ஜோதிடம் பார்க்காதீர்

ஜோசியத்தைப் பற்றி சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது “அதனால் பயன் ஏதுமில்லை” என பதில் கூறினார்கள். “அவர்கள் கூறுவது எங்களிடம் சரியாகவும் உள்ளதே!” என்று கேட்டனர். அதற்குக் காரணம் (வானவர்கள் பேசியதை) ஜின்கள் ஒட்டுக்கேட்டு தமது தோழர்களின் காதுகளில் போடுவதாகும். அந்த செய்தியில் 100 பொய்களை சேர்த்து கூறிவிடுகின்றனர் என்று நபி(ஸல்) பதில் கூறினார்கள்.
ஆயிஷா (ரலி) : புகாரி, முஸ்லிம்
ஜோசியத்தைப் பற்றி சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது “அதனால் பயன் ஏதுமில்லை” என பதில் கூறினார்கள். “அவர்கள் கூறுவது எங்களிடம் சரியாகவும் உள்ளதே!” என்று கேட்டனர் …
இறைத்தூதர் அவர்களே! நாங்கள் (இஸ்லாத்தை தழுவும்முன்) அறியாமை காலத்தில் பல காரியங்களை செய்வோம். (அதில் ஒன்று) நாங்கள் ஜோசியரிடம் செல்வதும், (இது சரியான செயலா?) எனக்கேட்டேன். “நீங்கள் ஜோசியரிடம் செல்லாதீர்கள்” என நபி(ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள். நாங்கள் சகுனமும் பார்த்து வந்தோம். (இது சரியானதுதானா?) எனக் கேட்டேன். அதற்கு இது உள்ளத்தில் ஏற்படும் ஒரு (தவறான) விஷயமாகும். எனவே (எந்தச் செயல் செய்வதிலிருந்து) தடுத்துக் கொள்ளாதீர்கள் என நபி(ஸல்) பதில் கூறினார்கள். முஆவியா(ரலி) : முஸ்லிம்
மாதவிடாய் பெண்ணிடமோ அல்லது பெண்ணின் மலதுவாரத்திலோ, உடலுறவு கொண்டால், அல்லது ஜோசியனிடம் சென்று அவன் சொன்னதை ஏற்று நம்பி உண்மையாக கருதினால் அவன் முஹம்மதாகிய எனக்கு இறக்கப்பட்டதை (குர்ஆனை) மறுத்தவனாவான் என்று நபி(ஸல்) கூறினார்கள். அபூஹுரைரா(ரலி) : இப்னுமாஜா, அஹ்மத்
வருங்காலத்தை கணித்துக் கூறுபவனிடம் சென்று, எந்த ஒரு விஷயத்தையேனும் கேட்டால் அவனுடைய 40 நாள் இரவு தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது என்று நபி(ஸல்) கூறினார்கள். ஸஃபிய்யா(ரலி) : முஸ்லிம்
ஹுதைபா(ரலி) அவர்கள் ஒருவரின் கையில் ஜுரம் நீங்குவதற்காக கயிறு ஒன்று இருப்பதைக் கண்டு அதை அறுத்துவிட்டு பின்வரும் திருவசனத்தை ஓதிக்காண்பித்தார்கள்
மேலும் அவர்கள் இணைவைப்பர்களாக இருக்கிற நிலையிலல்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை. (அல்குர்ஆன் 12:106) நூல் : முஸ்னத் இப்னு அபீஹாதம்
நபி(ஸல்) அவர்கள் ஒருவரை அவர் கையில் பித்தளை வளையம் இருப்பதைக் கண்டு “இது என்ன?” என்று வினவினார்கள்” அதற்கு அம்மனிதர் வாஹினாவின்(கழுத்தில், கையில் உண்டாகும் நோய்) காரணமாக அணிந்துள்ளேன் என்று பதில் கூறினார். அது சமயம் நபி(ஸல்)அவர்கள் அவரை நோக்கி “நீர் இதைக் கழற்றிவிடும் இது உமக்கு பலஹீனத்தைத்தான் அதிகப்படுத்தும். இந்நிலைமையில் நீர் மரணித்தால் நிச்சயமாக நீர் வெற்றி பெறவே மாட்டீர்” என்று கூறினார்கள். இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) : முஸ்னத் அஹ்மத்
“ஜோதிடன் கூறுபவற்றை உண்மைப் படுத்துபவன் நபி(ஸல்) அவர்கள் மீது இறக்கி வைக்கப்ட்ட (வேதத்)தை நிராகரித்தவனாவான்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அபூஹுரைரா(ரலி) : அபூதாவூத்
மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. (அல்குர்ஆன் 22:73)..thanks..jaqh