Welcome Guys

வருகையாளர்கள்

வடக்குமாங்குடி மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜமாஅத்.காம். Powered by Blogger.

புதிய ஆக்கங்கள்.

அல்லாஹ்வின் வீடான பள்ளிவாசல்களில் பாரபட்சமான நிலை ஏன்?


  ஃபாத்திமா ஷஹானா 

[ இன்று பள்ளிவாசல்கள் அல்லாஹ்விற்காக அல்லாமல் அப்பள்ளிவாசல்களை நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்காகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன.
அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்கு கட்டப்படும் பள்ளிவாசல்கள் பெரும்பாலானவற்றில் இன்று அல்வாஹ்வைத் தவிர வேறு நபர்களை வணங்கக்கூடியதான வழிபாடுகள் நடந்து வருகின்றன. ஏன் பள்ளிவாசல்களில் தர்ஹாக்களை வைத்துக் கொண்டு, மரணித்த அந்நபரிடம் பிரார்த்தித்தால் தமது தேவைகள் நிறைவேறும் என அல்லாஹ்வின் பண்புகளை இவ்வுலகில் வாழ்ந்து மரணித்த ஒரு மனிதருக்கு வழங்கி அல்லாஹ்விற்கு அவனது பள்ளிவாசல்களிலேயே இணை கற்பிக்கின்றனர்.
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அல்லாஹ்விற்கே இணை கற்பிக்கும் நிர்வாகிகள் அல்லாஹ்விற்கு தாம் இணை கற்பிப்பதையே பெரும் பாவமாகக் கருதாத நிலையில் பள்ளிவாசல் சுத்தத்தைப் பற்றியா கவனம் செலுத்தப்போகிறார்கள்?
இன்று பெரும்பாலான பள்ளிவாசல்களின் நிர்வாகம் முஸ்லிம் பெண்களையே மறந்துவிட்டது. ஒரு சிறிய இடமாவது பெண்களுக்கு ஒதுக்கியதாகத் தெரியவில்லை.
''பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்.என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' (நூல்: புகாரி 900, 873, 5238)

இன்று வெளியூருக்கு பிரயாணம் செய்யும் பலர் தம்முடைய வீட்டுப் பெண்கள் தொழுவதற்கு பள்ளிகளில் இடம் கேட்டால் அவர்களுக்கு இடம் கொடுக்கப்படுவதில்லை. இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தையை பகிரங்கமாக புரக்கணிப்பதாகும்.]

 அல்லாஹ்வின் வீடான பள்ளிவாசல்களில் பாரபட்சமான நிலை ஏன்?
உலகில் பல நாடுகளில் வாழ்கின்ற முஸ்லீம்களுக்கு பல வகைகளிலும் அவர்களின் உரிமைகள் பரிக்கப்படும் நிலையில் இலங்கையில் வாழும் முஸ்லீம்களுக்கு அதிகமான உரிமைகளையும் சழுகைகளையும் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளதையும்,வழங்கிக் கொண்டிருப்பதையும் நாம் அன்றாடம் காணக்கூடியதாக உள்ளது.

அந்த உரிமைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் நமது மத கிரியைகளை சுதந்திரமாக பின்பற்றும் உரிமையாகும்.
ஆனால் கவலைக்குறிய விஷயம் என்னவென்றால் மதத்தை பின்பற்றுவதிலும் மதம் தொடர்பான இடங்களை பயன்படுத்துவதிலும் ஆண்,பெண் என்ற பாகுபாடு காட்டப்படுகிறது.அது போல் பள்ளிகளை நிர்வகிப்பவர்களும் இந்த விஷயத்தில் பொடு போக்காகவே நடந்து கொள்கிறார்கள்.
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன் 2:114)
இந்த இறைவசனத்திலிருந்து பள்ளிவாசல்கள் அல்லாஹ்விற்குரியனவென்று அல்லாஹ்வே தெளிவாகக் கூறுகின்றான்.அது போல் அல்லாஹ்வை பயந்து கொண்டுதான் அவற்றுக்குள் நுழைய வேண்டும் என்றும் அல்லாஹ் மிகத் தெளிவாக இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான்.
அல்லாஹ்வின் விருந்தினர்கள் ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகைக்காக பள்ளிகளுக்கு வருகிறார்கள் அந்த சந்தர்பங்களில் சில பள்ளிகளில் அவர்களால் தொழுவதற்கு விருப்பம் வருவதில்லை ஏன் என்றால் அந்த பள்ளிகளில் தூய்மை பேணப்படுவதில்லை.மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தெளிவாக குறிப்பிடுகிறான். அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? யார் அல்லாஹ்வின் பள்ளிகளை பாழாக்க முனைகிறார்களோ அப்படிப்பட்டவர்கள் பெரும் அநீதி இழைத்தவர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இன்று சில பள்ளிவாசல்களைத் தவிர்த்து பல பள்ளிவாசல்களை எடுத்துக்கொண்டால் தொழுமிடத்தை மட்டும் சுத்தமாக வைத்துக் கொண்டு சுற்றிவர இருக்கும் வுழூ செய்யும் இடம், கழிவறை, பள்ளிவாசலை சுற்றியுள்ள வளாகம் இன்னும் கழிவறையில் வைக்கப்பட்டிருக்கும் வாளி போன்றவை தொடுவதற்கும் ஏன் பார்ப்பதற்குக் கூட அருவருப்பான நிலையில் உள்ளது. கழிவறையிலுள்ள துர்நாற்றம் தொழ வருபவர்களை மீண்டும் பள்ளிவாசல்களுக்கு வருவதையே தடுக்கின்றது. பள்ளிவாசல் கழிவறைகளில் வைக்கப்பட்டிருக்கும் வாளிகளிலும், கழிவறைகளிலுமுள்ள அசுத்தம் நம் உடம்பிலிருந்து வெளியாக்கும் கழிவுகளை விட அசுத்தமாகவுள்ளது. சில பள்ளிவாசல்களில் மேல் மாடிகளிலுள்ள தொழும் பாய்கள் கூட தூசி படிந்தவைகளாக உள்ளன. உண்மையில், நகர்ப்புற பள்ளிவாசல்களைவ விட ஏனைய பள்ளிவாசல்களிலேயே இந்த நிலை பெரும்பாலும் நிலவி வருகின்றது.
இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும். (அல்குர்ஆன் 9:17,18)
பள்ளிவாசல்களை நிர்வகிப்பதற்குரிய நிர்வாகிகளின் முதலாவது தகுதி இறையச்சமுள்ளவர்களாக இருக்க வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகிகள் அல்லாஹ்விற்கு மட்டும் பயந்து அவனுடைய கட்டளைகளை யாருக்கும், எதற்கும் விட்டுக் கொடுக்காது நடைமுறைப்படுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும். மேலுள்ள குர்ஆன் வசனத்திலிருந்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும் என்று அல்லாஹ்வே கூறுகின்றான்.
ஆனால், அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்கு கட்டப்படும் பள்ளிவாசல்கள் பெரும்பாலானவற்றில் இன்று அல்வாஹ்வைத் தவிர வேறு நபர்களை வணங்கக்கூடியதான வழிபாடுகள் நடந்து வருகின்றன. ஏன் பள்ளிவாசல்களில் தர்ஹாக்களை வைத்துக் கொண்டு அந்த மரணித்த மனிதருக்கு கராமத்துக்கள் இருந்ததாகவும் எனவே, மரணித்த அந்நபரிடம் பிரார்த்தித்தால் தமது தேவைகள் நிறைவேறும் என அல்லாஹ்வின் பண்புகளை இவ்வுலகில் வாழ்ந்து மரணித்த ஒரு மனிதருக்கு வழங்கி அல்லாஹ்விற்கு அவனது பள்ளிவாசல்களிலேயே இணை கற்பிக்கின்றனர். எனவேதான், மேலுள்ள குர்ஆன் வசனத்தில்; இணை கற்பிப்பவர்கள் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அல்லாஹ்விற்கே இணை கற்பிக்கும் நிர்வாகிகள் அல்லாஹ்விற்கு தாம் இணை கற்பிப்பதையே பெரும் பாவமாகக் கருதாத நிலையில் பள்ளிவாசல் சுத்தத்தைப் பற்றியா கவனம் செலுத்தப்போகிறார்கள்?
பெரும்பாலான பள்ளிவாசல்களில் இந்த நிலை இன்று காணப்படுகின்றது. பள்ளிவாசல்களினுள் டைல்ஸ் பிடித்து அழகான முறையில் அலங்காரங்களுடன் அமைத்து சுத்தமாக வைத்திருக்கின்றார்கள். ஆனால், சுற்றுப்புறச் சூழலும், கழிவறைகளும் ஒரு மனிதனுக்கு பள்ளிவாசலுக்கு வரும் எண்ணத்தையே வரவிடாமல் தடுக்கின்றுது.
''...பெண்களுக்குக் கடமைகள் இருப்பதுபோல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன். ஞானமிக்கவன்.'' (அல்குர்ஆன் 2:228)
மேலுள்ள வசனத்திலிருந்து ஆண்களுக்கு உரிமைகள் உள்ளது போல் பெண்களுக்கும் உரிமைகள் உள்ளது. என அல்லாஹ் தனது திருமறையிலேயே கூறுகின்றான். ஆனால், இன்று பெரும்பாலான பள்ளிவாசல்களின் நிர்வாகம் முஸ்லிம் பெண்களையே மறந்துவிட்டது. ஒரு சிறிய இடமாவது பெண்களுக்கு ஒதுக்கியதாகத் தெரியவில்லை. எல்லா பள்ளிவாசல்களையும் நான் இங்கு குறிப்பிடவில்லை. பெண்களுக்கு வந்து தொழுதுவிட்டு செல்வதற்கு இடம் ஒதுக்கியுள்ள சில பள்ளிவாசல் நிர்வாகங்களும் உள்ளன.
அதற்கு மாற்றமாக தூர பிரயாணங்களில் ஈடுபடும்போது பெண்கள் சில பள்ளிவாசல்களில் இறங்கி தங்களுக்கத் தொழுவதற்கு இடம் கேட்கும்போது பெண்களிற்கான தொழும் இடம் இல்லை எனவும், வேறு ஒரு இடத்தைக் காட்டி அங்கு தொழுமாறும் அந்த இடத்தில் தூசு படிந்து தொழ முடியாத நிலையில் உள்ளதால் எல்லோரும் தொழும் இடத்தில் தொழக் கேட்கின்ற போது இது ஆண்கள் தொழும் இடம் என்று மறுப்பதும் கவலைக்குரிய விஷயம். இது போல் பெண்களுக்கு இஸ்லாத்திலுள்ள உரிமைகள் பற்றி பள்ளிவாசல் நிர்வாகம் பாரபட்சமாக இருக்கும் நிலைமையையும், பெண்களும் முஸ்லிம்கள் என்பதை மறந்த நிலைமையையும், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களுக்கு இந்த உரிமை அளித்ததை மறந்த நிலைமையையும், பெண்களுக்கு ஏராளமான உரிமை தந்த இஸ்லாத்தில் பெண்களது உரிமைகளை மறந்த நிலைமையையும்.அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? நிர்வாகிகளே சிந்திக்க வேண்டாமா?
பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்.என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி: 900,873,5238)
இன்று வெளியூருக்கு பிரயாணம் செய்யும் பலர் தம்முடைய வீட்டுப் பெண்கள் தொழுவதற்கு பள்ளிகளில் இடம் கேட்டால் அவர்களுக்கு இடம் கொடுக்கப்படுவதில்லை. இது நபியவர்களின் வார்த்தையை பகிரங்கமாக புரக்கணிப்பதாகும்.
குறைந்த பட்சம் அந்தப் பெண்கள் தம்முடைய இயற்கைக் தேவைகளை நிறைவேற்றுவதற்கு கழிவறை வசதிகள் கூட செய்து தராதுள்ளனர். ஆண்களின் கழிவறைகளின் கட்டமைப்பு பெண்களுக்கு ஏற்ற வகையில் இல்லாததால் பெண்களுக்கென எல்லாப் பள்ளிவாசல்களிலும் கழிவறை குறைந்தது ஒன்றாவது கட்டப்பட்டிருக்க வேண்டும். பள்ளிவாசல்கள் அவ்வவ்வூரிலுள்ள முஸ்லிம் மக்கள் அனைவரினதும் ஒரு பொது இடம் என்பதால் எல்லோரினதும் தேவைகளை நிவர்த்தி செய்யும் இடமாகவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் இடமாகவும் இருக்க வேண்டும்.
ஆனால், இன்று பள்ளிவாசல்கள் அல்லாஹ்விற்காக அல்லாமல் அப்பள்ளிவாசல்களை நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்காகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன. நிர்வாகிகளே உணர்ந்து திருந்தாதவிடத்து இந்த நிலைமை நீடித்துக் கொண்டிருக்கும். அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்டிருக்கும் பள்ளிவாசல்களை தன் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக நிர்வகிக்கும் நிர்வாகிகள் இருக்கும் வரை பள்ளிவாசல்கள் முழுமையாக அல்லாஹ்வுக்காக கட்டுப்பட்;தாக கருதப்படாது.
அன்பின் சகோதர சகோதரிகளே!
அனைவரும் அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டு அல்லாஹ்வின் வீட்டை அல்லாஹ்விற்கு விருப்பமான வழிகளில் மட்டும் நிர்வகித்து மக்களுக்குப் பயன்படும் விதத்தில் நிர்வகிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறோம்
19:34 | 0 comments | Read More

திருமணத்தில் நடைபெறும் வழிகேடுகளுக்கு அந்தந்த ஊர் மு(த்)தவல்லிகளே பொறுப்பு!


 திருமணத்தில் நடைபெறும் வழிகேடுகளுக்கு அந்தந்த ஊர் மு(த்)தவல்லிகளே பொறுப்பு!

[ தீமை செய்வது மட்டுமல்ல தீமைக்கு சாட்சியாக இருப்பதும் குற்றமே என்பதை நாம் எப்படி மறந்தோம்?
அதுவும் ஒட்டுமொத்த உலக சமுதாயம் அனைத்திற்கும் வழிகாட்ட வேண்டிய நாம் எவ்வாறு நம்முடைய இடத்தையே இவ்வளவு அசுத்தமாக வைத்துள்ளோம்? இதைவிட வெட்கக்கேடு வேறு ஏதுமுண்டா?
சமுதாயங்களிலேயே உயர்வான சமுதாயம் என்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாம் முழங்கிக் கொண்டிருக்கிறோம்?
எழுத்தில் உள்ளதை செயலில் கொண்டுவர வக்கற்ற நமக்கு இதைச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது?

இனியாவது திருந்தி வாழ்ந்து நம் சமுதாய கண்ணியத்தை காப்பாற்ற வேண்டியது கலிமா சொன்ன ஒவ்வொருவரின் கடமையல்லவா? சிந்தியுங்கள் சகோதரர்களே, சிந்தியுங்கள்!]
‘எவருக்கு மூன்று பெண்; மக்கள் அல்லது மூன்று சகோதரிகள், அல்லது இரண்டு பெண் மக்கள் அல்லது இரண்டு சகோதரிகள் இருந்து அவர்களை நன்முறையில் பராமரித்து அவர்களுக்குரிய கடமைகளில் அல்லாஹ்வை பயந்து நடந்தால் அவருக்கு சுவர்க்கம் கிடைக்கும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஸயீத் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: திர்மிதீ)

‘எவர் தம் பெண் மக்களின் ஏதேனும் ஒரு காரியத்திற்குப் பொறுப்பேற்று மேலும் நன்முறையில் அவர்களைப் பராமரித்தால் அவர்கள் (பெண் மக்கள்) அவரை (பராமரித்தவரை) நரக நெருப்பை விட்டும் தடுக்கும் திரையாகி விடுவார்கள்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தெரிவிக்கின்றார்கள். (நூல்: புகாரி)
எதிர்காலம் எப்படி இருக்கும்? என்ற எண்ணக் கனவுகளை இதயத்தில் ஏற்றி வைத்துப் பார்த்துத் தான் இந்தப் பொன்மொழிகளைப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர்ந்திருப்பதுபோல் தோன்றுகிறது.
இன்றைய நிகழ்காலம் சமுதாயத்தை எப்படிக் காய் நகர்த்தி, இருப்பவரைக் கூட கடைக்கோடிக்கு இழுத்துச் செல்கிறது என்பது நாமறிந்த விஷயம் தான். வசதி இருப்பவன் பெண்பிள்ளையைப் பெற்றால் அவனும் ஓட்டாண்டியாக்கி விடுகிறது இன்றைய சமூகச் சூழல். பெற்றெடுத்த பெண் மக்காள் மட்டுமல்ல உடன் பிறந்த சகோதரிகளால் கூட சில சகோதரர்கள் பிச்சாதிபதிகளாகி விடுகிறார்கள். நலிந்த வயோதிகத் தந்தையின் பாரத்தை தன் தலையில் சுமந்து கொண்டு உடன் பிறந்த சகோதரிகளின் திருமண வாழ்க்கைக்காக கையேந்தி வரும் அண்ணன்மார்கள் ஆயிரமாயிரம பேர் தெருத்தெருவாக திரிகின்றனர்.

 பட்டதாரி யாசகர் :

ஒரு முஸ்லிம் சகோதரர் வருடந்தோரும் ரமளான் காலத்தில் வசூலுக்கு வந்துவிடுவார். பள்ளிவாசலில் பயான் செய்வார். கிடைப்பதைப் பெற்றுக் கொள்வார். கடைவீதியிலும் கையேந்துவார். தனியாரிடமும் தன்னைப்பற்றி தெரிவித்துப் பெறுவார். வருடம் தவறினாலும் வருகை தவறாது.
அவரது தாடி, தோற்றம், ஜுப்பாவைப்பார்த்து இவர் இமாம் - ஒரு ஆலிம் - மார்க்க மேதை என நினைத்து ஒரு ஊரின் இமாம் இவரை நெருங்கினார். அவரை நெருக்கமாக விசாரிக்கும்போது உண்மையை மறைக்க முடியாமல் தன்னைப்பற்றி எல்லாவற்றையும் கொட்டிவிட்டார்.
‘என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் ஹஜரத்! நான் ஆலிமோ அறிஞரோ அல்ல! நான் ஒரு பட்டதாரி. ஊரிலே அரசுப்பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். எனது தந்தை எனது இருபதாவது வயதில் வஃபாத்தாகி விட்டார். அப்போது எனக்கு இரண்டு அக்காவும் ஒரு தங்கைளும் இருந்தனர். எனது படிப்பின் ஆர்வத்தைக் கண்ட எங்கள் ஊரிலுள்ள ஒரு முதலாளி பட்டப்படிப்பு வரை படிக்க வைத்து எங்கள் ஊரிலேயே வேலையும் வாங்கிக் கொடுத்தார். ஒரு அக்காவுக்கு திருமண உதவியும் செய்தார். கொஞ்ச நாட்களுக்கு முன்பு அவரும் வஃபாத்தாகி விட்டார். அவரின் மகனை நம்பியிருந்தேன். தகப்பனார் போல் பிள்ளை இல்லை.
நான் ஊரில் கண்ணியத்தோடு வார்ந்து கொண்டிருக்கிறேன். எனது அக்காவுக்காகவும் தங்கைக்காகவும் யாரையும் எதிர்பார்க்க முடியவில்லை. எனது வருமானம் குடும்ப செலவுக்கு சரியாக இருக்கும். அதை வைத்துக்கொண்டு எனது சகோதரிகளுக்கு என்னால் திருமணம் செய்துகொடுக்க முடியாது. எனவேதான் சமுதாயத்தை நம்பினேன். சமுதாயத்தில் நின்று கொண்டு அரசுப் பணியாளன் என்றால் உதவ முன்வர மாட்டார்கள். எனவே தான் இந்த உருவத்துக்குள் ஆகி விட்டேன். நான் ஒரு ‘ஆலிம் என்று தான் இரக்கப்பட்டு ஜகாத், ஸதகா கிடைக்கிறது. சமுதாயம் இரக்கப்படுகிறது!’ என்றார் கண்கள் கலங்கிட!
உடன்பிறந்த சகோதரிகளின் காரியத்திற்கும் பொறுப்பேற்று நிற்கும் இதுபோன்ற சகோதரர்களின் தியாத்தை என்னவென்பது. இதுபோன்றோர் வாழும் புனிதர்கள் என்பதில் ஐயமில்லை அல்லவா?


 சொத்தை இழக்கும் தந்தை :

தென் மாவட்டத்திலுள்ள சங்கைமிகு ஒரு கிராமத்தில் திருமணம் நடந்தது. பரம்பரை வைத்தியக் குடும்பம். ஆண் வாரிசு எதுவும் இல்லை. நான்கு பெண் பிள்ளைகள் மட்டுமே வாரிசுச் செல்வங்கள். மூத்த குமருக்கு நிகாஹ் முடிந்துவிட்டது. இரண்டாவது பெண்ணுக்கு நிகாஹ் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் இருபதுகளில் இரண்டு குமர்கள் பருவம் அடைந்து காத்திருக்கின்றனர்.
இந்த இரண்டாவது குமருக்கும் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வாலிபனாகி நிற்கும் ஒரு கடைச் சிப்பந்திக்கும் தான் திருமணம். இருமணம் இணைந்து திருமணமேற்கும் நறுமணத் தம்பதிகளின் ஒப்பந்தப் பதிவுப்பேழை படிக்கப்பட்டது. அதில் முக்கியஸ்தர்களின் கையொப்பத்தோடு மணமகனுக்கு வழங்கப்பட்டிருக்கும் சீதனப் பட்டியலும் எழுதப்பட்டுப் படிக்கப்பட்டது.
‘பெண்ணின் தாயும் தகப்பனும் குடியிருக்கும் இந்த வீட்டின் மேற்குப்புறப் பாதியை, மூத்த மகளுக்காக முன்பே சீதனமாகக் கொடுத்துவிட்டபடியால் இந்த வீட்டின் மீதமுள்ள கிழக்குப்புறப் பாதியை இந்த மணமகளாகிய இரண்டாம் மகளுக்கு சீதனமாகக் கொடுக்கப்படுகிறது. இரண்டாவது மகளும் அவளின் கணவரும் விரும்பும் வரை மணமகளைப் பெற்ற தாயும் தகப்பனும் இந்த வீட்டில் வசித்துக் கொள்ளலாம். அவர்களின் சம்மதம் இல்லாத பட்சத்தில் பெற்றோர்கள் வெளியேறிக்கொள்ள வேண்டும்’
பதிவு ஏடு படிக்கப்பட்டிருக்கும்போது, மணமகளின் தகப்பனார் முகம், கவிழ்ந்து இடது கரத்தை தலை நெற்றியில் வைத்துத் தன்னை அறியமால் விழி மலர்ந்து கொண்டிருக்கிறார். திறந்திருக்கும் விழிகளிலிருந்து கண்ணீர் மடியில் வடிந்தன்.
நான்கு பெண்களைப் பெற்ற அந்த தந்தை இரண்டாம் பெண்ணின் திருமணத்திலேயே இருக்கும் வீட்டை முழுமையாகப் பறிகொடுத்து நிற்கும் காட்சியைக் காணும்போது இதயமே நின்றுவிடும் போலத் தெரிந்தது. பெற்றெடுத்த பெண் பிள்ளைகளுக்காக கட்டிய வீட்டைவிட்டு வெளியேறும் நிலை. வீட்டுக்கு வந்த மருமகள் மனது வைத்தால் எந்த உரிமையும் இல்லாத ஜடமாகத் தனது பூர்வீக வீட்டில் நடமாடலாம். அவரின் இசைவு இல்லையென்றால் வாய் பொத்திக் கண் மூடி, கை கட்டி நடையைக் கட்டிவிட வேண்டியதுதான். (-முபல்லிகா ஏ.ஓ.நஜாத் முனவ்வரா, முதுகுளத்தூர்)

மேற்காணும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அவலங்களை அநியாயங்களை களைவது எப்படி?
 திருமணத்தில் நடைபெறும் வழிகேடுகளுக்கு அந்தந்த ஊர் மு(த்)தவல்லிகளே பொறுப்பு!

இஸ்லாமியத் திருமணத்தின்போது நடைபெறும் அத்தனை வழிகேடான செயல்களுக்கும் சாட்சியாக இருப்பது யார்? இவை அத்தனைக்கும் பொறுப்பதாரி யார்? யார்? யார்? இதை முற்றிலுமாக களைய முடியாதா? இதற்கு மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என்று மட்டுமே காரணம் சொல்லப்படுகிறது. இது முக்கிய காரணங்களில் ஒன்று தான். ஆனால் இவர்களைப் போல் முக்கிய குற்றவாளியாக கருதத்தகுந்தவர்கள் பலர் உண்டு. அதில் முக்கியமானவர்கள் அந்தந்த ஊர் மு(த்)தவல்லியும், நாட்டாண்மையும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் தான்.
ஒவ்வொரு ஊரின் பொறுப்பதாரிகளான இவர்கள் அனைவருமே நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லாமல் தப்ப முடியாது. திருமணத்தின்போது மாப்பிள்ளைக்கு இணையாக புத்தும்புது உடையணிந்து பவ்வியமாக மணமேடையில் அமர்ந்து கொண்டு சாட்சிக் கையெழுத்து போடும் இவர்களும் முக்கிய குற்றவாளிகளே! ஏனெனில் இவர்களிடம் தான் அல்லாஹ் அந்தந்த ஊரின் பொறுப்பை வழங்கியிருக்கின்றான் எனும்போது இவர்கள்தான் அதற்கு பொறுப்புதாரி.
இவர்களால் அதனை தடுத்து நிறத்த முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள். கேட்டால் அவர் கோபித்துக் கொள்வார், இவர் கோபித்துக் கொள்வார்! அல்லாஹ் கோபித்துக்கொள்வானே, அதை எண்ணி அஞ்ச வேண்டாமா?
வரதட்சணை வாங்கும் திருமணத்தில், இஸ்லாத்திற்கு புறம்பான செயல்பாடுகளுடன் நடைபெறும் திருமணத்தில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்ற ஒவ்வொரு ஊரின் மு(த்)தவல்லியும் நாட்டாண்மையும் சொல்லிப்பார்க்கட்டுமே! சொல்லிப்பார்கட்டுமே என்னஸ சொல்ல வேண்டும்! இல்லையெனில் மறுமையில் அவர்கள்கதி அதோ கதிதான்.
ஊரை நிர்வாகம் செய்யக்கூடிய – அதிகாரத்திலுள்ள இவர்கள் எவ்வாறு இதுபோன்ற மார்க்கத்திற்குப் புறம்பான செயலை நடத்துவதோடு அதனை பதிவும் செய்கிறார்கள்?! நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னால் இந்த திருமணப்பதிவுப் புத்தகம் வாசிக்கப்படும்போது இவர்கள் அனைவருமே குற்றவாளியாக்கப்பட்டு தண்டணையிலிருந்து தப்ப முடியாது என்பதை அவர்கள் சிறிதுகூட எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லையே!
இந்த ஒரு திருமணம் மட்டுமல்ல, இதுபோன்று நடத்தப்படும் ஒவ்வொரு திருமணத்தைப் பற்றியும் அவர்கள் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார்கள் என்பதை அதை அவர்களுக்கு உணர்த்த வேண்டிய ஆலிம்களும் மவுனம் சாதிப்பார்களானால் அவர்களும் இறை தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை அவர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும். மறுமை மிகவும் நெறுக்கத்தில்தான் இருக்கிறது என்பதை மறந்திட வேண்டாம்.
இஸ்லாத்தில் இல்லாத நூதனங்களை புகுத்திய குற்றம், அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் இட்ட கட்டளைகளுக்கும் மாற்றமாக நடக்கும் நடக்கும் இச்சம்பவங்களுக்கு துணைபோன குற்றம். அதிகாரமிருந்தும் அதை தடுக்காத குற்றம். இன்னும் அநீதி இழைக்கப்பட்ட அந்த மணப்பெண்ணின் துஆ அல்லாஹ்விடம் எவ்வித தடங்களுமின்று ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால் மறுமையில் இவர்கள் நிலை என்ன?
பதவி என்பது அலங்காரமல்ல. மிகப்பெரும் பொறுப்பு. சமூகத்தில் ஒரு மாற்றம் ஏற்படவேண்டுமானால் அது அதிகாரத்தில் இருப்பவர்களாலேயே முடியும். முஸ்லிம் ஜமாஅத்தார்களைப் பொறுத்தவரை அதிகார வர்க்கம் என்பது மு(த்)தவல்லியும் நாட்டாண்மைகளுமே! ஆகவே சமுதாயத்தை நேர்வழியில் நடத்திச்செல்ல வேண்டிய முழு பொறுப்பும் அவர்களைச் சார்ந்ததே! பொறுப்புகளை அவர்கள் சரிவர நிறைவேற்றாமல் தட்டிக்கழிப்பார்களேயானால் என்ன விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டிவரும் என்பதை அல்லாஹ்வின் திருவேதத்தைப்பார்த்து அவர்கள் தெளிவு பெறட்டும்.

 இத்தகைய சமூக அவலங்களை களையும் வழிகள் :

திருமணத்திற்கு அனுமதி வழங்காதபட்சத்தில் குழப்பம் வரும் என்றிருக்குமானால் திருமணத்திற்கு அனுமதி வழங்கினாலும் அந்தந்த ஊர் நிர்வாகத்தில் இருப்பவர்கள் எவரும் அந்த திருமணத்தில் கலந்து கொள்ளக் கூடாது. அதன் வாயிலாக இது வரதட்சணை வாங்கி நடத்தப்படும் திருமணம் என்பதை ஊர் மக்களுக்கு மறைமுகமாக அறிவிப்பு செய்தது போலாகிவிடுகிறது. சமுதாயத்தில் கவுரத்தை இழக்க பெரும்பான்மையோர் விரும்ப மாட்டார்கள். இன்ஷா அல்லாஹ், இது நல்ல ரிஸல்ட்டைக் கொடுக்கும்.
உண்ணும் உணவு ஹலாலாக இல்லாதபட்சத்தில் அவர்களின் ‘துஆ’ அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை என்பதை எல்லோரும் - அதுவும் குறிப்பாக தொழுகையாளிகள் எப்படி மறந்தார்கள்?
வரதட்சணைப்பெற்று நடத்தப்படும் திருமணத்தில் பரிமாறப்படும் உணவை திருமணம் நடத்தி வைக்கும் ‘இமாம்; சாஹிப்’ எக்காரணத்தை முன்னிட்டும் உண்ணக்கூடாது. ஏனெனில் ஒட்டுமொத்த சமுதாயத்திற்காகவும் இறைவனிடம் ‘துஆ’ செய்ய வேண்டிய இடத்தில் இருக்கக்கூடிய அவர்கள், இவர்கள் வழங்கக்கூடிய ‘தூய்மையற்ற’ உணவை உண்பதன் காரணமாக அவர்களுடைய ‘துஆ’ அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளடாமல் திருப்பியனுப்பப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டால் அது இந்த சமூகத்திற்கு அவர்கள் இழைக்கும் மாபெரும் துரோகமாகும்.
இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் போன்ற, இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களைப் போன்ற மாபெரும் அறிஞர்களின் துணிவு இக்கால உலமாக்களிடம் இல்லாமல் போனதே இன்றைய சமூக அவலங்கள் பலவற்றிற்குக் காரணமாக இருக்கிறது என்பதை எவர்தான் மறுக்க முடியும்?

தீமை செய்வது மட்டுமல்ல தீமைக்கு சாட்சியாக இருப்பதும் குற்றமே என்பதை நாம் எப்படி மறந்தோம்?

அதுவும் ஒட்டுமொத்த உலக சமுதாயம் அனைத்திற்கும் வழிகாட்ட வேண்டிய நாம் எவ்வாறு நம்முடைய இடத்தையே இவ்வளவு அசுத்தமாக வைத்துள்ளோம்? இதைவிட வெட்கக்கேடு வேறு ஏதுமுண்டா? சமுதாயங்களிலேயே உயர்வான சமுதாயம் என்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாம் முழங்கிக் கொண்டிருக்கிறோம்? எழுத்தில் உள்ளதை செயலில் கொண்டுவர வக்கற்ற நமக்கு இதைச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது? இனியாவது திருந்தி வாழ்ந்து நம் சமுதாய கண்ணியத்தை காப்பாற்ற வேண்டியது கலிமா சொன்ன ஒவ்வொருவரின் கடமையல்லவா? சிந்தியுங்கள் சகோதரர்களே, சிந்தியுங்கள்! சிந்திக்காதவரை தெளிவு கிடைக்காது. மறுமையில் கேள்வி கணக்கு கேட்கப்படும்போது நமக்கு எவரும் துணை புரிய மாட்டார்கள். நாம் தான் பதில் சொல்லியாக வேண்டும்.
வெறுமனே வாழ்ந்துவிட்டு மறைவதற்கல்ல இந்த பிறவி! திருமறையில் அல்லாஹ் தெளிவாகக்கூறிவிட்டான், மரணத்தையும் வாழ்வையும் அல்லாஹ் படைத்திருப்பது உங்களில் எவர் நல்லவர், எவர் தீயவர் என்பதை அறிவதற்காகவே! அதுமட்டுமல்ல, அல்லாஹ்வின் பார்வையில் கொசுவின் இறக்கைக்கு கூட சமமில்லாத இந்த உலக வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, கண்கள் காணாத, காதுகள் கேட்டிராத அற்புதமான சுகங்களை அள்ளித் தரக்கூடிய மறுமையின் சுவன வாழ்வை இழப்பானேன்!
எல்லாம் வல்ல அல்லாஹ் இறையச்சமுடையவர்களையும், இறைசட்டத்தை பின்பற்றக்கூடிய நிர்வாகத்தையும் ஒவ்வொரு முஸ்லிம் மஹல்லாவுக்கும் வழங்கி இந்த தீனுல் இஸ்லாத்தை செழித்தோங்கச் செய்வானாக. ஆமீன்.
19:32 | 0 comments | Read More

ஆரோக்கியமும் உடல் நலமும்...!


உங்கள் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் உங்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைவது அவசியம். இயற்கையோடு இணைந்து வாழ்வது ஆரோக்கிய வாழ்க்கைக்கு மிக முக்கியம். செக்ஸ் வாழ்க்கையும்
இயற்கையோடு இணைந்த ஒன்றுதான்.

செக்ஸ் என்பது ஆரோக்கியமான விஷயம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து உண்பதைப் போலவே, ஆரோக்கியமான செக்ஸ் நடவடிக்கைகள் தேர்ந்தெடுத்துப் பழகிக்கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் தங்களுடைய செக்ஸ் தேவைகளை மனம்விட்டுப் பேசிக் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கிடையே இதில் கூச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. மனம் விட்டுப் பேசி தேவைகளை பூர்த்தி செய்கிறபோது தாம்பத்யம் ஆரோக்கியம் பெறுகிறது.
செக்ஸ் பற்றி பேசுவதோ எழுதுவதோ தீண்டத்தகாத விஷயம் என்ற பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அது ஆரோக்கியமான விஷயம், ஆரோக்கியத்திற்குத் தேவையான விஷயம் என்பதை புரிந்து வைத்திருப்பவர்கள் மிக சிலரே! மனித இனவிருத்திக்கும், உணர்ச்சிப் பூர்வமான வாழ்க்கை அமைதிக்கும் தேவையான ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்துகொள்ள தயங்குவதே தவறான அணுகுமுறையாகும்.

செக்ஸ் என்பது உணர்ச்சிகளை மையமாகக் கொண்ட ஒன்றாக இருக்கிறது. தவிர, உடல் இயக்கத்திற்கு அடிப்படையாக உள்ள நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, உடலிலுள்ள மற்றொரு முக்கியமான ஹார்மோன் இயக்கமும் செக்ஸ் வாழ்க்கையுடன் நெருக்கமான தொடர்பு கொண்டதாக இருக்கிறது. எனவே, ஆரோக்கியவாழ்க்கை வாழ விரும்புகின்ற ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, செக்ஸ் உறவுகளில் ஆரோக்கியமான போக்கினை கடைப்பிடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது ஆகும்.

ஆரோக்கியத்திற்கும், செக்ஸ் உணர்ச்சி தேவை பூர்த்திக்கும் என்ன சம்பந்தம் என்பதை பார்க்கலாம். பருவமடைந்த பிறகுதான் செக்ஸ் உணர்ச்சியினை வெளிப்படையாக நாம் உணர்கிறோம். ஆனால் அந்த உணர்ச்சி குழந்தைப்பிராயத்திலேயே மறைமுகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.குழந்தைகளின் பல்வேறு நடவடிக்கைகளில் இதை பார்க்க முடியும்.
குறிப்பிட்ட ஒரு பருவத்தில் இந்த உணர்ச்சியை வெளிப்படையாக நாம் உணர்வதற்கக் காரணம் என்ன? இயற்கை, இனவிருத்தி வேலையை நாம் தொடங்க வேண்டும் என்பதற்காகவே இந்த உணர்ச்சியைத் தோற்றுவிக்கிறது. அதைப் பூர்த்தி செய்து வாழ்கின்றபோதுதான் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையினை நாம் வாழ்வதாக அர்த்தம். பசி எடுத்தால் சாப்பிடுகிறோம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்துகிறோம். அதைப்போலவே செக்ஸ் என்கிற உடற்பசி ஏற்பட்டால் அந்த தேவை பூர்த்தியாவது அவசியம். எல்லா உணர்ச்சி தேவைகளையும் போலவே செக்ஸ் உணர்ச்சி தேவைகளும் இயற்கையானதுதான்.
பசிக்கு உணவுன்னல், தாகத்திற்கு தண்ணீர் குடித்தல் போன்றவை தனிநபராக செய்துவிடக்கூடிய காரியங்களாகும். ஆனால் செக்ஸ் தேவை பூர்த்தி என்பது ஆண் பெண் ஆகிய இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். எனவேதான் இயற்கை ரொம்பவும் சாதுர்யமாக ஒரு குறிப்பிட்ட பருவத்தில் செக்ஸ் உணர்ச்சியைத் தோற்றுவிக்கிறது. இது இறைவனின் அற்புதமான ஏற்பாடு என்றே சொல்லலாம்.

ஆண் - பெண் கூட்டுறவுதான் செக்ஸ உணர்ச்சி தேவையின இருவரிடமும் பூர்த்தி செய்கிறது. அதனால் தான் குறிப்பிட்ட பருவத்தில் ஆணும் பெண்ணும் இணைந்து திருமணம் முடித்து நல்லறமான இல்லறம் எனும் தாம்பத்ய வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மனித வாழ்வில் இது ஒரு சுவாரசியமான விஷயம் என்றே சொல்ல வேண்டும்.

ஆணின் தேவையினைப் பெண்ணும், பெண்ணின் தேவையின ஆணும் பூர்த்தி செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இது பூர்த்தியாகும்போது தான் இருவரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடிகிறது. எனவே, ஆணின் தேவையினை பெண்ணும், பெண்ணின் தேவையினை ஆணும் உணர்ந்து தாம்பத்ய சுகத்தில் ஈடுபடுவதும் அவசியமாகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் ஒருவரின் ஆரோக்கியத்தை இன்னொருவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமிது.
ஆணின் ஆரோக்கியத்தை பெண்ணும், பெண்ணும் பெண்ணின் ஆரோக்கியத்தை ஆணும் காப்பாற்ற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இதனாலேயே தாம்பத்ய வாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒருவரின் செக்ஸ் தேவைகளை இன்னொருவர் புரிந்துகொண்டு வாழ்வது அவசியமாகிறது.
செக்ஸ் தேவைகள் பூர்த்தியாகாதபோது மன ஆரோக்கியம் முதலில் கெட்டுப்போகிறது. உணர்ச்சிப் பாதிப்புகள்தான் உடல் ஆரோக்கியம் கெடுவதற்கு முக்கிய காரணம். செக்ஸ் தேவைகள் பூர்த்தியாகாதபோது நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாகிறது. ஹார்மோன்களின் செயல்பாடுகளில் கோளாறு ஏற்படுகிறது. உணர்ச்சி தேவைகள் நிறைவேறாமல் போவதால், நிறைவேறாத ஆசைகள் ஆழ்மன பதிவுகளாகி தொல்லைகளைக் கொடுக்க ஆரம்பிக்கிறது. மன அளவிலும், உடல் அளவிலும் பல வகையான பாதிப்புகள் தோன்றுகின்றன.
சிலர் என்று சொல்வதைவிட பலர் தங்களிடம் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு செக்ஸ் தேவை பூர்த்தியாகாததுதான் காரணம் என்பதை உணராதவர்களாகவே இருக்கிறார்கள். தவிர இதுபோன்ற விஷயங்களை ஆரோக்கியத்தின் ஒரு அம்சமாக கருதுவதில்லை. அதை ஒரு கடமையாக மட்டுமே ஏற்று செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். அதன் பின்னே உள்ள உணர்ச்சி தேவைகளை எண்ணிப் பார்ப்பதில்லை. அற்புதமான தாம்பத்ய வாழ்க்கையில் கூட ஓர் இயந்திரமான செயல்பாடு போல ஆக்கிக் கொண்டு விடுகிறார்கள்.
தாம்பத்ய வாழ்க்கையில் கணவனும் மனைவியும் வேறு பல காரணங்களால் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கும், மன இறுக்கத்திற்கும் ஆளானாலும், முழுமையான, மனமொத்த செக்ஸ் உணர்வு கொள்கிற போது மன இறுக்கத்திலிருந்து விடுபட்டு விடுகிறார்கள். செக்ஸ் உணர்வு சரியான தன்மையில் நிகழாதபோது மன இறுக்கம் ஏற்படுகிறது. மன இறுக்கம் ரத்த அழுத்தம், இருதய கோளாறு, நரம்புத் தளர்ச்சி, குடல்புண் போன்ற பல்வேறு நோய்களுக்;கு காரணமாகிவிடுகிறது.

முழுமையான செக்ஸ் உணர்வின்போது உடலிலுள்ள அளைத்து உணர்ச்சிகளும் ஆரோக்கியமான சமநிலைக்கு வந்துவிடுகின்றன. இதனால் இறுக்கம் நீங்கி உடல் ஆரோக்கிய நிலையினைப் பெறுகிறது. இதனால்தான் இருதய நோயாளிகளும் கூட மிதமான செக்ஸ உணர்வு கொள்வதன் மூலம் அந்த நோயின் கடுமையின குறைத்துக்கொள்ள முடியும் என மருத்துவ நிபுணர்கள் அபிப்ராயப்படுகிறார்கள்.

இதுமட்டுமின்றி பலவிதமான மனநோய்களுக்கும் செக்ஸ் உறவில் திருப்தி ஏற்படாமல் போவதே காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனதில் ஏற்படும் குறைபாடுகள் உணர்ச்சி மோதல்களாக வெளிப்படலாம். உடல் ஆரோக்கிக் குறைவாக வெளிப்படலாம். எவ்வகையான வெளிப்பாடாயினும், வாழ்க்கையை அது பாதிக்கவே செய்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு செக்ஸ் நிறைவு தேவை என்பதை குறைத்து மதிப்பீடுவதற்கில்லை.
‘செக்ஸ் என்பது செக்ஸ் உறுப்புக்களில் இல்லை, மனதில்தான் இருக்கிறது’ என்று செக்ஸ் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஆரோக்கியமான செக்ஸ் உணர்ச்சிக்கு மனமே காரணமாகிறது. உங்கள் மனைவியை நீங்கள் நேசிக்காமல் அவருடன் முழுமையான செக்ஸ் உறவு கொள்வது சாத்தியமில்லை. எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ விரும்புகிற அனைவரும் செக்ஸ் உறவில் சிறப்பான கவனம் செலுத்துவது அவசியம். இதை பலர் தவற விடுவதால்தான் குடும்பத்தில் ஏற்படும் பிணக்குகளுக்கும், மனச்சோர்வுகளுக்கும் சில சமயங்களில் காரணம் தெரியாமல் தடுமாறுகிறோம்.
நமது ஆரோக்கியத்தை செம்மைப்படுத்துகின்ற சக்தி படைத்தது செக்ஸ் உணர்ச்சி. சிந்தனையைக் கூர்மையாக்கி வேகமாக செயல்படுகின்ற சக்தியும் அதற்குண்டு. தாம்பத்ய வாழ்க்கையில் ஆரோக்கியத்திற்கு முழுமையான செக்ஸ் உணர்வு இன்றியமையாதது என்பதை புரிந்து கொள்வோம். தாம்பத்யத்தை அர்த்தமுள்ளதாக்குவோம்.
-பி.எஸ். ஆச்சார்யா
03:47 | 0 comments | Read More

பா.ஜ.க. லீலை அம்பலம்...!

Karnataka ministers filmed watching porn in Assembly
பெங்களூர்:பாரதீய கலாச்சாரம், பண்பாடு என வாய்க்கிழிய பேசும் சங்க்பரிவார கூட்டத்தின் ஒழுக்கச் சீரழிவு அடிக்கடி அம்பலமாகி வருகிறது. கலவரம் அல்லது இனப் படுகொலைகளை நிகழ்த்தும் வேளையில் சங்க்பரிவாரத்தின் பாலியல் வக்கிரத்தின் உச்சக்கட்ட கோர முகத்தை நாம் பார்த்திருக்கிறோம். அதைப் போலவே பொதுவாழ்விலும் அவர்களின் வேடம் அடிக்கடி கலைந்து வருகிறது.
இந்நிலையில் இந்திய சட்டப்பேரவை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தலைகுனிவான சம்பவம் கர்நாடகா சட்டப்பேரவையில் நடந்தது. இரண்டு பாஜக அமைச்சர்கள் சட்டமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே மொபைல் போனில் ஆபாசப்படம் பார்த்துள்ளனர்!
இதனால் ஆளும் பாஜக.விற்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு அமைச்சர் லஷ்மண் சவாடி, மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் சி.சி. பாட்டீல் ஆகிய இருவரும் மொபைலில் ஆபாசப் படம் பார்த்ததாக உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று வீடியோ ஒளிப்பதிவுடன் செய்தி வெளியிட்டது பரபரப்பாகியுள்ளது.
எதிர்கட்சித் தலைவரான சித்தராமையா இவர்கள் இருவரையும் அவைக்குள்ளேயே இனி அனுமதிக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுவருடப் பிறப்பின் போது பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் பாகிஸ்தான் தேசியக் கொடி சங்க்பரிவார்களால் ஏற்றப்பட்டது குறித்த சூடான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இந்த அமைச்சர்கள் மொபைல் வீடியோவில் ஆபாசம் படம் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
இவர்களின் உறுப்பினர் பதவியை பறிக்கவேண்டும் என எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வர் சதானந்தா கவுடா கூறுகையில், “நடந்தது உண்மையென்றால் அவைத் தலைவர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். அவைத் தலைவர் போபையா, தான் இது குறித்து நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.
வடக்கு கர்நாடகா மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இரண்டு அமைச்சர்களும் இந்த நிகழ்வு குறித்து பதில் கூறாமல் நழுவிவிட்டனர்.
முன்னாள் முதல்வரும், ஜே.டி.எஸ். கட்சி தலைவருமான குமாரசாமி இது குறித்துக் கூறுஅகையில், “பாஜகவினர் மக்கள் இந்துக் கலாச்சாரத்தைப் பேணி காப்பது பற்றி வாய் கிழிய பேசி வருகிறது, ஆனால் அவர்கள் மனங்களிலும் செயல்களிலும் இவ்வளவு அசிங்கங்கள் இருக்கிறது பாருங்கள். கர்நாடகா சட்டசபை வரலாற்றிலேயே இச்சம்பவம் கறுத்த அத்தியாயமாகும்.” என்று கூறியுள்ளார்.
03:45 | 0 comments | Read More

ஹிஜ்ரத்தும் அதன் நினைவுகளும்

Post image for ஹிஜ்ரத்தும் அதன் நினைவுகளும் நாம் ஹிஜ்ரி 1433 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். ஹிஜ்ரி என்ற சொல்லை, இஸ்லாமிய ஆண்டுக்குத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு ஒரு வரலாற்று நிகழ்ச்சியுண்டு. அவ்வரலாற்று நிகழ்ச்சியையும், அந் நிகழ்ச்சியின் போது, சில கட்டங்களில் , நபி(ஸல்) அவர்கள் கொண்டிருந்த நல்லியல்புகளையும் காண்போம்.
இஸ்லாமியருக்கென தனியொரு ஆண்டுக் கணக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம், கலீபா உமர்(ரழி) அவர்கள் காலத்தில் எழுந்தது. நபித் தோழர்கள், அதை எந்தக் காலகட்டத்திலிருந்து துவக்குவது என்று ஆலோசித்தனர். முக்கியமான பல நிகழ்ச்சிகள் நடந்திருப்பினும், அவற்றில் நபி(ஸல்) அவர்கள், முதன் முதலாக, மக்காவை விட்டு, வெளியேறிய நிகழ்ச்சியையே, இஸ்லாமிய ஆண்டின் துவக்கக் காலமாகக் காலக்கட்டமாகக் கொள்ளலாமெனத் தீர்மானித்தனர்.
இஸ்லாமிய வரலாற்றில் , பல முக்கிய போர்கள் நிகழ்ந்துள்ளன. பல உடன்படிக்கைகள் நடந்துள்ளன. இவற்றிலொன்றை நினைவு கூர்ந்து, அதையே இஸ்லாமிய ஆண்டிற்குப் பெயராகவும், துவக்க கால கட்டமாகவும் வைத்திருக்கலாம். ஆனால், நபித் தோழர்கள், நபி(ஸல்) அவர்களின் மக்கத்து வெளியேற்றத்தையே (ஹிஜ்ரத்தையே) நமது ஆண்டின் துவக்க காலமாகவும், பெயராகவும் வைக்கத் தீர்மானித்தனர்.
நபி(ஸல்) அவர்கள், தோழர் அபூபக்கர்(ரழி) ஆகிய இருவர் மட்டுமே, மக்காவை விட்டு வெளியேறினர். மதீனாவுக்கு வந்த பின்பு தான், பத்ரு, உஹது மற்றும் பல தற்காப்புப் போர்கள் நடந்தன. இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது. பல உயிர்த் தியாகங்கள், சிறப்புமிக்க உடன்படிக்கைகள் நிகழ்ந்தன. இறுதியாக சுமார் பல ஆயிரக்கணக்கான மக்களுடன் மக்கா நகர் சென்று, அங்கும் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது.
இவ்வனைத்து நிகழ்ச்சிகளுக்கும் துவக்கமாக இருந்தது. நபி(ஸல்) அவர்களின் மக்கத்து வெளியேற்ற நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சி நடந்திராவிடில், மேற்காணும் நிகழ்ச்சிகளுக்கு இடமேது? அன்று நபி(ஸல்) அவர்களின் உயிருக்கே ஆபத்து வந்த போது, உயிர், உடமை உறவு அனைத்தையும் துறந்து , பிறந்த மண்ணையும் விட்டு, வெளியேறிய தியாகத்திற்கும், செயலுக்கும் முன்பாக, வேறெந்தச் செயலையும், வேறெவர் தியாகத்தையும், அருமை நபித் தோழர்கள், உயர்வாகக் கருதவில்லை.
அம்மாநபியின் தியாக, புனித வெளியேற்றமே இஸ்லாமிய மறு மலர்ச்சிக்காகவும், அதன் வரலாற்றில் ஓர் திருப்புமுனையாகவும் அமைந்தது, அத்தகைய ஹிஜ்ரத் நிகழ்ச்சியை இஸ்லாமிய ஆண்டுக்கு துவக்க காலமாகவும், ஹிஜ்ரத் என்ற சொல்லையே ஹிஜ்ரி ஆண்டின் பெயராகவும் வைத்தனர். இவ்வெளியேற்ற நிகழ்ச்சியின் சில கட்டங்களில் நபி(ஸல்) அவர்களின் நற்பண்பையும், நம்பிக்கை, உறுதியையும், இந்த ஹிஜ்ரி புத்தாண்டில் நினைவு கூர்வோம்.
நபி(ஸல்) அவர்களின் நேர்மையெனும் நற்பண்பு:-
நபி(ஸல்) அவர்களின் இல்லத்தை மக்கத்து காபிர்கள் முற்றுகையிட்டு, அவர்களைக் கொல்ல வாளேந்தி நிற்கின்றனர். வீட்டின் உள்ளே இருப்பவர்களின் நிலை எவ்வளவு பதட்டமாக இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இறைவனது கட்டளைக் கிணங்க வெளியேறும் அந்த பதட்டமான, இக்கட்டான நிலையிலும், நபி(ஸல்) அவர்கள் அலி(ரழி) அவர்களை அழைக்கிறார்கள். தாம் பிறரிடமிருந்து பெற்று, பாதுகாத்து வரும் அமானிதப் பொருட்களின் விபரத்தைக் கூறி அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பை அவர்களிடம் கொடுக்கிறார்கள்.
எத்தகைய ஆபத்தான மிக நெருக்கடியான சூழ்நிலையிலும் நபி(ஸல்) அவர்கள் தமது நேர்மை நிலையைப் பொறுப்புக்களை ஒப்படைக்கும் வகையில் கடைப்பிடித்திருக்கிறார்கள். மக்கா நகரில் தரம் அங்கிருந்த போது மட்டுமின்றி, தாம் வெளியேறிய பின்னரும் அஸ்ஸாதிக், அல் அமீன் எனும் தமது அருந்தகுதிக்கு இழுக்கு ஏற்படாவண்ணம் செய்து காட்டியதையுணர்ந்து அவ்வுன்னத நடைமுறையை நமது வாழ்வில் கடைபிடித் தொழுக வேண்டும்.
ஆனால் இன்று அமானிதப் பொருளை மோசடி செய்வதும், அமானித நிலையில் தமது பொறுப்பிலுள்ள அநாதைகள், விதவைகள் முதலியோரின் சொத்துக்களை விழுங்குவதும், பிறருக்குக் கடன் பட்டதை, தீர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்வின்றி, தமக்கு வியாபாரத்தில் ஏற்பட்டதோர் கஷ்டத்தைக் காரணம் காட்டி கொடுத்தவரின் பொருட்களை கபளீகரம் செய்துவிடும் ஏமாற்றுச் செயல்களையும் நாம் காண முடிகிறது.
இவ்வாறு அமானிதப் பொருட்களை பேணிக் காக்காமல் இருக்கும் பொறுப்பில்லாத தன்மையை, செயலை வல்ல அல்லாஹ் குர்ஆனில் எச்சரிப்பதைப் பார்ப்போம்.
“(விசுவாசிகளே! நிச்சயமாக நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விட வேண்டும்” என அல்லாஹ் கட்டளையிடுகிறான்.(4:58)
“தவிர நீங்கள் (செய்வது அக்கிரமம் என) அறிந்து கொண்டே உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்.” (8 : 27)
“நீங்கள் அநாதைகளின் பொருட்களை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்,(அவற்றிலுள்ள) நல்லதுக்குப் பதிலாக கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருட்களை உங்களுடைய பொருட்களுடன் (சேர்ந்து) விழுங்கி விடாதீர்கள். நிச்சயமாக இது மாபெரும் பாவமாகும்.” ( 4:2)
இன்னும் எவர்கள் தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களையும், வாக்குறுதிகளையும் பேணி, சாட்சியத்தில் தவறிழைக்காமலும், தொழுகையைப் பேணியும் வருகிறார்களோ, இத்தகையோர் தாம் சுவனபதியில் மிக்க கண்ணியப்படுத்தப்படுவார்கள். (70:32-35)
அல்லாஹ்வின் வல்லமையும் , அவனது தூதர் நபி(ஸல்) அவர்களின் ஈமான் உறுதியும்
நபி(ஸல்) அவர்கள் தமது இல்லத்திலிருந்து வெளியேறி விட்டதை உணர்ந்து கொண்டவுடன், அந்த மக்கா காபிர்கள், அவர்கள் சென்ற பாதையைப் பின் தொடர்கின்றனர். நபி(ஸல்) அவர்களும், அபூபக்கர்(ரழி) அவர்களும் மக்காவின் அருகிலுள்ள ஒரு குகையில் மறைந்திருக்கின்றனர். குகையின் மேற்புறத்தில் நடமாடும் காபிர்கள் தற்செயலாகக் குனிந்தாலும் இருவரும் தென்பட்டு விடும் அமைப்பில் மிக அபாய நிலையில் இருவரும் உள்ளே அமர்ந்திருந்தார்கள்.
தோழர் அபூபக்கர்(ரழி) அவர்கள் நபி அவர்களே! நாம் இப்போது இருவர் மட்டுமே இவ்விடத்திலிருக்கிறோம், அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறதே என கலக்கமுற்றார்கள்.
இதோ எல்லாம் வல்ல அல்லாஹ் தனது வல்லமையால், தனது தூதர் நபி(ஸல்) அவர்களையும், அவர்கள் தம் தோழர் அபூபக்கர் (ரழி) அவர்களையும் மிக அற்புதமாகக் காப்பாற்றிய நிலையை வெகு அழகாகச் சொல்லிக் காட்டுகிறான்.
(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அவருக்கு யாதொரு இழப்பும் இல்லை) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றிய போது, நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கிறான். குகையில் (அவனது நபி), இருவரில் ஒருவராக இருந்தபோது தமது தோழரிடம் “கவலைப்படாதீர் நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்.” என்று கூறினார் (அப்போது) அவர் மீது அல்லாஹ் தம் சாந்தியை இறக்கி வைத்தான். மேலும் நீங்கள் பார்க்க முடியாத படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான். நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான். (ஏனெனில்) அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும். அல்லாஹ் யாவற்றையும் மிகைப்போனும், ஞானமிக்கோனுமாவான். (9:40)
நபி(ஸல்) அவர்கள் இத்தகைய பேராபத்தான நிலையிலும் தமது நிலை தடுமாறி விடாது, வல்ல அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடையவர்களாக, அவன் ஒருவனே அன்றி தமக்கு பாதுகாவலர் வேறு யாருமில்லை எனும் நம்பிக்கையை ஊர்ஜிதம் செய்தவர்களாக, அருமை நண்பர் அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்களுக்கு பயப்படாதீர்! அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் வல்ல நாயன் நலமுடன் இருக்கும் பொழுது நாம் கவலைப்படுவானேன்? என்று அல்லாஹ்வைக் கூறி ஆறுதல் செய்ததை அனைவரும் உணர்ந்து படிப்பினை பெறுவோமாக.
ஆனால் இன்றைக்கு மக்கள் தமக்கேற்படும் துன்பம் துயரங்களை அகற்ற, வல்லமைமிக்க அல்லாஹ்வின் அபார சக்திகளை மறந்துவிட்டு, அவனது படைப்பினங்களிடம் பாதுகாப்புத் தேடியலையும் பரிதாப நிலையைப் பார்க்கிறோம். அவ்வாறு செய்வது பெருங்குற்றமான இணை வைத்தலில் சேர்க்கும் என்பதையும், இணைவைத்தல் ஒரு போதும் மன்னிக்கபடுவதில்லை என்பதையும் அவர்கள் உணர்வதில்லை.
இதோ வல்ல அல்லாஹ் தனது சிறிதும் ஐயமில்லாத சிறப்புமிகு வேதத்தில் அறிவிக்கின்றான்.
“இணை வைத்தல் மன்னிப்பில்லாக் குற்றம்”
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை அறவே மன்னிக்க மாட்டான்; அதல்லாதவற்றை தான் நாடியோருக்கு மன்னிப்பான், யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்கள். (4 : 48)
உதவியும், பாதுகாப்பும் :-
நிச்சயமாக அல்லாஹ்வின் ஆட்சி வானங்களிலும், பூமியிலும் உள்ளது. அவனைத் தவிர உங்களுக்குப் பாதுகாவலனோ துணை செய்பவனோ வேறு எவருமில்லை. இதை நீங்கள் அறியவில்லையா? (2 : 107)
எனினும், நீங்கள் அவனையே அழைப்பீர்கள், அப்போது அவன் எதற்காக அவனை அழைத்தீர்களோ, அத்துன்பத்தை தான் நாடினால் நீக்கி விடுவான். ( 6 : 41)
(நபியே!) நீர் கூறும் அல்லாஹ்வையன்றி நீங்கள் (பாதுகாவலர் என) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ, அவர்களை உங்கள் கஷ்டங்களை நீக்க அழைத்துப் பாருங்கள். (அவ்வாறு அழைத்தால்) அவர்கள் உங்களது யாதொரு கஷ்டத்தை நீக்கி வைக்கவோ, அல்லது திருப்பி விடவோ சக்தி அற்றவர்கள் (என்பதை உணர்வீர்கள்) (17 : 56)
நபி(ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் ஓர் திருப்பு முனையாக அமைந்துள்ளது போன்று, அவர்களின் வாழ்க்கை முறையும் மனித சமுதாயத்திற்கு ஒரு வழி காட்டலாக அமைந்திருப்பதை நாம் அறிந்திருந்தும் 1408 ஆண்டுகள் கழிந்த பிறகும் கூட நமது சமுதாயத்தில் உண்மையான இஸ்லாமியத் தன்மை உருவாக்கியுள்ளதா? அதன் தூய வாழ்வு துவங்கியிருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்த்து இப்புத்தாண்டில் நமது வாழ்வை இஸ்லாமிய நெறிகளின் பால் செலுத்தி சீர்படும் எண்ணத்துடன் அதை வரவேற்பதில் தான் உண்மையான புத்தாண்டின் மகிழ்வு அமைந்திருக்கிறது. வல்ல நாயன் நல்லதோர் திருப்புமுனையை நமது வாழ்விலும் நல்கி, நலம் பல பெற அருள் புரிவானாக! ஆமீன்.
இப்னு ஷேக்
19:46 | 0 comments | Read More

மரணத்தைத் தடுக்க மார்க்கம் உண்டா?”

Post image for மரணத்தைத் தடுக்க மார்க்கம் உண்டா?” பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதி உலகம் தோன்றிய நாளிலிருந்து இவ்வுலகில் பிறந்த அனைவரும் இறந்து போனார்கள். இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் அனைவரும் இறக்கத்தான் போகிறார்கள். உலகம் அழியும் வரை இனி பிறக்கப் போகிறவர்களும் இறப்பது நிச்சயம். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒருவருக்கும் ஒருபோதும் சந்தேகமே இல்லை.
ஏக இறைவனை ஏற்றுக் கொண்டோரும், ஏராளமான தெய்வங்கள் இருப்பதாக நம்பிக் கொண்டிருப்போரும், இறைவனையே ஏற்க மறுத்தோரும் ‘மண்ணில் பிறந்த அனைவருக்கும் மரணம் நிச்சயம்” என்பதில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. கண் முன்னே காண்பதை நம்புவதற்கு அறிவும் தேவையில்லை, ஆராய்ச்சியும் தேவையில்லை.
‘மரணத்தைத் தடுக்க ஏதேனும் மார்க்கம் உண்டா?” என்று ஆராய்ச்சி செய்தவர்களும் கூட ஒரு நாள் மரணித்துப் போனார்கள். குறைந்த பட்சம் தங்களுக்கு ஏற்பட்ட மரணத்தைத் தள்ளிப் போடக் கூட அவர்களால் இயலாமற்போனது. நாம் அனைவரும் ஒரு நாள் இறப்பது உறுதி. இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் எப்போது இறப்போம்? எப்படி இறப்போம்? எந்த இடத்தில் இறப்போம்? அந்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.
…தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (திருக்குர்ஆன் 31:34)
நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (திருக்குர்ஆன் 4:78)
மரணம் எங்கும், எப்பொழுதும், எப்படியும் ஏற்படலாம். வீட்டை விட்டு வெளியில் புறப்பட்டால் மறுபடியும் வீடு வந்து சேருவது நிச்சயமல்ல. வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றால் சொந்த ஊருக்குத் திரும்பி வருவது நிச்சயமல்ல. எனவே வீட்டை விட்டு வெளியில் புறப்படும்போது பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி (பொருள்: இறைவனின் பெயரால்…(புறப்படுகிறேன்) இறைவன் மீதே நம்பிக்கை வைத்தேன்) என்று சொல்லிக் கொண்டு புறப்பட வேண்டும். ஒருபோதும் போயிராத ஒரு இடத்துக்கு ஒருவர் எதிர்பாரா விதமாகப் போக நேரலாம். அந்த இடத்தில் அவர் மரணமடையலாம். ‘இறப்பதற்காகவே இவர்; இந்த இடத்துக்கு வந்தாரோ” என்று கூடச் சிலர் சொல்வதுண்டு.
ஒருவர் எந்த இடத்தில் மரணிக்க வேண்டும் என்று அல்லாஹ் தீர்மானித்து விட்டானோ அந்த இடத்துக்கு அவர் போக ஒரு தேவையை ஏற்படுத்துவான்.என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ அஸ்ஸா (ரலி) ஆதாரம்: திர்மிதி (2237)
அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும்போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறைவைக்க மாட்டார்கள். (திருக்குர்ஆன் 6:61)
(குஃப்ரை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் எவருடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களிடம்: “ஸலாமுன் அலைக்கும்” (“உங்கள் மீது சாந்தி உண்டாவதாக); நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) கருமங்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்” என்று அம்மலக்குகள் சொல்வார்கள். (திருக்குர்ஆன் 16:32)
ஆகிய வசனங்களிலும் இன்னும் பல்வேறு வசனங்களிலும் உயிரைக் கைப்பற்றுபவர்கள் பலர் என்று திருமறை குர்ஆன் கூறுகிறது.
உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக (திருக்குர்ஆன் 32:11)
என்னும் வசனம் தெளிவாகவே ஒவ்வொருவருக்கும் உயிரைக் கைப்பற்ற ஒரு வானவர் நியமிக்கப் பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. உலகில் பிறந்த கோடானுகோடி மக்களுக்கும் தனித்தனி வானவரா? என்று சிலர் கேட்கலாம். இந்தக் கேள்வி அர்த்தமற்றது. அல்லாஹ்வின் வல்லமையை குறைத்து மதிப்பிடுவதாகும். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக) கோடானு கோடி மக்களுக்கும் கோடானு கோடி வானவரை நியமிப்பது அல்லாஹ்வுக்கு இயலாத காரியமல்லவே!
உயிரை எடுக்கும் விதம் நற்செயல்கள் புரிந்து நல்லவராக வாழ்ந்த ஒருவர் மரணிக்கும் போது அவர் மகிழ்ச்சி அடையும் விதத்தில் அவருக்காக நியமிக்கப்பட்ட வானவர் அவரிடம் வருவார். எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி ‘அஞ்சாதீர்கள்! கவலைப் படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் பற்றிய நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.” எனக் கூறுவார்கள். (திருக்குர்ஆன் 41:30)
இறைவனை நிராகரித்து தீய செயல்கள் புரிந்து தீயவராக வாழ்ந்த ஒருவர் மரணிக்கும் போது அவரை பயமுறுத்தும் விதத்தில் அவருக்காக நியமிக்கப்பட்ட வானவர் அவரிடம் வருவார்.
அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) “உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்” (என்று கூறுவதை நீர் காண்பீர்). (திருக் குர்ஆன் 6:93)
இறைவனுக்கு இணை கற்பித்தவர்கள் மரணிக்கும் போது அந்த இறுதி நேரத்தில் அவர்களுக்கு உண்மை உணர்த்தப்படும்.
நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும்போது ‘அல்லாஹ்வை விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே என்று கேட்பார்கள் ‘அவர்கள் எங்களை விட்டும் மறைந்து விட்டனர் என்று கூறுவார்கள். தாம் (ஏக இறைவனை) மறுப்போராக இருந்தோம் எனத் தமக்கு எதிராகச் சாட்சி கூறுவர்கள். (திருக்குர்ஆன் 7:37)  
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.  (திருக்குர்ஆன் 2:28)
என‌வே ஒவோருவ‌ரும் த‌ன‌க்கும் ம‌ர‌ண‌ம் எந்த‌ வினாடியிலும் ஏற்ப‌டலாம் என்ப‌தை ம‌ன‌தில் நிறுத்தி ப‌டைத்த‌ இறைவ‌னை அஞ்சி வாழ்வ‌தும் அவ‌ன் வ‌ழி காட்ட‌லின் ப‌டியும் ந‌ட‌ப்போமாக‌.
A.அப்துஸ் ஸ‌லாம் ம‌ஸ்தூக்கா
19:45 | 0 comments | Read More

புகைப்பழக்கம்

Post image for புகைப்பழக்கம் நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும், நோய்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் மருத்துவ வல்லுனர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். புகைப்பிடிப்பவர்கள் மாத்திரமின்றி அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களும் கூட அப்புகையை சுவாசிக்க நேரிடுவதால் பல்வேறு உடல் கோளாறுகளுக்கும், வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள்.
    சுயமாக புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை அவர்களின் அருகில் þருந்தமையால் அவர்கள் விடும் புகையை உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி, அதன் காரணமாக அவர்களுக்கும் நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் புகைப்பிடிக்காவிட்டாலும் அருகில் இருந்து சுவாசிப்பதால் அவர்களை செயல் அற்ற புகைப்பிடிப்பவர்கள் (Passive Smokers) என்று மறுத்துவ ரீதியாக வகைப்படுத்தியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் இவ்விதம் பயங்கர கேடுகளை விளைவிக்கும் ஒரு ‘சமூக விரோதி’ புகைப்பிடித்தல் ஆகும் என்கின்றனர்.
    இறைமறையிலும், நபிமொழிகளிலும் புகைப்பிடித்தல் பற்றிய நேரடியான அறிவிப்புகள் காணப்படவில்லை எனினும், அது உடலுக்கு ஊறுகளையும், உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்கும் கொடிய பழக்கம் என்ற உண்மையின் அடிப்படையில் புகைப்பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை யார் மறுக்கமுடியும்?
    இஸ்லாமிய அடிப்படையில் உயிரை துரிதமாகவோ, படிப்படியாகவோ போகவல்ல  நஞ்சு போன்ற பொருட்களையும், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கவல்ல அல்லது உடல் கோளாறுகளை விளைவிக்க வல்ல பொருட்களையும் உண்ணுவதும் பருகுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது பொதுவான நியதி.
    நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:29)
    இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு சொல்லாதீர்கள்.  (அல்குர்ஆன் 2:195)
    உண்ணுங்கள் பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 7:31)
    மேலே கண்ட இறைவசனங்கள் மூலம் புகைபிடிப்பது மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய பழக்க வழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது உறுதியாகவில்லையா?
     மார்க்கம், மருத்துவம், ஒழுக்க ரீதியில் தீய பழக்கம் என கருதப்படுவதை முஸ்லிம்கள் தாமும் தவிர்த்து, சமுதாயத்தினரையும் தவிர்க்கத் தூண்டுவதை விடுத்து, தாமே அக்கொடிய பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் கேடாகும்.
    புகைப்பிடிப்பவர்களிடம் அதன் தீமைகளை எடுத்துரைத்து அப்பழக்கத்தை விட்டுவிடும்படி வேண்டினால் சாதாரணமாக அவர்கள் கூறுவது “புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் தெரியாமலில்லை; உடல் பாதிக்கப்படுவது உணராமலுமில்லை; ஆனால் பாழாய்ப்போன வழக்கத்தை விட முடியவில்லையே” என்பதுதான். புகைப்பிடிக்கும் அறிஞர்களும் கூட இதையே கூறுவது அவர்கள் கற்ற கல்விக்கும் பெற்ற அறிவுக்கும் அழகல்ல.
அப்துஸ்ஸமது  சென்னை
22:29 | 0 comments | Read More

மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்!

Post image for மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்!இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டங்களை அறிந்து, அதன் மேலான போதனையை எற்றுச் செயல்படும் உண்மை முஸ்லிம் கருணையாளராக இருப்பார். அவரது இதயத்தில் கருணை பொங்கி வழியும். பூமியில் உள்ளவர்களிடம் கருணை காட்டுவது வானத்திலுள்ளவனின் கருணைக்குக் காரணமாக அமையும் என்பதையும் அறிவார்.


    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.” மேலும் கூறினார்கள்: “மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.” (முஃஜமுத் தப்ரானி)
        முஸ்லிமின் இதயத்தில் கருணை விசாலமாக இருக்க வேண்டும். அதை தனது குடும்பம், மனைவி, மக்கள், உறவினர்கள் என்ற வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும் கருணையை விசாலப்படுத்த வேண்டும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் அனைத்து மக்களிடமும் கருணையுடன் நடந்து கொள்வதை ஈமானின் நிபந்தனைகளில் ஒன்றாகக் கூறினார்கள்.
    அபூ மூஸப் அல் அஷ்அரி (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
   “நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதும், தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே!  நாங்கள் அனைவரும் கருணையோடுதான் நடந்து கொள்கிறோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல. எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும். எல்லோருக்கும் பொதுவான கருணையாகும்” என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)
    இந்தக் கருணை, முஸ்லிமான தனிமனிதரின் இதயத்தில் பொங்கி எழுந்து உலக மக்கள் அனைவரையும் தழுவிக்கொள்ளும். ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் இஸ்லாம் இந்த நேசத்தை உருவாக்கி, இறுதியில் முஸ்லிம் சமுதாயத்தையே இரக்கமுள்ள சமுதாயமாக மாற்றுகிறது. பின்பு என்றென்றும் இந்த சமுதாயத்தில் தூய்மையான அன்பு, சுயநலமின்றி பிறர்நலம் பேணுதல், அழமான இரக்க சிந்தனை ஆகியவைகளின் அலைகள் ஒயாது அடித்துகொண்டே இருக்கும்.
    நபி (ஸல்) அவர்கள் கருணை காட்டுவதில் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அவர்களுடன் அது இரண்டறக் கலந்துவிட்டது. அவர்களது மனம் கருணையைப் பொழிந்தது. எந்தளவுக்கென்றால் அவர்கள் தொழுகையில் குழந்தையின் அழுகுரலைக் கேட்டார்கள். “குழந்தையின் அழுகையால் தாய்க்கு சிரமமேற்படுமே’ என நினைத்த நபி (ஸல்) அவர்களின் இதயத்தில் கருணை சுரந்து, தொழுகையை சுருக்கிக் கொண்டார்கள்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் தொழவைக்க ஆரம்பிக்கிறேன், அதை நீளமாக்க விரும்புகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்கிறேன். நான் குழந்தையின்  அழுகையால் அதன் தாய்க்கு எற்படும் சிரமத்தை எண்ணி எனது தொழுகையை சுருக்கிக் கொள்கிறேன்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    ஒரு நாள் கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் “நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவதில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    நபி (ஸல்) அவர்கள் தமது பேரரான ஹஸன் (ரழி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அருகிலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) “எனக்கு பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள்; நான் அவர்களில் எவரையும் முத்தமிட்டதில்லை” என்றார். அவரை நோக்கி பார்வையை செலுத்திய நபி (ஸல்) அவர்கள் “எவர் இரக்கம் காட்டவில்லையோ அவர் இரக்கம் காட்டப்படமாட்டார்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
    உமர் (ரழி) அவர்கள் ஒரு மனிதரை முஸ்லிம்களுக்குத் தலைவராக்க விரும்பினார்கள். அம்மனிதர் அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல “குழந்தைகளை முத்தமிடமாட்டேன்’ என்று சொல்வதைக் கேட்டார்கள். அவரைப் பொறுப்பாளராக்குவதை ரத்து செய்தவர்களாகக் கூறினார்கள்: “உமது மனம் உமது குழந்தைகளிடம் கருணை காட்ட வில்லையானால் எப்படி நீர் மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்து கொள்வீர்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை ஒருபோதும் தலைவராக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு அவரைத் தலைவராக்குவதற்கான அதிகாரப் பத்திரத்தைக் கிழித்தெறிந்தார்கள்.
    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”  முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று (குழந்தைகள்) மரணித்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.”  அனஸ்(ரலி) ஸஹீஹுல் புகாரி
    ஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரலி) அறிவித்தார்  நபி(ஸல்) அவர்கள்  கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்.
   (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.
    நபி (ஸல்) அவர்கள் கருணையின் வட்டத்தை மனிதர்களுடன் சுருக்கிக் கொள்ளாமல் அதனுள் விலங்கினங்களையும் இணைத்துக் கொண்டார்கள்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்றபோது கடுமையான தாகம் எற்பட்டது. ஒரு கிணற்றைக் கண்டு அதனுள் இறங்கி தண்ணீர் அருந்திவிட்டு வெளியேறினான். அப்போது அங்கு ஒரு நாய் தாகத்தால் நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருந்தது. அம்மனிதன் “எனக்கு ஏற்பட்ட தாகத்தைப் போன்றே இந்த நாய்க்கும் ஏற்பட்டுவிட்டது’ என்று நினைத்தவனாக கிணற்றினுள் இறங்கி தோலாலான தனது காலுறையில் நீரை நிரப்பிக் கொண்டு அதை தனது வாயில் கவ்வியபடி மேலே வந்து நாய்க்குத் தண்ணீர் புகட்டினான். அல்லாஹ் அவனின் நற்செயலுக்க பகரமாக அவனை மன்னித்து விட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள் “விலங்குகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு நற்கூலி கிடைக்குமா?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “உயிருள்ள ஒவ்வொரு பிராணியின் விஷயத்திலும் நற்கூலி உண்டு.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு பூனையின் விஷயத்தில் ஒரு பெண் வேதனையளிக்கப்பட்டாள். அவள் அதை அடைத்து வைத்துவிட்டாள். அது பசியால் செத்துவிட்டது. அதன் காரணமாக அவள் நரகத்தில் நுழைந்தாள். அப்போது (மலக்குகள்) கூறினார்கள், நீ அதற்கு உணவளிக்காமல், தண்ணீர் புகட்டாமல் அதை அடைத்துவிட்டாய். அதை நீ வெளியே விட்டிருந்தால் பூமியிலுள்ள பூச்சிகளை சாப்பிட்டிருக்கும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    நபி (ஸல்) அவர்கள் ஒர் இடத்தில் தங்கியபோது ஒரு பறவை நபி (ஸல்) அவர்களின் தலையின்மேல் பறந்து கொண்டிருந்தது. ஒருவர் தனது முட்டையை எடுத்து அநீதமிழைத்தது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டது போன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் “உங்களில் இந்தப் பறவையின் முட்டையை எடுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! நான் அந்த முட்டையை எடுத்தேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள் “அதன் மீது கருணைகூர்ந்து அதை திருப்பிக் கொடுத்துவிடு” என்றார்கள். (முஃஜமுத் தப்ரானி)
       இந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் இதயங்களில் விசாலமான கருணைச் சிந்தனையை விதைத்துவிட எண்ணினார்கள். அப்போது அவர்கள் விலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுவதை தன் இயல்பாகக் கொள்வார்கள். விலங்கின் மீதே கருணை காட்டும் பண்பைப் பெற்றவர்கள் ஒருபோதும் மனிதனான தனது சகோதரனிடம் கருணையற்று கடுமையாக நடந்து கொள்ள மாட்டார்கள்.
    நபி (ஸல்) அவர்கள் மனிதகுலத்துக்கும் விலங்கினங்களுக்கும் கருணை காட்டவேண்டுமென கட்டளையிட்டார்கள். முஸ்லிம்கள் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என கற்றுக் கொடுத்தார்கள். அந்தக் கருணை முழு உலக முஸ்லிம்களையும் உள்ளடக்கி சமுதாயங்களையும் தேசங்களையும் சூழ்ந்துகொள்ள வேண்டும். பூமியில் கருணைப் பண்பு பரவலாகிவிடும்போது வானத்திலிருந்து அல்லாஹ்வின் கருணை பொழிகிறது.
முன்மாதிரி முஸ்லிம்
22:27 | 0 comments | Read More

ரபீஉல் அவ்வல்

   Post image for ரபீஉல் அவ்வல் ரபீஉல் அவ்வல் மாதம் முஸ்லிம் சமுதாயம் நாடு முழுவதும் மீலாது விழாக்கள் நடத்துவதையும், வீடுகள் தோறும் மவ்லூது ஓதுவதையும் கொண்டு நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது தங்களுக்குள்ள அன்பையும், பிரியத்தையும் வெளிப்படுத்துவதாக நம்பிக் கொண்டிருக்கிறது. இந்த சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் நபி صلى الله عليه وسلم அவர்களின் மறைவிற்கும் 600 ஆண்டுகள் கழித்தே மக்களின் மனோ இச்சைகளுக்கு ஏற்றவாறு தோற்றுவிக்கப்பட்டவையாகும்.
    மற்ற மதத்தவர்கள் எப்படி தங்கள் வேதங்களையும் மதச்சிறப்புகளையும் வேதாந்தமாகவும் வெற்று முழக்கங்களாகவும் ஆக்கி விட்டரனரோ அதே போல் முஸ்லிம்களும் இஸ்லாத்தின் தூய வாழ்க்கை நெறி முறைகளையும் வெற்று முழக்கங்களாகவும், பஜனை பாடுவதாகவும் ஆக்கிவிட்டார்கள் என்பதை இந்த மீலாது விழாக்களும் மவ்லூது சபைகளும் தெள்ளத் தெளிவாகப் பறை சாற்றுகின்றன. மாற்று மதத்தினரை அடி பிசகாமல் அப்படியே பின்பற்றி நடக்க ஆரம்பித்து விட்டனர் முஸ்லிம்களும்.
     நபி صلى الله عليه وسلم அவர்கள் இந்த சமுதாயத்தின் வழிகேட்டைப்பற்றி இவ்வாறு கூறுகின்றார்கள்.
“நீங்கள் உங்கள் முன்னோர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள். எதுவரை என்றால் அவர்கள் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் நீங்களும் அதனுள் நுழைவீர்கள்” என்று.அதற்கு நாங்கள் (நபித்தோழர்கள்) “அவர்கள் யகூதி, நஸரானிகளா? என்று கேட்டதற்கு, வேறு யார் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: அபூஸயீதுல் குத்ரீ(ரலி) நூல்: முஸ்லிம்-இல்ம், புகாரி-இஃதிஸாம்.
     முஸ்லிம்கள் தாங்கள் நடத்தும் இந்த மீலாது விழாக்களில் மாற்று மதத்தினரையும் அழைத்து அவர்கள் இஸ்லாத்தைப் பற்றியும், நபி صلى الله عليه وسلم அவர்களைப் பற்றியும் ஏற்றிப் போற்றிப் பேசுவதை பெருமையாக எண்ணும் துரதிஷ்ட நிலையும் இன்று நாடு முழுதும் பரவிவிட்டது. நாங்கள் போடுவது வெற்றுக் கோஷங்கள்தான் -வீண் முழக்கங்கள்தான் என்பதை இது கொண்டு உறுதிபடுத்துகின்றனர்.
     உள்ளும் புறமும் ஒருங்கே சீராகச் செயல்படும் உண்மையாளர்கள் ஒரு போதும் இவ்வாறு நடக்க முடியாது; பேச முடியாது. மேடைப் பேச்சு, கற்பனைப் பேச்சு, நயவஞ்சகப் பேச்சு என்பதுபோல் பீலாது மேடைகளையும் ஆக்கி வருகிறது இந்த முஸ்லிம் சமுதாயம். இது வேதனைக்குரிய விஷயமா இல்லையா?
     அல்லாஹ்வும் அவனது ரஸூலும் காட்டித்தராது, மனித கற்பனைகளைக் கொண்டும், யூகங்களைக் கொண்டும் நல்லவைகயாகக் கருதப்பட்டு செயல்படுத்தும் காரியங்கள் அனைத்தும் இறுதியில் சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பவையாக அமையுமே அல்லாமல் சமுதாயத்திற்குப் பலன் தரும் செயல்களாக ஒரு போதும் அமையாது.
     உண்மையில் நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது உறுதியான அன்புள்ளவர்கள், அவர்களை அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட உண்மைத் தூதர் என்று மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் இப்படிப்பட்ட வெற்றுச் சடங்குகளில் ஈடுபடமாட்டார்கள். ரபீஉல் அவ்வல் மாதம் மட்டும் மேடைகளை அமைத்துக் கற்பனைக் கவிதைகளான மவ்லூதுகளை ஓதுபவர்களாகவும் மீலாது மேடைகள் அமைத்து நுனி நாவில்  புகழ் பாடுபவர்களாகவும் இருக்க மாட்டார்கள்.
     நபி صلى الله عليه وسلم அவர்களுக்குப் பிறகு மனிதர்களால் உருவாக்கப்பட்டவற்றை மார்க்கமாக ஒரு போதும் எடுத்துச் செயல்படுத்தமாட்டார்கள். மாறாக வருடம் 365 நாட்களும், நபி صلى الله عليه وسلم அவர்களைத் தமது வழிகாட்டியாக மனப்பூர்வமாக ஏற்று அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி, குர்ஆனைக் கொண்டும் மட்டும் நிலை நாட்டப்பட்டுள்ள காரியங்களை மட்டும் மார்க்கமாக ஏற்றுச் செயல்படுவார்கள். அப்படிப்பட்ட உண்மை முஸ்லிம்களாக நாம் அனைவரும் வாழ அல்லாஹ்வின் அருள் கிட்டுமாக!.. thanks to..read islam
22:26 | 0 comments | Read More

பெரம்பலூர் மாவட்ட மக்களின் புது ஹீரோ தாரேஸ் அஹமது.


பெரம்பலூர் மாவட்ட மக்களின் புது ஹீரோ தாரேஸ் அஹமது. அதிரடியான மாவட்ட ஆட்சியர். ஒருநாள் பேருந்தில் மக்களோடு  மக்களாகப் பயணித்துக் கொண்டே அவர்களுடைய பிரச்னைகளை விசாரிப்பார். இன்னொருநாள் மாறுவேடத்தில் திரை அரங்குகளுக்குச் சென்று, டிக்கெட்டுக்குச் சரியான தொகைதான் வசூலிக்கிறார்களா என்று பார்ப்பார். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஓர் அலுவலகத்துக்கு அதிகாரிகளுக்கே தெரியாமல் அதிரடி விசிட் அடிப்பார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் பிரச்னைகளுக்காக இயங்குபவர்கள் கைகளில் நிச்சயம் தாரேஸ் அஹமதின் செல்பேசி எண் இருக்கும். குடிநீர்ப் பிரச்னையில் தொடங்கி சாதிச் சண்டைகள் வரை எங்கே எது நடந்தாலும் ஒரே ஒரு அழைப்பில் பிரச்னையை முடித்துக் கொள்கிறார்கள் பெரம்பலூர் மாவட்ட மக்கள்.

"நான் மருத்துவம் படிச்சவன். மக்களுக்கு எல்லா வகையிலும் உதவ இதுதான் சரியான வழின்னு தெரிஞ்சிகிட்டுதான் ஐ.ஏ.எஸ் முடிச்சேன். விவசாயம்தான் நமக்கு முக்கியம்கிறது என்னோட பாலிஸி. அதனால்தான், அடிக்கடி விவசாயிகளைத் தேடி வயல்களுக்கே போறேன். மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டிலும் முதல்வர்கிட்டே விவசாயிகளுக்காகத்தான் பேசினேன். இப்பக்கூட 'ஒருங்கிணைந்த விற்பனை நிலையம்' திறக்கப் போறோம். மக்களைத் தேடிப் போறதுதான் இந்த வேலையோட அடிப்படை. அப்படிப் பார்த்தால், நான் என் வேலையை மட்டும்தான் செய்றேன்" என்று அடக்கமாகப் பேசும் தாரேஸ் அஹம்மதுவின் பணியைப் பாராட்டி முதல்வர் பரிசு வழங்கி இருப்பதுதான் பெரம்பலூரில் இப்போதைய ஹாட் டாபிக்!

மக்கள் சேவைகளுள் சில:
  • பதவி ஏற்ற ஐந்து மாதங்களில் "மக்களைத் தேடி வருவாய்த்துறை" என்கிற திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் சுற்றி மக்களிடம் இருந்து 45 ஆயிரம் மனுக்களைப் பெற்றுள்ளார் தாரேஸ் அஹமது.
  • அதில் 75 சதவிகித மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாம்.
  • இது தவிர, கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்தி 20 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்குக் கல்விக் கடனும் வழங்கி உள்ளார்!

oOo

இவை போக, பெரம்பலூர் மாவட்டம் ஆண்டிமடம் எனும் ஊரில் அமைந்துள்ள Rural Education & Action Development (READ) எனும் மன நலம் குன்றிய மழலையருக்கான பயிற்சி மையத்தைக் கடந்த 23.6.2011இல் திறந்து வைத்து, இன்றும் அதன் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயலாற்றி வருகிறார் தாரேஸ் அஹ்மது.

மூட நம்பிக்கை: தெளிவாக்கிய தாரேஸ் அஹமது!
'ஒவ்வொரு அமாவாசைக்கும் பாம்பு சட்டையை உரிப்பது போலவே, எங்கள் ஊரில் சிறுவன் ராஜதுரையின் உடம்பிலும் தோல் உரிகிறது’ எனும் தகவல் ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-42890005) வரவே, பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் உள்ள கிருஷ்ணாபுரத்தை அடுத்த வெங்கலம் கிராமத்தில் ஆஜரானோம்.

ராஜதுரையின் வீட்டைக் கை காட்டிய உள்ளூர்​வாசிகள், குடும்பத் தகராறு காரணமாக அவனுடைய அம்மா கோகிலா, சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் இருப்பதாகவும், அப்பா அசோக்குமார் மறுமணம் செய்துகொண்டு தனியாக வசிப்பதாகவும் கூறினார்கள். கூலிவேலை செய்து பேரனைக் காப்பாற்றி வரும் பாட்டி சூடாமணியிடம் பேசினோம்.


''நாங்க குடும்பத்தோட டெல்லியில கூலி வேலை செஞ்சிக்கிட்டு இருந்தோம். அங்கதான் இவன் பொறந்து வளர்ந்தான். கைக்குழந்தையா இருந்தப்பவே இவனுக்குத் தோல் உரிய ஆரம்பிச்சது. டெல்லியில பனி அதிகமா இருக்கிறதால, தோல் உரியுதுன்னு அசட்டையா இருந்துட்டோம். பிறகு, அங்க வேலையில்லாம ஊரோட வந்துட்டோம். இப்பவும் அமாவாசை வந்தா, இவனோட உடம்புல தோல் உரிய ஆரம்பிக்கும். அன்னையில இருந்து ஆறேழு நாள் பட்டை பட்டையா பாம்பு சட்டையை உரிப்பது போலவே, தோல் உரிஞ்சிக்கிட்டு வரும். ரத்தம் கசியும். அந்த நேரத்துல வெதுவெதுப்பா சுடுதண்ணியில குளுப்பாட்டணும். இல்லைன்னா வலியில துடிச்சிடுவான். இவனுக்கு என்ன நோய்னு டாக்டர்களுக்கும் தெரியலை. அமாவாசையில இருந்து 10 நாள் வரைக்கும் இவனை பள்ளிக்​கூடத்துக்கு அனுப்​​பாம வீட்டோடே வச்சிருப்​பேன். அமாவாசை வந்தாலே பயமா இருக்​கு...'' என்றார் ஆதரவற்ற அந்த மூதாட்டி.


பாளம் பாளமாய் உடல்முழுக்க தோல் வெடித்துக் கிடக்க, தன் சகாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ராஜதுரையிடம் பேச்சுக் கொடுத்தோம். ''மாமா நான் ரெண்டாவது படிக்கிறேன். எனக்குப் படிக்கப் பிடிக்கும். ஆனா உடம்பு அரிக்குது... தூங்க முடியலை'' என்றான் மழலை மொழியில்.


சிறுவன் ராஜதுரையை, மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமதுவிடம் அழைத்துச் சொன்றோம். அடிப்படையில் மருத்துவர் என்பதால் ராஜதுரையைப் பரிசோதித்த பிறகு நம்மிடம் பேசிய கலெக்டர், ''இந்த நோயை 'ஆட்டோஇம்மியூன் டிஸார்டர் எகைன் சிண்ட்ரோம்’ என்பார்கள். கருத்தரிப்பில் ஏற்படுகிற ஜீன்களின் குறைபாடு அல்லது மரபுவழியாக இந்த நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. பனிக்காலங்களில் அதிகமாக தோல் உரியும். முழுதாகக் குணப்படுத்த இயலாவிட்டாலும் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம். இவனுக்குச் சிறப்பு மருத்துவம் கொடுக்க சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பாடு செய்கிறேன். இவனை, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைக்கவும் ஏற்பாடு செய்கிறேன்'' என்று உறுதியளித்தார்.


அந்த ஏழைகளின் சிரிப்பில் தெரிந்தது, நிஜ ஆனந்தம்.
22:21 | 0 comments | Read More

மீலாது விழா – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

 
மஸ்ஜிதுந் நபவீண்டுதோறும் ஹிஜ்ரி மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வலின் 12ஆவது நாளை, "ஈதே மீலாத்" என்ற பெயரில் முஸ்லிம்களில் அதிகமானோர் மிகவும் முக்கியத்துவம் அளித்துக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நாட்களுக்கு முஸ்லிம் சமூகம் அளிக்கும் முக்கியத்துவத்தினைக் கருத்தில் எடுத்து, மாற்றாரும் இந்நாட்களை இஸ்லாத்தின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் என்று இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தும் வருகின்றனர். அதற்கும் ஒருபடி மேலாக இந்திய அரசால் அந்நாள், இஸ்லாமிய அரசு விடுமுறையாகவே அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்த நாளின் பின்னணி என்ன?, இது நபிவழியில் அனுமதிக்கப்பட்டதா?, இதனைக் கடைபிடிப்பது ஸுன்னத்தா? பித்அத்தா? போன்ற பல ஆய்வுக் கட்டுரைகள் அவ்வப்போது வெளிவந்து மக்களை விழிப்புணர்ச்சியூட்டி வருவதும், வாத-பிரதி வாதங்களுடன் இது சரிகாணப்படுவதையும், மறுக்கப்படுவதையும் பரவலாக இந்திய அளவில் காண முடிகிறது.

அதேபோன்று இந்தியாவிலிருந்து அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் அங்கும் இதைப்பற்றிப் பேசுவதும், இங்கிருந்து சென்ற சிலர் அங்கும் மீலாது கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கூடும் நிலையும் உள்ளது. அரபு நாடுகளில் "மீலாது" என்ற பெயரில் விடுமுறையோ கொண்டாட்டங்களோ, சிறப்பு நிகழ்ச்சிகளோ நடைபெறுவதில்லை. நபி(ஸல்) அவர்கள் பிறந்த மக்காவிலோ, புலம்பெயர்ந்த மதீனாவிலோகூட இந்நாள்வரை மீலாது என்ற பெயரில் ஏதும் விசேஷ விடுமுறையோ, நிகழ்ச்சிகளோ இல்லையென்பதும் கவனிக்கப்படவேண்டிய உண்மையாகும்.

நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாட்களை மட்டுமே காட்டிச் சென்றார்கள். அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில், மக்களிடம் ஒட்டியிருந்த முந்தைய எல்லா அனாச்சாரக் கொண்டாட்டங்களையும் ஒழித்து, ரமலான் மாதத்தை ஒட்டி "ஈதுல் பிஃத்ர்" எனும் ஈகைப் பெருநாளையும் ஹஜ்ஜை ஒட்டிய "ஈதுல் அழ்ஹா" எனும் தியாகத் திருநாளையும் முஸ்லிம்களுக்கான விழாநாள்கள் என வரையறுத்தார்கள். நபி(ஸல்) அவர்களால் இஸ்லாமியப் பண்டிகை தினங்களாக அடையாளப் படுத்தப்பட்டு இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட பண்டிகை தினங்கள் இரண்டு மட்டுமே. இதனை இன்றும் அரபு நாடுகளில்  அதிகப்படுத்தாமல் கடைபிடிக்கப்பட்டு வருவதைக் காண முடிகின்றது.

ஈதே மீலாத் என்ற மீலாது எனும் விழா நபி(ஸல்) அவர்களால் காட்டித் தரப்படாத, அவர்கள் அங்கீகாரம் பெறாத ஒரு செயல் என்பதே தெளிவு. ஆயினும் ஈதே மீலாத் என்பதன் பொருள், இது பின்பற்றப்படுவதன் பின்னணி, மற்றும் மார்க்கத்தில் அதன் நிலை போன்றவற்றை முஸ்லிம்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

ஈத் என்றால் பெருநாள்-பண்டிகை என்று பொருள். மீலாத் என்றால் பிறப்பு என்று பொருள். ஆக, ஈதே மீலாத் என்றால், பிறந்த நாள் பண்டிகை(பெருநாள்) என்று பொருள். நபி(ஸல்) அவர்களின் பிறப்பைக் கொண்டாடும் முகமாக அவர்கள் பிறந்ததாகக் கருதப்படும் ரபியுல் அவ்வல் 12ஆம் நாளை ஈதே மீலாத் என முஸ்லிம்கள் கொண்டாடி வருகின்றனர்.

இன்று ஆங்கிலக் காலண்டரில் பல்வேறு பிற மதக் கடவுளர்கள், அரசியல் தலைவர்களின் பிறந்த நாள்களின் பட்டியலோடு 'மீலாது நபி'யும் இடம் பிடித்துள்ளது.

"நபி(ஸல்) அவர்களின் மீது அன்பு வைத்துள்ளவர்கள் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் தவறு ஒன்றும் இல்லையே" என்ற ஒரு கருத்தும், "நபி(ஸல்) அவர்களை நேசிப்பவர்கள் கண்டிப்பாக மீலாது விழா கொண்டாடியே ஆக வேண்டும்" என்ற ஒரு கருத்தும் இன்று பொதுவாக மக்கள் மனதில் பதிந்து கிடப்பதைக் காண முடிகிறது.

மார்க்கத்தில் இவ்வாறு ஒரு தினத்தை விஷேசமாகக் கொண்டாடுவதற்கு அனுமதி உள்ளதா? என்பதைப் பார்க்கும்முன் இந்நாட்களில் "மீலாதுக் கொண்டாட்டம்" என்ற பெயரில் நாட்டில் நடக்கும் விஷயங்களை முதலில் பட்டியலிடுவது அவசியமாகும்.

மீலாதுக் கொண்டாட்டத்தில் மௌலிது ஓதுதல், பொது மார்க்க நிகழ்ச்சிகள் நடத்துதல், ஊர்வலம் செல்லுதல் போன்றவை நடைமுறையில் உள்ளவற்றுள் முக்கியமானவையாகும். இன்றைய அரசியல் கட்சிகளின் ஊர்வலங்கள் மற்றும் பிற மதத்தினரின் ஊர்வலங்களில் நடக்கும் அனாச்சாரங்களை மிஞ்சும் விதத்தில் மீலாது விழா ஊர்வலங்கள் நடத்தப்படுவதும், அதன் மூலமாக சமூகத்தில் குழப்பங்களும், சண்டை சச்சரவுகள் ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டன.

ஊர்வலங்களின்போது மார்க்கம் அனுமதிக்காத விதத்தில் உச்சதொனியில் தக்பீர் முழங்குவதோடு, பிற மதத்தினரைச் சீண்டும் விதத்தில் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

மார்க்கம் அனுமதித்த விதத்தில் பொது நிகழ்ச்சிகள் மூலம் பிற மதத் தலைவர்கள், பிரமுகர்கள் முதல் அனைவருக்கும் இஸ்லாத்தினையும் இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும் எடுத்துரைப்பது தவறு அல்ல. அதே நேரத்தில் நபி(ஸல்) அவர்களால் காட்டித் தரப்படாத ஒரு நாளில் அதுவும் அதை பெருநாளாகக் கருதி செயல்படுத்துவது அல்லாஹுக்கோ அல்லாஹ்வின் அருமைத் தூதர் - முஸ்லிம்களின் உயிருக்கும் மேலான அண்ணல் - நபி(ஸல்) அவர்களுக்கோ உகந்த செயலாக முடியுமா? என்பது சிந்திக்கப்பட வேண்டியதாகும்.

மீலாது விழா அல்லாஹ்வுக்கு உகந்ததோ, நன்மைகளை விளைவிக்கக் கூடியதோ என்றால் அதை மார்க்கத்தை நமக்குக் காட்டித்தர வந்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்க மாட்டார்களா? அவ்வாறு அவர்கள் காட்டித் தராத ஒரு நன்மையான(?) காரியத்தை இன்று முஸ்லிம்கள் செய்கின்றனர் எனில் அதனை காட்டித் தர நபி(ஸல்) அவர்கள் மறந்து விட்டார்கள் அல்லது மறைத்து விட்டார்கள்(நவூது பில்லாஹ்) என்பது அல்லவா பொருள்? அல்லாஹ் பாதுகாப்பானாக.

து இறுதிப்பேருரையின் பொழுது அரஃபா மைதானத்தில் வைத்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்:

"கவனியுங்கள்! எனது தூதுத்துவப்பணியை உங்களுக்கு அறிவித்து விட்டேனா?" எனக் கேட்டபோது, "ஆம் அல்லாஹ்வின் தூதரே!" என ஒட்டு மொத்த நபித்தோழர்களும் பதில் கூறினர் (புகாரி).

இதனை சாட்சிப்படுத்திய நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகளுக்கு பதிலாக வல்ல ரஹ்மான்,
"இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்காகப் பூரணப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான (பொது) மார்க்கமாகவும் பொருந்திக் கொண்டேன்." (5:3) என்று தனது திருமறையில் வசனத்தை இறக்கி பதிலளித்தான்.
இது தெளிவாக, மார்க்கம் முழுமைபடுத்தப்பட்டு விட்டதை அறிவிக்கும் பொழுது, அவற்றில் அல்லாத புதிதாக ஒரு நன்மையைத் தரக்கூடிய செயலாக சேர்க்கும் எந்த ஒரு செயலும் நரகத்திற்குக் கொண்டு சேர்க்கும் என்பதை நன்றாக முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேலும் இவை மறுமையில் நஷ்டத்தை விளைவிக்கும்; அதே வேளையில் மீலாது விழாக்களின்போது நடத்தப்படும் ஊர்வலங்கள், இம்மையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் அதிகமாக்குகின்றன. மேலும் மற்றவர்கள் மத்தியில் முஸ்லிம்களைப் பற்றிய வெறுப்பும் இஸ்லாத்தைக் குறித்துத் தவறான கருத்தும் ஏற்படுவதற்குக் காரணியாக மீலாதுக் கொண்டாட்டங்கள்  அமைகின்றன.

மீலாது விழாக்களை வருடந்தோறும் நடத்தும் சிலர் அதற்கென சில காரணங்களை அடுக்குவதற்கும் தவறுவதில்லை. அதில் மிக முக்கியமானது, "நாங்கள் நபி(ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம், மகிமைப் படுத்துகின்றோம்" என்பதாகும்.

ஒருவரை உண்மையில் நேசிப்பது என்பது, அவரை பின்பற்றுவதன் மூலமும் புகழ்வதும் மகிமைப்படுத்துவதும் அவரின் கொள்கைகளை பரப்புவதன் மூலமுமே சாத்தியமாகும். அல்லாமல் தங்களது வாழ்வில் அவர் கூறிய எந்த விஷயத்தையும் பின்பற்றாமல் அவர் காட்டித் தந்த வழிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுவது மகிமைப்படுத்துவது ஆகாது; அவரின் புகழுக்கு அது களங்கம் விளைவிப்பதாக அமையும்.

இன்றும் அதுதான் நடைமுறையில் காணமுடிகின்றது. மீலாது விழா என்ற பெயரில் சிலர் செய்யும் அனாச்சாரங்கள், தவறுகள் மற்றவர்களை பாதிப்பதாக அமைவதோடு முஸ்லிமல்லாதோர் இதுதான் இஸ்லாம் எனக் கருதி இஸ்லாத்தையும் நபி(ஸல்) அவர்களையும் தூற்றும் நிலைக்கு செல்லும் நிலை உருவாகி உள்ளதை நாம் மறுக்க முடியாது. இதற்கும் விழாக் கொண்டாடுவோர் பதில் கூறக் கடமைப் பட்டுள்ளனர்.

இவ்விடத்தில் மற்றுமொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். மீலாது விழாக்கள் என்ற பெயரில் நடத்தப்படும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாத செயல்களின் மூலம் பல பிரதிபலன்களை அடைந்த பலர் அதனை எவ்விதத்திலாவது இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட செயல் என்பதாக நிறுவ முயல்கின்றனர். அதற்கு யூசுஃப் அல்கர்ளாவி அவர்கள் அளித்த ஒரு பதிலைத் தங்களுக்கு ஏற்றவாறு திரித்து மின்மடலாற்குழுமங்களில் பரிமாறிக்கொள்வதைச் சான்றாகக் காணலாம்.

மீலாது விழாக்களைக் குறித்து கேட்கப்பட்ட ஓர் கேள்விக்கு, "இன்று முஸ்லிம்களிடையே மறக்கடிக்கப்பட்டு வரும் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த பல்வேறு சம்பவங்கள், அவர்களின் உறுதி, சஹாபாக்களின் பற்று போன்றவை மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு நினைவுறுத்தப்பட வேண்டும்" என்று 21ஆம் நூற்றாண்டின் சிறந்த மார்க்க அறிஞராக உலக மார்க்க அறிஞர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்ட டாக்டர். யூசுஃப் அல் கர்ளாவி அவர்களின் பதிலை மௌலிது ஓதவும், மீலாது விழாக்கள் கொண்டாடவும் ஆதாரமாகப் பரப்புகின்றனர்.

ஆனால் அவரது பதிலிலேயே, "சுன்னத் வல் ஜமாஅத் மற்றும் ஷியாக்களில் சிலர் இந்நாட்களில் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாத பல்வேறு செயல்களைச் செய்கின்றனர். அவை இஸ்லாத்தில் எவ்விதத்திலும் அங்கீகரிக்கப்படாது" என்றும் தெளிவாகக் கூறியுள்ளதை வசதியாக இருட்டடிப்புச் செய்து விட்டு, தங்களுக்கு சாதகமான பகுதியை மட்டும் எடுத்துப் பரப்பித் திரிகின்றனர். எனவே இவற்றையும் முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் குறிப்பிட்டு நபி மொழிகளில் காணக்கிடைக்கும் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தினால் இன்றைய நாட்களில் மீலாத் பெயரில் நடக்கும் அனாச்சாரங்கள் அனைத்தும் கற்பனையானவை என்றும் அந்நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்பதும் தெளிவாகும்.

நபி(ஸல்) அவர்கள் பிரதி திங்கள் தோறும் நோன்பு நோற்கும் வழக்குமுடையோராக இருந்தார்கள். அதுபற்றி நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வினவிய போது: "அந்நாளில் நான் பிறந்தேன். அதில்தான் என் மீது (அல்குர்ஆன்) இறக்கப்பட்டது" எனப் பதில் கூறினார்கள். (முஸ்லிம்).
மார்க்கத்தில் நபி(ஸல்) அவர்களின் பிறந்தநாளாக உறுதியாகப் பதிவு செய்யப்பட்ட ஒரே ஆதாரம் திங்கள் கிழமை என்பது மட்டுமே. இந்நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று வல்ல ரஹ்மானுக்கு நன்றி செலுத்திக் காட்டியுள்ளார்கள். உண்மையிலேயே எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மீது உயிரை வைத்திருப்பவர்கள் செய்ய வேண்டியது, திங்கள் கிழமைகளில் நோன்பு நோற்பதாகும். இதுவே அவர்களை மகிமைப் படுத்துவதையும் அவர்களின் மீது அன்பு வைத்திருப்பதையும் வெளிப்படுத்தும்.

ஏமாற்றுபவன், பொய் பேசுபவன், பிறருக்குத் தீங்கிழைப்பவன், அநீதி இழைப்பவன், பிறரை தரக்குரைவாகக் கருதுபவன், ஏற்றத்தாழ்வு கற்பிப்பவன், மது அருந்துபவன், சூதாடுபவன், விபச்சாரம் செய்பவன், புறம் பேசுபவன், வட்டி வாங்குபவன், அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடக்காதவன், வீண் விரயம் செய்பவன், பித்அத் புரிபவன், பிரிவினையை ஏற்படுத்துபவன், நபிவழியைப் புறக்கணிப்பவன் ... என்று யாரையெல்லாம் அடையாளம் காட்டி அவர்கள் நம்மைச் சார்ந்தவனல்லன் என்றும் இன்னும் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைய முடியாது என்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்தார்களோ அத்தகைய தீயபழக்க வழக்கங்களை விடுத்து வாழ்வதே உண்மையில் நபி(ஸல்) அவர்களைப் புகழ்வதும் மகிமைப்படுத்துவதும் ஆகும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்களை முறையாகப் பின்பற்றி வாழ முனைவதே அவர்களை கண்ணியப்படுத்துவதும் அதுவே இறை பொருத்தத்திற்கு வழிவகுக்கக் கூடியதுமாகும் என்பதை உள்ளத்தில் பதித்து வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

ஆக்கம்: இப்னு முஹம்மத்(ஹனீஃப்)

22:16 | 0 comments | Read More