்கு அவசியத் தேவை கற்பா? கல்லூரியா? ஈமானா? இறை மறுப்பா? என்று சிந்திக்க வேண்டும்.
நம் மகள் கற்பிழந்தால் அல்லது மதம் மாறினால் அவள் செய்த பாவத்தில் நமக்குப் பங்கில்லை என்ற நாம் தப்ப முடியாது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.உங்களில் ஒவ்வொரு வரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட் பட்டவைப் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்வித் தலைவரும் பொறுப்பாளரே! தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் தன் மனைவி மக்களின் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்வர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட் பட்டவை குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள், தள் எஜமானின் உடமைகளுக்கு பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான் (நூல்: புகாரி 2409)
இந்த ஹதீஸின்படி பெற்றோர்களும் அந்தப் பாவத்தின் சுமையை மறுமையில் சுமந்தே ஆக வேண்டும். கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டும்.
ஒரு பெண்ணை உயர் கல்வி படிக்க வைக்கும்போது சாதகங்களை விட பாதகங்களைத் தான் பார்க்க வேண்டும். அப்படியே ஒருவர் தமது மகளை படிக்க வைக்க வேண்டுமானால்….
குறைந்தபட்சம் அந்தப் பள்ளி அல்லது கல்லூரி ஊருக்குள்ளேயே அமைந்திருக்க வேண்டும். நம்முடைய கண்காணிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.
உள்ளுராக இருந்தாலும், வெளியூராக இருந்தாலும் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியாக இருக்க வேண்டும். (அதிலும் ஆண் நிர்வாகிகள் ஆட்டம் போடுகின்ற, வயதுப் பெண்களிடம் சில்மிஷம் செய்கின்ற பள்ளிகள், கல்லுஸரிகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தூரத்தில் இருந்தால் ஆட்டோ, கார் அல்லது வேன் போன்றவற்றில் தனித்துச் செல்லக் கூடாது.
கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர ஒரு பெண் மூன்று மைல்கள் தூரத்திற்கான பயணத்தை மேற்கொள்ளக்கூடாது என்ற அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) தப்ரானி)
இந்த பெண்கள் ஆட்டோ அல்லது வேளில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் டிரைவர் திருமணம் முடித்த, வயதானவர்களாக, ஒழுக்கமானவர் களாக இருக்க வேண்டும்.
இது போன்ற நிபந்தனைகளுக்கு ஒத்து வரவில்லையென்றால் பத்தாம் வகுப்புடன் பெண்கள் கல்வியை நிறுத்திக் கொண்டு மார்க்கக் கல்வியைப் பயிற்றுவிப்பது அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையைப் பயக்கும்.
ஒரு சில கட்டங்களில் பட்டப்படிப்புப் படித்தப் பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாக உள்ளது. பட்ட மேல்படிப்பு படித்த பெண்களுக்கு அதை விட சிரமமாக உள்ளது. அப்படியே மாப்பிள்ளை அமைந்தாலும் ஒரு குழந்தை, இரு குழந்தைகளுடன் விவாகரத்தில் போய் முடிகின்றது.
எனவே, இப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் பெண்களின் கல்லூரிப் படிப்பின் சாதக பாதகங்களைப் பெற்றோhர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.
கற்பா? கல்லூரியா? என்ற இந்த தலைப்பில் கல்லூரிப் படிப்பில் ஏற்படுகின்ற பாதகங்களை பட்டியலிடும் போது கல்லூரியில் படித்த பெண்கன் எல்லாம் தவறானவர்கள் என்று விளங்கி விடக்கூடாது.இங்கு எழுதப்பட்டவை அனைத்தும் நடப்பவை, நடந்துக் கொண்டிருப்பவை.
19:18 | 0 comments | Read More

மணமக்களுக்காக நமது பிரார்த்தனை -துஆ

இஸ்லாமியத் திருமணம் தொடர்…
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ):-
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
… பாரகல்லாஹ_லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்…
பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக! என்று கூறுவார்களென அபூஹ_ரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
முஹம்மது நபி (ஸல்) கூறியுள்ளார்கள்: வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தை (குர்ஆன்) நடைமுறையில் சிறந்தது என்னுடைய நடைமுறை (சுன்னத்) காரியங்களில் கெட்டது பித்அத்துக்கள் (இஸ்லாம் மார்கத்தில் நபிவழிக்கு மாற்றமாக சேர்க்கப்பட்ட அதிகமாக்கப்பட்ட புதுமையானவைகள்) பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளே, வழிகேடுகள் நரகத்தில் (கொண்டு) சேர்க்கும். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி), ஆதாரம்: புகாரி.
நடைமுறையில் உள்ள ஸஅல்லிஃப் பைனஹ_மா போன்ற துவாவை ஒதுவது அதற்கு நபி (ஸல்) கூறாத விதத்தில் ஆமீன், ஆமீன் என்று முழுங்குவதைனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த துவா ஒதும் போது அலி, ஃபாத்திமா என்ற பெயர், வரும்போது பெண்ணுக்கு பெண்ணுடைய உறவினர் (தாலி)கருகமணி கட்டுவது போன்றவை ஆதாரமற்ற மூட நம்பிக்கையாகும். அதை நாம் அவசியம் தவிர்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது நபித்துவத்தில் நிக்காஹ்விலோ, நிக்காஹாவிற்கு பிறகோ தன் மனைவிகளுக்கோ அல்லது தன் மகள் ஃபாத்திமாவுக்கோ (தாலி) கருகமணி கட்டவே இல்லை என்பதும், (தாலி) கருகமணி கட்டுவது அதை கணவன் இறந்த பின் அறுப்பது பின் அந்த பெண்ணை விதவை கோலத்தில் வைத்து அபசகுணமாக கருதி ஒதுக்கி வைப்பது இவையாவும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாதவை. இவை பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையாகும்.
சீறா புராணத்தை இயற்றிய உமர் புலவர் நபி (ஸல்) அவர்களுக்கும் சுமார் ஆயிரம் வருடத்திற்குப் பின்னர் பிறந்துள்ளவர். தனது கற்பனையினால் சில கவிதைகளை இயற்றி அதில் இப்படி அலி (ரலி), ஃபாத்திமா (ரலி) திருமணத்தைக் கற்பனையாகப் பாடியுள்ளார். இதை செயல்படுத்தும் நமது தமிழ் உறுது முஸ்லிம் மக்கள் நபிவழியை சுன்னத்தை செயல்படுத்தவில்லை என்பதை அறியலாம். ஆகையால் நாம் நபி வழியை கடைபிடித்தால் இம்மையில், மறுமையில் வெற்றி பெறுவோம்.
மணமக்களின் பிரார்த்தனை (துஆ):-
லயின் அதய்தனா ஸாலிஹன் லநகூனன்ன மினஷ் ஷாகிரீன்” (7:189)
எங்களிறைவா! எங்களிருவருக்கும் நீ நல்லதை (சந்ததியை) கொடுத்தால் நிச்சயமாக நாங்களிருவரும் நன்றியுடையவர்களாக இருப்போம். (அல்குர்ஆன் 7:189)
(ஆதிமனிதர் ஆதம் (அலை) அவரது துணைவியார் ஹவ்வா (அலை) அவர்களுடன் கேட்ட பிரார்த்தனை)
“ரப்பீஹப்லி மின்லதுன்க துர்ரியய்யதன் தைய்யிபதன் இன்னக்க சமிஉத்துஆ”
இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளைச் செவிமடுப்பவன். (அல்குர்ஆன் 3:38)
(ஜக்கரிய்யா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)
மணமகனின் பிரார்த்தனை (துஆ):-
ரப்பனா ஹப்லலனா மின் அஜ்வாஜினா வ துர்ரிய்யாதினா குர்ரத்த அயுனின் வ ஜஅல்னா லில் முத்தகீன இமாமா”
எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்கு கண்களின் குளிர்ச்சியைத் தருவாயாக! இன்னும் இறையுணர்வுடையோர்க்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கி அருள்வாயாக.(அல்குர்ஆன் 25:74)
(ரஹ்மானின் நல்லடியார்கள் கேட்கும் பிரார்த்தனைகளில் ஒன்று பார்க்க 25:67 முதல் 75 வசனங்கள்)
ஒரு பெண்ணை மணமுடித்ததும் அவளது முன்னெற்றி ரோமத்தை பிடித்திக் கொண்டு மணமகன்:
அல்லாஹ_ம்ம இன்னீ அஸ்அலுக ஹைரஹா வஹைர மா ஜபல்த்த அலைஹி வ அவூது பிக மின் ஷர்ரிஹா வஷர்ரி மாஜபல்த்த அலைஹி”
என்று பரகத்துக்காக துஆ செய்ய வேண்டும்.
பொருள்: இறைவா! இப்பெண்ணிடமிருந்து (எனக்கு) நன்மையானவை கிடைக்க வேண்டுமென்றும், இப்பெண்ணின் இயல்புகளிலிருந்து எனக்கு நன்மையானவை கிடைக்க வேண்டுமென்றும், உன்னிடம் வேண்டுகிறேன். மேலும் இப்பெண்ணிடமிருந்து தீங்குகள் ஏற்படாமலிருக்கவும் உன்னிடம் வேண்டுகிறேன். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமர்பின் ஆஸ் (ரலி) ஆதாரம்: ஹாகிம்
19:16 | 0 comments | Read More

இறை விசுவாசிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இறை விசுவாசிகளே!
நாம் சம்பாதிக்கவேண்டும், உயர்ந்த மாளிகைகளைப் போன்ற வீடுகளை கட்ட வேண்டும் அதில் அழகிய துணைகளுடனும் வாரிசுகளுடனும் குடிபுக வேண்டும் என்று சிந்திப்போம் அதற்கான திட்டங்கள் தீட்டி அதை நடைமுறைப் படுத்துவோம் அதில் சிலருக்கு அல்லாஹ் வெற்றி அளிப்பான் மற்றும் சிலருக்கு தோல்வியளிப்பான்.


தங்கள் எண்ணங்களில் வெற்றிபெற்றவர்கள் அல்லாஹ்வின் கிருபை கிடைத்து விட்டதாக எண்ணி ஆனந்தமாக இருப்பார்கள் மற்றும் சிலரோ தன் எண்ணங்களில் தோல்வியடைந்தவர்களாக விரக்தியடைந்தும் அல்லாஹ்வின் கிருபை கிடைக்கவில்லை என்று எண்ணி சலிப்படைந்து வாழ்ந்து வருவார்கள்.


சகோதரர்களே! சிந்தித்துப்பாருங்கள்! நாம் எங்கே இருக்கிறோம்! பணம், பொருள், மனைவி மக்கள், வசதிவாய்ப்புகள் இவைகள்தான் நமக்கு அல்லாஹ்விடம் கிடைத்த அருட்கொடைகளா?

அல்லாஹ் நமக்கு ஏதோ ஒன்றை அருளிவிட்டால் உடனே ”அர் ரஹ்மான்! அர்ரஹ்மான்” என்று கூறுகிறோம்! ஆனால் நாம் நினைத்தது நடக்காமல் போகும்பட்சத்தில் சோகமே உருவானதாக எண்ணிக் கொண்டு அல்லாஹ்வைத் தவிர வேறு ஏதாவது ஒரு சக்தி கைகொடுக்குமா? என்று ஏங்கி அதைத் தேடும் பாதைகளில் அமர்ந்துவிடுகிறோம்!

ஏன் நீங்கள் நினைத்ததை அல்லாஹ் நிச்சயம் நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களா? இப்படி நீங்கள் நினைத்து விடாதீர்கள் காரணம் நீங்கள் இப்படி நினைத்துவிட்டால் இது பாவங் களிலேயே மிகப்பெரிய பாவமாக மாறிவிடும் மேலும் ”அல்லாஹ்வுக்கு நாம் அடிமை” என்ற கொள்கை தலைகீழாக மாறிவிடும்! (அல்லாஹ் என்னை மன்னிப்பானாக!).

சகோதரர்களே இந்த உலக வாழ்கை பற்றி அல்லாஹ் கூறும் போது
“இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை” (ஆலஇம்ரான்:185)

 மேலும் இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வீணுமேயன்றி (வேறு) இல்லை. இன்னும் பயபக்தியுடையோருக்கு நிச்சயமாக மறுமையின் வீடு மேலானதாகும்” (அல்அன்ஆம்: 32)

அல்லாஹ் நம்மை துரத்தி துரத்தி உதவிக் கொண்டிருக்கிறான் நாம் அதை சிந்திப்பதில்லையே!
சகோதரர்களே நீங்கள் இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கின்றீர்கள் சற்று தங்களைப்பற்றி கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்!
  • சென்ற வினாடி நாம் எங்கே இருந்தோம்
  • சென்ற வாரம் நாம் எங்கே இருந்தோம்
  • சென்ற மாதம் நாம் எங்கே இருந்தோம்
  • சென்ற வருடம் நாம் எங்கே இருந்தோம்
  • பிறப்பதற்கு முன் நாம் எங்கே இருந்தோம்
(குழப்பமாக இருக்கிறதா? இதுதான் வாழ்க்கை!)

நம்மை பாலூட்டி, அறிவுட்டி வளர்த்த அருமைத் தாய் கர்ப்பம் தறிக்கும் முன் நாம் அற்பத்திலும் அற்பமான ஒரு கொசுவின் சடலமாக கூட இருக்கவில்லையே! அதைவிட கொடுமை ஒரு சூனியமாக (புஜ்ஜியமாக) கூட இருக்கவில்லையே! இப்படிப்பட்ட நிலையில் அல்லாஹ் நாம் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நம் தாயின் வயிற்றில் ஒரு அற்பமான நீர்த்துளியால் (இந்திரியத்துளியாக) நம்மை செலுத்தி அந்த நீர்த்துளிக்குள் நம் உயிரை ஊதினானே! அவன் ரஹ்மானில்லையா?


தாயின் வயிற்றில் நம்மை ஒப்படைத்து உதவினானே!
உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து. (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே, சிந்தித்து விளங்கிக் கொள்ள கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்கள் விவரித்துள்ளோம் (6-98)


நம் உயிருக்கு உடல் கொடுத்து உதவினானே!
அவன்தான் கர்ப்ப கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை, அவன் யாரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான் (3-6)

தாயின் கர்ப்பப் பையில் நம் உயிரை கண்காணித்து உதவினானே! ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப் பைகள் சுருங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.  ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது (13-8)


வளரும் பருவத்தில் நமக்கு கல்வி அறிவைக் கொடுத்தானே!
”(நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். நீர் ஓதும், உமது இறைவன் மாபெரும் கொடையாளி, அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாத வற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.” (96:5)


நமக்கு வாழ வழிவகை செய்து ஆற்றலை கொடுத்தானே!
நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். (அல்குர்ஆன்: 16:14)


நமக்கு ஆற்றல் மட்டும் போதுமா என்று எண்ணி நம் ஆற்றலுக்கு உதவியும் செய்தானே!
அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று)  வெளிப் படுத்தப்படுவீர்கள்.  (43:11)


மனிதர்களுக்கு குறைகளும் கொடுத்தான் அந்த குறைகளால் நிறைகளும் கொடுத்தானே!
சகோதரர்களே, அல்லாஹ் சிலர் சிலருக்கு உடலளவில் குறைபாடுகள் கொடுத்தான் ஆனால் நாமோ இந்த குறைபாடுகளை கண்டு ஏன் இவர்களை இவ்வாறு இறைவன் படைத்தான் என்று எண்ணிக் கொண்டிருப்போம்! ஆனால் அல்லாஹ்வோ யாருக்கு குறைகள் கொடுத்தானோ அவர்களுக்கு நிறைகளையும் கொடுத்து உதவுகிறானே! சிந்தித்துப்பாருங்கள்!


கண்பார்வை இல்லாதவர்கள் எதனையும் காண முடியாது இது அவர்களுக்கு உள்ள குறை அதே வேளையில் காதுகளில் நுண்ணறிவோடு கேட்கும் சக்தி அதிகமாக்கித்தந்தானே! இதை விட சிறந்த உதவியாக கண்பார்வையற்றவர்கள் கண்களின் விபச்சாரத் திலிருந்து பாதுகாப்பு பெறுகிறார்களே! மஹ்ஷரில் அவர்களுக்கு எதிராக அவர்களது கண்களுக்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?

காது கேளாதோருக்கு கேட்கும் திறன் குறைவாக இருக்கும் இவ்வாறு உள்ளவர்களுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்குமே! அதே வேளையில் காது கேளாதவர்கள் தீய வார்த்தைகளை கேட்காமல் தீய பாடல்களை கேட்காமல் இருப்பதானல் மஹ்ஷரில் அவர்களுக்கு எதிராக அவர்களது செவிக்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?


வாய்பேச முடியாத ஊமைகள் இருக்கிறார்கள் அவர்கள் தங்கள் வாய்களினால் எதனையும் பேச முடியாது ஆனால் அதே நேரம் அவர்கள் புறம் பேசுதல் போன்ற எந்த கெட்ட வார்த்தைகளையும் பேச முடியாதே அவர்களுக்கு மஹ்ஷரில் அவர்களின் வாய்க்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?

சகோதரர்களே! பிறக்கும் குழந்தைகளிலோ அல்லது ஏதாவது விபத்திலோ சிலருக்கு புத்தி சுவாதீனம் இல்லாமல் பைத்தியமாக இருப்பார்கள் அவர்கள் நிலையைக் கண்டால் நம்மில் சிலருக்கு பைத்தியம் என்று எண்ணி மனதளவில் சிரிப்பு வரும் ஆனால் இவர்களுக்கு உள்ள அருட்கொடைகளை எண்ணிப்பார்த்தால் நமக்கு வருத்தமளிக்கும் காரணம் இவர்கள் பிறவியிலேயே புத்திசுவாதீனமற்றவர்களாக இருந்தால் கேள்விக்கணக்கே இருக்காதே!  மேலும் இடையில் ஏதாவது விபத்துக்களால் புத்திசுவாதீனம் ஏற்பட்டால் அன்று முதல் அவர்கள் தன்னை அறியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக் குமே!  மேலும் மஹ்ஷரில் இப்படிப்பட்டவர்களின் உள்ளத்திற்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா!


இதையே திருமறை இவ்வாறு கூறுகிறது நாம் தான் சிந்திக்க தவறுகிறோம்
‘நிச்சயமாக செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்தும் (மறுமை நாளில்) விசாரிக்கப்படும்.. (அல்-குர்ஆன் 17:36)


சகோதரர்களே! இதை செவி தாழ்த்திக் கேளுங்கள்!
சகோதரர்களே நம்மில் சிலர் நம்மை வீடு தேடி வந்து உலகில் உயர்ந்த பொருள் (அல்லாஹ்வின் பார்வையில் அர்ப்பமான பொருள்) கொடுத்து உதவுவார்கள் அதற்கு பிரதிபலனாக உங் களிடம் உள்ள பொருள், பொன், ஆன்மக்கள், பெண் மக்கள், நற்பெயர் போன்ற எதையாவது எதிர்பார்ப்பார்கள் ஆனால் அல்லாஹ் உங்களுக்கு கிடைத்தற்கரிய உயிரை கொடுத்தான், உங்களுக்கு நிலத்திலும் உதவுகிறான்! நிலவிலும் உதவுகிறான்! காற்றில் பயணிக்கும் போதும் உதவுகிறான்! கடலில் பயணிக்கும் போதும் உதவுகிறான்!

ஏன் உங்களால் முடிந்தால் நீங்கள் பாம்பு பொந்துக்குள் ஓடி ஒழிந்துக் கொண்டாலும் அங்கும் சுவாசக் காற்றை கொடுத்து உதவுவானே! நீங்கள் நிலத்தில் சுரங்கம் தோண்டி தங்கத்தை வெட்டி எடுக்க முனைந்தாலும் அங்கும் காற்றை, நீர் மற்றும் உணவை கொடுத்து உதவுகிறானே!
ஏன் நீங்கள் மரணித்தால் நல்லவராக இருந்தால் கப்ருக்கடியில் சுவனத்தின் கதவை திறந்துவிட்டு என் அடியான் உறங்கட்டும் என்று ஆசைப்படுகிறானே!!! அல்லாஹ் ரஹ்மானில்லையா?  ரஹ்மத்துல் ஆலமீன் இல்லையா?

ஆனால் மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வின் உதவி கிடைக்கா விட்டால் உடனே விக்ரஹத்தையும் சமாதிகளையும் வணங்குகிறோம் அவைகள் உதவும் என்று எண்ணிக்கொள்கிறோம் இது அல்லாஹ்வுக்கு நாம் செய்யும் துரோக மில்லையா? இது படைத்த ரப்புல் ஆலமீனுக்கு எதிராக நாம் செய்யும் பாவமில்லையா? இது முறையா?

சிந்தியுங்கள் சகோதரர்களே உங்களுக்கு அளித்த அருட் கொடை களுக்கு பகரமாக அல்லாஹ் உங்களிடம் என்ன கேட்கிறான்! வாடகையா? கூலியா? உணவா? உடையா? கட்டணமா? ஒன்று மில்லையே! மாறாக கீழே உள்ள ஒன்றைத்தானே அவன் கேட்கி றான்!
உங்கள் இறைவன் கூறுகிறான்; ”என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக் கிறேன்;  எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமை யடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”( திருக்குர்ஆன் 40:60)

(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச்சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? (75-37)


நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (திருக்குர்ஆன் 40:61.)

அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலதாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியடையவன். (திருக்குர்ஆன் 40:64)
அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை – ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் – அனைத்துப் புகழும் அகிலங்கள்
எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும். (திருக்குர்ஆன் 40:65)

(நபியே!) கூறுவீராக ”என்னுடைய இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்த பொழுது, அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவற்றை வணங்குவதை
விட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன் – அன்றியும் – அகிலத்தின் இறைவனுக்கே அடிபணிய வேண்டும் என்று
கட்டளையிடப்பட்டிருக்கின்றேன்.” (திருக்குர்ஆன் 40:66)

சகோதர, சகோதரரிகளே நாம் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்!
அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் கைமாறு செய்யப்பட முடியாத உதவிகளையும் கொடுத்த அல்லாஹ்விற்கு அடிமையாக இருக்க விரும்புவீர்களா? அல்லது பேசினால்
பதிலளிக்காது!. கேட்டால் கொடுக்காத! ஏன் உங்களை திரும்பிக்கூட பார்க்காத ஏதாவது ஒன்றிற்கு அடிமையாக இருக்க விரும்புவீர்களா?
உங்களுக்கு சிறு உதவி இதோ!
அல்லாஹ்வின் அருட்கொடைகளை படித்தீர்கள் அந்த அல்லாஹ்விடம் எனக்கு எது உண்மை எது பொய் என்று புரிய வில்லை என் மூதாதையர்களின் வழியில் நான் இருக்கின்றேன் எனக்கு விக்ரஹ மற்றும் தர்கா வழிபாடுகளை விட்டுவிடு என்று கூறுவது புதிதாக உள்ளது மேலும் கஷ்டமாக உள்ளது எனவே எனக்கு எது உண்மை எது போலி என்று இணம் காட்டி நேர்வழி காட்டுவாயா? நான் பின்பற்றுகிறேன் என்று கண்ணீர்மழ்க கேட்டுப்பாருங்கள்! விந்துத்துளியாக இருந்த உங்களுக்கு உயிரை ஊதிய உங்கள் அல்லாஹ் (இன்ஷா அல்லாஹ்) உங்களுக்கு நேர்வழி காட்டி சுவனத்தைகூட அளிப்பான்!

நீங்கள் வணங்கும் விக்ரஹ்மோ அல்லது கப்ரோ உங்களுக்கு சுவனத்தை அளிக்குமா? யார் யாருக்கோ சிந்திப்பீர்கள் சற்று உங்களுக்காக! சிந்தித்துப்பாருங்கள் நேர்வழி கிடைக்கும் (இன்ஷா அல்லாஹ்) உங்கள் முடிவு உங்கள் கையில்! ஸலாம்


இறுதியாக அல்லாஹ்வின் வார்த்தை ஒன்றைச் சொல்லிக் கொண்டு இந்த மடலை முடித்துக்கொள்கிறேன்!
 என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ”நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்”  (என்பதைக் கூறுவீராக!) (அல்குர்ஆன் 2:186)


அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே)
04:03 | 0 comments | Read More